Wednesday, March 14, 2007

ஒரு மலரின் பயணம்

பிறந்தது நந்தவனமில்லை
நஞ்சையோ புஞ்சையுமில்லை
வெறும் புறம்போக்குதான்
பாக்டெம்பாஸ் எசமான்
பாக்கெட்டிற்கு பத்தாது
எருமைச்சாணம்தான் என்றாவது

மலரென்பார் எம்மை
மலரவிடார் என்றும்
மொட்டுக்குத்தான் மார்க்கெட்டாம்
முதலிரவில் முழுவுடலை
மொக்கவிழ்க்கும் கட்டாய
பதைபதைப்பு தினம்தினம்

சூ(ட்)டு நாயகர் கையில்
கிடைக்கும் முன்னரே
கிட்டத்தட்ட ம(அ)லர்ந்திருப்பேன்
என்விதி எப்படியோ?
கூவக்கரையில் பிறந்துவிட்டு
கொசுக்களுக்கா கூவுவது?

பாடைகட்ட நேரமில்லை
வெட்டியானுக்கும் வேலையில்லை
மாருதிவேனிலொரு இறுதிப்பயணம்
அய்யோ தெரியவுமில்லை
கரண்டு அடுப்பு
ஷாக் அடிக்குமோ?

சாவில்சங்கு சரிதான்
ஆரவாரமேன் மானிடா?
பிய்த்தெறிந்த மாலையிலிருந்து யோசித்தேன்
பிய்ந்தொட்டிய என்னிதழொன்றை
உதறினாள் மாதொருத்தி
வெறுப்புடன் ஏனோ?

பூவையினி பூச்சூடாளென
சட்டாம்பிள்ளை சமூகமீதான
இழந்தவளின் எரிச்சலோ?
சோறானால் வாய்க்குணவாய்
சோரமில்லை ஆனால்
வாய்க்கரிசியாய் வாய்த்தேனோ?

விதி வகுப்பேன்
இப்பூக்கள் இனிமேலும்
இறுதிப் பயணத்துக்கல்ல
சக்கரமொன்று மேலேற...
எஞ்சிய இதழ்களும்
எங்கேயோ சிதறின...

Sunday, November 12, 2006

கிழிந்தது தமிழ் பார்டெண்டரின் முகமூடி

அக்டோபர் 15 திருவாளர் பார்டெண்டர் அவர்கள் தனது பீர்வாய் மலர்ந்தருளியது இதுதான்:

//முகமூடி போட்டுக் கொண்டு சமூகத்தை நாசமாக்கும் முகமூடி திருடர்களின் காலம் நிலைப்பதில்லை. முகமூடிக்கள் ஒளிந்து ஒளிந்து தான் வாழ வேண்டும். முகங்களை மறைத்து தான் சமூகத்தை நாசமாக்க வேண்டும். சமூகம் விழித்துக் கொள்ளும் பொழுது முகமூடிகள் கிழிக்கப்படும். எல்லா சமூகங்களிலும் இது தான் தெளிவான உண்மை.//

இதைவிட மிகத் தெளிவாக யாரும் "விளக்கி" விட முடியாது.

ஆம். இன்று சமூகம் விழித்துக் கொண்டது.

இனிமேலும் பார்டெண்டர் ஒளிந்து இளிந்து வாழ வேண்டிய அவசியம் இருக்காது.
ஆமாம் யார் இந்தத் தமிழ் பார்டெண்டர்? மாலை நேரத்து மஞ்சள் பத்திரிக்கையின் கிளுகிளுப்போடு ஆனால் சரோஜாதேவியையும் மிஞ்சக் கூடிய அளவுக்குக் குளுகுளுவென்று எழுதுகின்ற இணையப் பொறுக்கியா இவர்?

பார்டெண்டரின் பதிவிலிருந்து:

//ஈஸ்ட் கோஸ்ட் ரோட்டில் பைக் வழுக்கி கொண்டு ஓட, என்னுடன் இன்னும் நெருங்கி கொண்டு உட்கார்ந்தாள் திவ்யா.

