Thursday, June 29, 2006

இலங்கைப் பிரச்சினை ஒரு கண்ணோட்டம் - 2

ஒரு சிறிய மாறுபாதை எடுக்க வேண்டியுள்ளது. காரண காரியங்களை பிறகு பார்க்கலாம்.

அமெரிக்காவின் சக்தி பற்றி நான் சொல்லியா இணையவாசிகளுக்குத் தெரியப் போகின்றது? இருப்பினும் ஈராக் என்னும் சுண்டைக்காய் நாட்டினை தனது கால் கட்டை விரலால் எளிதாக நசுக்கி இருக்கலாம்தான். என்ன செய்வது வியட்னாம்(நேம்) அனுபவம் அதைச் செய்ய விடவில்லை. ஆகவே இரண்டாம் பாலைவன யுத்தம் முதற் பாலைவன் யுத்தத்தைப் போலவே கன கச்சிதமாக தொடங்கியது. முதல் யுத்தத்திலிருந்த நேர்மை இப்போது இல்லாவிடினும் பொய்யின் மீது கட்டமைக்கப்பட்டாலும் (பேரழிவு ஆயுதங்களை சதாம் ஹூசைன் வைத்திருக்கின்றார் என்ற ஜூனியர் புஷ்ஷின் வாதம்) இரண்டாவது யுத்தமும் தனது துல்லியங்களை தவறவில்லை.

இந்த யுத்தத்தில் பயன்படுத்தப்பட்டவை யாவை?

விமான ரகங்கள்:

B-1B
B-2
B-52

F-14B
F-15E
F-16
F/A-18
F-117
AV-8B
A-10

AH-1W
AH-64D
CH-46E
CH-53E

MH-47
MH-60

AC-130U
EC-130
MC-130

E-2C
E-3 AWACS
E-8 JSTARS
P-3 Orion
RC-135
RQ-1 Predator
RQ-4 Global Hawk
U-2

C-2
C-5
C-17
C-130
KC-130
KC-135

EA-6B
S-3B
SH-60F
HH-60H


தரையில்:

M1 MBT
M2 BFV

M109A6

AAVP 7A1

LAV

M777 LW155

FBCB2

தளவாடங்கள்:

AGM-86C/D CALCM
AGM-142 HAVE NAP
BGM-109 Tomahawk

BLU-82 Daisy-Cutter
BLU-118 Thermobaric
CBU-87 CEM
CBU-103 WCMD

GBU-10 Paveway II
GBU-12 Paveway II
GBU-16 Paveway II
GBU-27 Have Void
GBU-28 Bunker-buster

GBU-29 JDAM
GBU-30 JDAM
GBU-31 JDAM
GBU-32 JDAM
GBU-37 Bunker-buster

MK-81 GP
MK-82 GP
MK-83 GP

Javelin
M220 TOW


கப்பல்கள்

CV-63 Kitty Hawk
CV-67 John F. Kennedy
CVN-65 Enterprise
CVN-68 Nimitz


CG-47 Ticonderoga
DD-963 Spruance
DDG-51 Arleigh Burke
FFG-7 Oliver Hazard Perry

SSN-688 Los Angeles

LCC-19 Blue Ridge

LHA-1 Tarawa
LHD-1 Wasp

LSD-41 Whidbey Island
LPD-4 Austin

AGF-3 La Salle
AGF-11 Coronado

AOE-1 Sacramento

MCM-1 Avenger
MHC-51 Osprey

இவையெல்லாம் என்னென்ன செய்ய முடியும்? அழிவு சக்திகள் அனைத்தையும். மொத்த குத்தகைக்கு எடுத்து முழுதுமாக செய்து முடிக்கும்.

பங்கர் பஸ்டர்ஸ் "Global Positioning System Aided Munition (GAM) [GBU-36/B & GBU-37/B]]" என்பார்கள். அது சரி இது இரண்டாயிரமாவது ஆண்டு. இதற்கும் இலங்கைக்கும் என்ன சம்பந்தம் என்கின்றீர்களா? வருகின்றேன்.

மேலும் விரியும்....

Wednesday, June 28, 2006

இலங்கைப் பிரச்சினை ஒரு கண்ணோட்டம் - 1

அண்டன் பாலசிங்கம் NDTV செவ்வியில் கூறிய வாசகங்கள் ஊடகங்களைக் கலக்கிக் கொண்டிருக்கும் நேரத்தில், தமிழ் வலைப்பதிவர்களும் விதி விலக்கின்றி தமது கருத்துகளை முன் வைப்பது ஆரோக்கியமானதே. ஸ்ரீகாந்த் மீனாட்சி , தமிழ் சசி, ஆகியோரின் பதிவுகளும், அதன் பின்னூட்டங்களும் என்னை முக்கியமாக ஈர்த்தன. பாருங்கள்... கச்சத்தீவு பற்றி விவாதம் ரோஸாவசந்தோடு காரசாரமாக நடந்தபோது "முட்டம் மீனவராய்" மீண்டு இப்போது தெரியும் திரு. சிறில் அலெக்ஸ் அப்பொது எங்கே போனாரென்று தெரியவில்லை. ஆனால் தனது நடுநிலைமையை ஸ்ரீகாந்த் பின்னூட்டத்தில் நிறுவிக் கொண்டார். அது சரி... வந்தியத்தேவன் பதிவுகளை நான் படிப்பதில்லை என்று கூறி எளிதாகத் தப்பிக்க நானே வழியும் சிறிலுக்குக்(ம்) கூறுவேன்.