என் முதுகில் ஏதோ ஒன்று குத்தியதை ரசித்துக் கொண்டே "திவ்யா நான் பெட்ரோல் டாங்க் மேல உட்கார்ந்திருக்கேன்" என்றேன்
.//

பெண்களைப் போகப் பொருளாக நினைக்கிற சனாதன ஆணாதிக்கவாதியான இவர் ஒரிஜினல் பெயரில் முற்போக்கு முகமூதியாக அலைகிறார்.

இவரின் முற்போக்கு வேடத்தில் மயங்கிய நண்பர்களுள் பத்மா அரவிந்த்தும் அடங்குவார். இவரின் முகமூதி இன்று கிழிந்ததும் அவர் முகத்தில் பத்மா போன்றோர் காறி உமிழ்வார்களா?

அதுமட்டுமா? இந்த பார்டெண்டர் முகமூதியை முற்போக்கு ஜல்லி என்று நினைத்துக் கொண்டு ரோசாவசந்த் போன்றவர், இந்த ஜந்து சொந்த மூஞ்சியில் எழுதுவதை மதித்துப் பதில் சொல்லிக் கொண்டும் இருக்கிறார்கள். ஆனால் இவரோ ஒரு வன்னிய ஜாதி வெறியர். வெளிப்பார்வைக்கு முற்போக்கு வேஷம் போட்டுக் கொண்டு, நிஜமுகத்துடன் பார்டெண்டரக வந்து ரோசாவசந்த் குறியறுப்பதாகச் சொல்லிக் கிண்டல் செய்கிற கீழ்த்தரமானவர். வெளியே வன்னியரும் தலித்துகளும் கை கோர்க்க வெண்டுமென்று கூறி விட்டு பார்டெண்டராக திருமாவையும், தலித்துகளை ஆதரிப்பவர்களான ரோஸா போன்றோரை கிண்டல் செய்வார்.

இந்த முகமூதி நிஜப் பெயரில் எழுதியபோது அவரை வலைப்பதிவுக்கு அறிமுகப்படுத்திப் பாராட்டியவர்களில் பத்ரியும் ஒருவர். பத்ரி இவரைப் பற்றிச் சொன்ன பின்னர்தான் இவரைப் பற்றி பலருக்குத் தெரிய வந்தது.

ஆனாலும் இந்த வக்கிரம் பிடித்த ஜாதி வெறியருக்குப் பத்ரி மீதும் கூட கோபம். மேற்குப் பதிப்பகம் என்ற பெயரில் இவர் எழுதிய பதிவைப் படித்தவர்கள் பத்ரி மீது இந்த நாய்க்கு அப்படி என்ன கோபம் இருக்கும்... ஏன் இப்படிக் குரைக்கிறது என்று ஆச்சரியப்பட்டிருப்பார்கள்.

முற்போக்கு நாயாக ஒரிஜினல் பெயரில் பத்ரி போன்றோரிடம் சுமூகமாக வாலாட்ட வேண்டியது; ஜாதி வெறி நாயாக பார்டெண்டரில் குரைக்க வேண்டியது.

இவர் கொள்கைகளுடன் ஒத்துப் போகாதவர்களான நான், முகமூடி, பி.கே.எஸ். என்று இவர் திட்டுவதைக் கூடப் புரிந்து கொள்ள முடியும். எல்லாருக்கும் சொம்பு அடிக்கிற நல்லவரான பாஸ்டன் பாலாஜியையும், ஜெயிக்கும் கட்சியில் ஐக்கியமாகும் அப்பாவி(!) ஐகாரஸ் பிரகாசையும், முற்போக்கு வலைப்பதிவர் என்பதை வெற்றிகரமாகத் தொடர்ந்து கொண்டு வரும் பத்ரியையும் இவர் எதிர்க்க இவருடைய வன்னிய ஜாதிவெறி தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும்?

பத்ரியிடம் மட்டுமா? தேன்கூடு தமிழோவியம் ஆகியவையுடனும் இந்த பார்டெண்டருக்குக் காழ்ப்புதான். ஆனால், சொந்தப் பெயரில் அதே தமிழோவியத்தில் தொடர் எழுதிய புனிதப் பசுதான் அவர். இன்றுவரை அதே தமிழோவியம் தேன்கூடு ஆகியவற்றின் பொறுப்பாளர்களில் ஒருவரான பாஸ்டன் பாலாஜியுடன் நெருக்கமான நட்பையும் வைத்திருப்பவர். முதுகுக்குப் பின்னால் குத்துகிற, பயன்பெற்ற பின்னே கூட்டணியை மாற்றிக் கொள்கிற தர்மத்தை, இவர் இவடர்கு அரசியல் ஆசானான மாலடிமை ராமதாசிடம் கற்றுக் கொண்டாரோ?

ரஜினி ராம்கியுடன் கருத்து மாறுபடுபவர்கள் இருக்கலாம். ஆனால் பாகுபாடு பார்க்காத, அனைவருக்கும் நண்பர் அவர். மிகவும் சாந்தமானவர். சுனாமியின்போது சுழன்று சுழன்று உதவி அனைவரின் மதிப்பையும் பெற்றவர். அவரை பார்டெண்டர் தாக்கக் காரணம் என்ன? இரண்டே இரண்டு காரணங்கள்தான். ஒன்று, ராம்கி ரஜினி ரசிகர். ரஜினிக்கும் வன்னிய ஜாதிக் கட்சியான பா.ம.க.வுக்கும் பாபா பட ரிலீஸிலிருந்து இருக்கிற உரசல் உலகம் அறிந்தது. இரண்டு, ராம்கி, உலகநாடுகளால் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான விடுதலைப் புலிகளன் எதிர்ப்பாளர். பார்டெண்டர் விடுதலைப் புலிகளைக் கொள்கை ரீதியாகத், மனதார ஆதரிக்கவில்லை. அவர் ஜாதித் தலைவர் ராமதாஸ் சொல்வதால் ஆதரிக்கின்றார். நாளைக்கே ராமதாஸ் வழக்கம்போல அதிலும் பல்டி அடித்தால், பார்டெண்டரும் அடிப்பார் அடுத்த பல்டி. இந்த இரண்டு காரணங்களுக்காகவே ரஜினி ராம்கியைத் தொடர்ந்து தாக்கி வருகின்றார் பார்டெண்டர்.

அடடா, என்ன சஸ்பென்ஸ் வளர்கின்றதா? யார் இந்த பார்டெண்டர் என்று அறிய ஆவலாக இருக்கிறதா?

சொந்தப் பெயரில் எழுதும்போது இந்தப் பார்டெண்டர் என்ன சொல்லிக் கொள்வார் தெரியுமா? தான் வலைப்பதிவு மட்டுமே எழுதுவதாகவும், எந்த அணியிலும் இல்லை என்றும், வலைப்பதிவு அரசியலில் ஆர்வம் இல்லை என்றும் அதில் பங்கேற்றது இல்லை என்றும் தன்னைத் தானே நக்கிக் கொள்வார். அந்தப் புனித பிம்பமான தமிழ்சசிதான் தமிழ்பார்டெண்டர்.

அட பேர் வைக்கிறது கூட உஷாரா வைக்கத் தெரியாத கபோதியா நீர்? தமிழ்சசியிலும் தமிழ் இருக்கிறது, தமிழ் பார்டெண்டரிலும் தமிழ் இருக்கிறது. இப்படியா அசட்டுத்தனமாக சந்தேகத்தை விதைக்கும் வண்ணமும், அதன்மூலம் பிடிபடும் வண்ணமும் பேர் வைத்துக் கொள்வது முட்டாளே!

இருங்கள். படம் இன்னும் முடியவில்லை. இந்தப் புனித பிம்பமான தமிழ்சசியை எப்படி வன்னிய ஜாதி வெறியர் என்று சொல்ல முடியும் என்று கேட்பீர்களே? மாலடிமையின் இந்த மலவருடிதான் வீரவன்னியன் என்ற பெயரில் ராமதாஸின் புகைப்படத்தையும் பா.ம.க.வின் லோகோவையும் போட்டு விடுதலைப் புலிகளுக்க்கு ஆதரவாகவும், வன்னிய ஜாதிக்கு ஆதரவாகவும், அவர்களைக் கொள்கை ரீதியாக எதிர்ப்பவர்களை மோசமாகத் தாக்கியும் வலைப்பதிவு நடத்துபவர். தமிழ் சசி சொந்தப் பெயரில் எழுதிய பதிவுகளைப் படியுங்கள். வீர வன்னியன் மற்றும் பார்டெண்டர் ஆகிய பெயர்களில் எழுதிய பதிவுகளைப் படியுங்கள். புனித பிம்பமாகத் தன்னைக் காட்டிக் கொண்டு எவ்வளவு கீழ்த்தரமான மனநிலையுடன் வலைப்பதிவுலகை ஏமாற்றி வந்திருக்கிறார் என்று அறிய முடியும்.