ரோசாவஸந்த், பெயரிலி போன்றோரின் இச்செய்தி குறித்த பின்னூட்டங்களைப் பார்த்த பிறகு ஏற்கெனவே புசித்தவற்றை "ஏவ்" என்று உருண்டையாய் எழுப்பி, வயிற்றிலிருந்து வாய்க்கு வரவழைத்து கால்நடையாய் அசைபோடலமென்ற எண்ணமே பிரதானமாகிப் போய்விட்டது.

நிற்க.

முதற்கேள்வி: திரு. ரோஸாவசந்த் அவர்களே... நீங்கள் விடுதலைப் புலிகளை ஆதரிக்கின்றீர்களா? இல்லை எதிர்க்கின்றீர்களா? சுற்றி வளைத்து தெருவடைக்க மார்'கழி'க் கோலமிடாமல், "இருபுள்ளி ஒரு கோடு" போடுங்கள்.

பாலசிங்கத்தின் பேட்டி குறித்து பல்வேறு இணையதளங்களை அலசி ஆராய்ந்ததில் எனக்கு விளங்கியது ஒன்றே ஒன்றுதான். "Regret" என்பதை தமிழில் "மன்னிப்பு" என்று மொழிபெயர்ப்பார்கள் என்று. ராஜீவ் காந்தியின் படுகொலை ஒரு "துன்பியல் சம்பவம்" என்றாகி, இன்று "இமாலயத் தவறு" என்று உருமாறி, அதற்காக "வருத்தமடைவதாக"த்தான் நான் NDTV இணையதளத்தின் ஆங்கிலப் பதிவினைப் படித்ததும் உணர்ந்தேன். இந்தியத் தமிழ் இணைய ஊடகங்களில் (விகடன் உள்பட) புலிகள் மன்னிப்புக் கோரினார்கள் என்று வருகின்றது. இதற்கு புலிகளின் விளக்கம் (என் போன்ற புரிதலுடன்) இந்து இணையதளத்தில் வெளியாகின்றது. புலிகளின் தயா மாஸ்டர் (Daya Master) இலங்கை இராணுவ அமைச்சகத்தின் பேச்சாளியான கெஹேலியா ரம்புவெல்லாவின் (Keheliya Rambukwella) கூற்றினை, இதே இந்தியத் தமிழ் ஊடகங்களின் திரிப்பு போலவே பாவிக்கின்றார்.

எனவே புலிகள் ராஜீவ் காந்தியின் கொலைக்கு மன்னிப்புக் கேட்கவில்லை என்பது திண்ணம்.

ஆனால் மன்னிப்புக் கேட்டது போல நமது வலைப்பதிவர்கள் அவர்களுக்கு ஆதரவாகவும், எதிராகவும் (புலிகளின் ஸ்டண்ட் இதுவென்று) கருத்து தெரிவிப்பதும் விந்தையாக உள்ளது.

சரி மன்னிப்புக் கேட்டார்களென்றே வைத்துக் கொள்வோம்.

1,200 இந்திய அமைதிப்படையினர் இலங்கை மண்ணிலே மாண்டனரே... அதற்காகவா அண்டன் பாலசிங்கம் புலிகள் சார்பாக மன்னிப்புக் கோரினார்? அப்படியென்றால் இந்திய அமைதிப்படை இலங்கையில் செய்த (ஏகோபித்த தமிழ் வலைப்பதிவர்கள் எண்ணுவது போல, எழுதுவது போல) அட்டூழியங்களுக்காக இந்தியப் பிரதமரை மன்னிப்புக் கூற கோரலாம். ஆனால் நடந்ததாய் சொல்லி இன்று நடப்பதென்ன?

இந்திய அமைதிப்படை நடத்திய அட்டூழியங்களுக்காக, அப்படையினை அனுப்பிய, அப்போது இந்தியப் பிரதமராயிருந்த (மீண்டும் வரவிருப்பதாய் தேர்தல் கணிப்புகள் கூறும் காலக்கட்டத்தே) மனித வெடிகுண்டால் "யாரோ" போட்டுத் தள்ளினனார்களாம். அதற்கு இப்போது "யாரோ" "ஆழ்ந்த வருத்தம்" தெரிவிக்கின்றார்களாம். அதனால் உடனடியாக இந்தியப் பிரதமர் IPKF அட்டூழியங்களுக்கு மன்னிப்புத் தெரிவிக்க வேண்டுமாம். ஆஹா ஆஹா ஆஹா... எண்ண எண்ண இனிக்கிறதா?