தமிழ்சசி என்கிற தமிழ்பார்டெண்டர் என்கிற வீரவன்னியன் பின்வரும் IP முகவரியிலிருந்து செயல்பட்டு என்னிடம் கையும் களவுமாகப் பிடிபட்டிருக்கிறார். அதற்கான அசைக்க முடியாத ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. அதனால் இந்தப் பதிவு அவதூறானது என்று அவர் கருதினால் அவர் என் மீது தாராளமாக சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கலாம்.

தமிழ்சசி என்கிற தமிழ் பார்டெண்டர் என்கிற வீரவன்னியனின் IP: 68.36.236.123. Comcast.net'ன் இணைய இணைப்பைப் பயன்படுத்துகிறார். அதுவும்கூட Static IP போலிருக்கிறது. எப்போதும் இது மாறுவதேயில்லை. தமிழ்சசிதான் Dynamic'காக வீரவன்னியன், தமிழ் பார்டெண்டர் என்று பட்டையைக் கிளப்பிய போதிலும் IP மட்டும் ஸ்டேடிக்காக இருப்பது வினோதமே...

ஐம்பது பதிவுகளுக்குப் பின்னர் தன்னை அடையாளம் காட்டுகின்றேன் என்று கூறிய பார்டெண்டர் எனக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கின்றார். இந்த முகமூடி கிழிந்தால் என்ன என்று வேறு வேடத்திலும் நாளைக்கு வந்து பீர் இட்லியையும், ஸ்கூரூ டிரைவரையும் கலந்து பரிமாறலாம். இந்த வேடத்தைக் கலைத்த குற்றத்திற்காக அவரது நாயகியான திவ்யாவிடம் மன்னிப்புக் கேட்பதோடு அடுத்தமுறையாவது இப்படிப்பட்ட அல்லக்கைகளிடம் மாட்டிக் கொள்ளக் கூடாதென்றும் வெண்டிக் கொள்கின்றேன்.

முத்தாய்ப்பாக மீண்டும் பீர்டெண்டர் உளறியது:

//அடிப்படைவாதம்,தீவிரவாதம்,பயங்கரவாதம் என்று அரசியல்,சமூக,இலக்கியங்களில் நிலவும் அத்தனை நடப்புக்கும் ஒவ்வொரு பெயர் சொல்லுறாங்களே ஈதெல்லாம் என்னவாக இருக்கும் என்று பூராய ஆரம்பிக்காமல் தமிழனின் ஆதிமூல சரக்கை நவீனப்படுத்தி, அதற்குள் இந்த முகமூடிகளின் வேடத்தை கிழிக்க தொடங்கிய பதிவு தான் - தமிழ் பார்டெண்டர் பதிவு. பார்டெண்டர் அனைவரையும் இழுக்கும் வேடம்

முகமூடிக்களுக்கும் முடிவு இல்லை. பார்டெண்டருக்கும் முடிவு இல்லை//

Good Bye Bartender !!! Your Innings is OVER !!! See Ya in ECR later !!!

வலைப்பதிவு வாசகர்களே, தமிழ் சசியும் அவர் ஆதரிக்கிற திராவிடம், விடுதலைப் புலிகள், ஜாதி கட்சிகளை ஆதரிக்கிறவர்களும் அவர்களுடன் உடன்படாதவர்களைப் புனித பிம்பம் என்றும், அனானியாக வந்துத் தாக்குகிறார்கள் என்றும், மேலும் அபாண்டமாகவும் குற்றம் சாட்டி வருகிறார்கள். ஆனால், இதுவரை இப்படிப் போலிப் பெயர்களில் அடுத்தவர்களைப் பற்றி மோசமாகவும் கீழ்த்தரமாகவும் எழுதி மாட்டிக் கொண்டவர்கள் அனைவரும் இந்த அணியைச் சார்ந்தவர்களே. தமிழ்சசி போன்றோரைப் புனித பிம்பமாக நினைத்துப் பழகிவந்த அவரது முற்போக்கு நண்பர்களும், நண்பிகளும் அவரைச் செருப்பால் அடித்துத் தங்கள் நேர்மையை நிலைநாட்டுவதைக் காண ஆவலாக இருக்கின்றேன். இப்போது ஆதிக்க சக்தி/ ஜாதி வெறியன் யாரென்று படிக்கும் வாசகர்களுக்கே விட்டு விடுகின்றேன்.

அடுத்து இணையத்தில் துப்பறியும் ஒருவரைப் பற்றி சமயம் கிட்டும் போது பார்ப்போமா?

Friday, September 01, 2006

ஊடக ஊழல்கள்

பெயரிலியின் பதிவுகளைப் பயன்படுத்துதல் பதிவினைப் படிக்க நேர்ந்தது மிகவும் யதேச்சையாய். மறு கழிவாய் நானும் கழிய வேண்டுமா என்று மிகவும் யோசித்த பின்னர், நாளை மலச்சிக்கல் வராமலிருக்க கழிந்து விடலாமென்று முடிவெடுத்ததால் விளைந்தது இப்பதிவு.

வர வர யார் யார் ஊடக நீதிகளை, நியதிகளைப் பற்றி விசனப்படுவதென்ற விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது. இருப்பினும் "Catch Me If You Can" படம்தான் ஞாபகத்திற்கு வருகின்றது. பலவிதங்களில் ப்ராடு செய்தவனே, பின்னாளில் ப்ராடை ஒழிக்க உதவுவது போல் இன்று பெயரிலி கதைக்கின்றார். ஆனால் அத்திரைப்படத்திலாவது ப்ராடு செய்பவன் திருந்தி ப்ராடை ஒழிக்கப் போராடுகின்றான். ஆனால் பாவம் பெயரிலியோ? எத்தனை தசாவதாரமெடுத்தாலும் திருந்தப் போவதில்லை என்று கங்கணமென்ற கச்சையை என்றைக்கும் அவிழ்க்கவே போவதில்லை.

பொய், புரட்டு, பித்தலாட்டம் இவற்றின் மொத்த உருவமே பெயரிலி. எனவே அவரிடமிருந்து எந்த நீதியையோ, நியாயத்தையோ எதிர்பார்க்க முடியாது. இருப்பினும் எனது மலச்சிக்கலை நீக்கவே இப்பதிவென்று வாசகர்க்கு அறியத் தருகின்றேன்.

வார்த்தைக்கு வார்த்தை அனல் கக்கும் கனவானாய் அறியப்பட்ட பெயரிலி, இன்று நாலாந்தர ஏட்டில் வரும், பொல்லாத கிசுகிசுவாய் பதிடும் நிலைக்கு தள்ளப்பட்ட பெயரிலி என்கின்ற ரமணீதரன் கந்தையாவை நினைத்தால் எனக்கு பரிதாபம்தான் வருகின்றது. இதனால்தானே பாவம் அடங்கியிருப்பவனை மேலும் அழுத்தக் கூடாதென்று என்வழியில் நான் போனாலும், பெயரிலி (புலி?) வால் பிடித்த கதையாகிப் போனது மீண்டும்.