இதில் தமிழ் சசியின் எழுத்துக்கு எல்லோரும் பிச்சை வாங்க வேண்டும். அவரது மொழியில் "ராஜீவ் படுகொலை : பாலசிங்கத்தின் மன்னிப்பு" என்ற தலைப்புடன் தொடங்கி, "இராஜீவ் படுகொலை ஒரு "துன்பியல்" சம்பவம் என்ற ஒற்றை வார்த்தைக்குப் பிறகு புலிகளின் தலைமையிடம் இருந்து வந்திருக்கும் முக்கியமான ஒப்புதல் வாக்குமூலம் மற்றும் மன்னிப்பு கேட்கும் நிகழ்வாக பாலசிங்கத்தின் பேட்டி இருக்கிறது. இந்த "மன்னிப்போ", இந்தியாவை நோக்கிய புலிகளின் நட்பு ரீதியான அணுகுமுறையோ இந்தியாவின் நிலையில் எந்த மாற்றத்தையும் தற்பொழுது ஏற்படுத்தப் போவதில்லை." என்று முதல் பத்தியில் தனது தாளாத நடுநிலைமையை முன்னிலைப்படுத்துகின்றார்.

Regret என்ற ஆங்கிலப்பதத்தின் அர்த்தம் அறியாதவரா தமிழ் சசி? என்ன செய்வது நடுநிலைமைப் பித்து பிடித்தாட்டினால் இப்படித்தான். இன்னொன்று முக்கியமானது. நடுநிலைமை பேசும் போது நோக்கங்கங்களை சாமர்த்தியமாக பேக்கேஜ் செய்து "இந்தியா" என்று தலைப்பிட்டு விற்க வேண்டும். தமிழ் சசி சாமர்த்தியமான பேக்கர் (Packer) மட்டுமல்ல. மூவர் (Mover) கூட...

ஸ்ரீகாந்த் கருத்துகளில் சிலவற்றில் நான் ஒத்துப் போகின்றேன். ஆனால் ரோஸா பின்னூட்டம்படி "இந்த பதிவு நல்லதொரு நகைச்சுவை என்றாலும் ரொம்ப யதார்த்தமானது". யதார்த்தமானது ஏன் நகைச்சுவையாக இருக்கக்கூடாது என்ற கேள்வியை பிறிதொரு சமயம் அவர் முன் வைக்க எண்ணம்.

இதுவரை வெறும் "உறுப்புகள்" நுழைத்தல் மட்டுமே பேசிய ரோஸா இப்போது (இந்தியா) "மொத்த உடலையும்" நுழைப்பது பற்றி பேசுவது பரிணாம வளர்ச்சியே. இவருக்கு "நுழைத்தல்" மட்டும்தான் தெரியுமோ என்று நான் வியப்பது வேறு விஷயம். மற்றபடி இவரது தர்க்கம் பற்றி இணையமறியும்.

ஜப்பான் அன்றைய உலக யுத்தத்தில் ஏனைய நாடுகள் மேல் செய்த அராஜகத்துக்கு இன்றைக்கு மன்னிப்பு கேட்கின்றது.

ஆனால் இந்தியாவோ "அமைதி"ப்படையை இலங்கைக்கு அனுப்பியது. அங்கே யுத்தம் செய்யவா அனுப்பினார்கள்?

மேலும் ரோஸாவின் கொதிப்பு "வடகிழக்கில் செய்த அட்டூழியங்களுக்கு, அதற்கு எதிரான மக்கள் எதிர்ப்பிற்கு முன்பு மெல்லிய மன்னிப்பு கேட்கும் பண்பாவது இந்திய அரசிற்கு இருக்குமா? விசாரணை தண்டனை என்றெல்லாம் ஒரு வார்த்தையே இல்லை என்று வைத்து கொள்ளலாம்.
வடகிழக்கில் தீவிரவாதிகள் இருப்பதால் பிரசனையா? சரி, கேரளாவில், கலிங்கா நகரில், கங்காவரத்தில் கொல்லப்பட்ட எந்த ஆயுதமும் அதிகாரமும் இல்லாத ஆதிவாசிகள் மீதான கொலைக்கு அரசின் ஏதாவது பிரதிநிதி மன்னிப்ப்பு கேட்பாரா? "

ஆஹா கேட்போம் கேட்போம் கேட்போம்... ஹலோ என்ன "Regret" என்று பல வருடங்கள் கழித்து வலிநிவாரணி விளம்பரம் போல் 'போயே போச்சு'... 'போயிந்தே'... 'It's Gone'. சொல்வோம் சொல்வோம் சொல்வோம்...

ஆனால் என்ன செய்வது "மறக்கவோ மன்னிக்கவோ முடியாது" என்று கவிதை பாடுவார் சிலர்... சில (வோல்கார்) அமைப்புகள்...

ஒன்று மட்டும் கூறிக்கொள்வேன் திரு.ரோஸாவசந்திற்கு. கொஞ்சம் ஆங்கில அடைமொழிகளில் எனக்கும் திட்டத் தெரியும்.

அதற்காக தர்க்கம் செய்யக்கூடாதென்ற அர்த்தமில்லை. கச்சை கட்டி களத்திலிறங்கலாம்.

மேலும் விரியும்....