வீரமணி என்பவர் தனது வலைப்பதிவில் புலிகளுக்கு எதிராக தனது கருத்துகளை பதிந்து வருகின்றார். இதில் Federation of Tamil Sangams of North America (FeTNA) குறித்து பல பதிவுகள் வந்திருக்கின்றது. முக்கியமாய் நாச்சிமுத்து சாக்ரட்டீஸ் உள்ளிட்ட பலர் FBI'யால் சமீபத்தில் கைது செய்தது குறித்து அமெரிக்க ஊடகங்களில் வந்தவை. குறிப்பாக டேன்னி டேவிஸ் என்னும் காங்கிரஸ்மேன் வன்னிக்கு சுற்றுலா சென்ற பதிவு. மற்றும் அதில் வந்த பின்னூட்டங்கள்:

1. American Born Clear Tamil
2. அனானி

அதே நேரத்தில் போன வாரத்தில் பிகேபி'ஐ ஸ்டாராக அறிவித்த முகமூடி, இவ்வார ஸ்டாராக தனது வலைப்பதிவில் வீரமணியின் லிங்க்கைக் கொடுக்கின்றார்.

உடனே வியர்த்துவிட்டது பெயரிலிக்கு. வீரமணி யாரென்ற தனது "உளவு"ச் செய்திகளை கிசுகிசு பதிவாகப் போட்டு களிப்படைகின்றார். நெஞ்சில் உரமும், நேர்மைத் திறமும்' இருந்தால் வஞ்சனையாய், வாய்ச் சொல் வீரராய் இன்று இருக்க வேண்டாமே பெயரிலி! கிரேக்கத் தத்துவஞானிக்கு ஆதரவென்று பப்ளிக்காய் படம் கூடக் காட்டத் தெரியாத உங்களின் கிசுகிசு வீரம் என்னைப் புல்லரிக்க வைக்கின்றது. "பாடுங்கள் என் கல்லறையில் அவனொரு பைத்தியக்காரென்று" என்ற அடிப்படை வீரம் கூடவா மக்கு அற்றுப் போயிற்று? வேதனை வேதனை.

அதென்ன மூன்று பேர் இரண்டு பதிவுகள் போடுவார்கள் என்று ஆருடம்? வேலியில் போகும் ஓணானை எடுத்து லங்கோட்டில் விட்டுக் கொள்கின்றேன் பாருங்கள்; இப்போது அது என்னை குடையுமென்று. களிப்படையுமையா உமது ஆருடம் பலித்ததென்று.

இந்தியன் பிள்ளை கொடுக்கும் போர்ஸ் என்று IPKF'வை வருணித்தீர்களே? மறந்தா போயிற்று? உங்களைப் போன்ற உன்மத்தர்களை, உலுத்தர்களை உலகிற்கு உரித்துக்காட்ட எனக்கு முக்காடு தேவையில்லை மூடரே... 'அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்' என்று நீங்கள் இன்று பயந்து உளறுவதுதான் வருத்தமாக இருக்கின்றது.

பாவம். பதிவு ஓரிடம் புகழ் ஓரிடம் என்று இல்லாத புகழை ஏற்றுக் கொள்ள என் மனம் ஒப்பவில்லை. வீரமணி நானென்று நீங்கள் கருதினாலும் எனக்கு சந்தோஷமே. ஆனால் பொய்யான புகழ் எனக்குத் தேவையில்லை. ஏற்கெனவே நான்தான் முகமூடி என்று புரளியைக் கிளப்பினீர். இன்று அவரையும் உம்புண்ணியத்தில் நானறிவேன். அதற்கு முன்னரே எனக்கு பிகேஎஸ்ஸை மிக நன்றாகத் தெரியும். நீரோ, உமது கைத்தடிகளோ உளறுவது போல் ஒரு இழவுமில்லை என்று உமக்கேத் தெரிந்தாலும் போட்டுப் பார்ப்பதில் வல்லவரன்றோ நீவிர்? (இந்த ஸ்டேட்மெண்ட் மூலம் ஒரு பதிவையாவது குறைக்கலாமென்ற நப்பாசைதான்).

அவதாரமெடுத்து அடிப்பது பெயரிலி ஸ்டைல். என்னால் கனவான் பட்டம் துறந்து நேரடியாய், என் மனதிற்குப் பட்டவற்றை, ஒளிவு மறைவின்றி கேட்க முடியும். அது உமக்கும் தெரியும். பட்ட'றிவிலிருந்து உமக்குத் தெரியாதா? இல்லை செலக்டிவ் அம்னீஷியாவா?

ஆமாம் தற்போதைய கைதுகளிலிருந்து ஒருவர் பல US இமெயில் ஐடிக்கள் வைத்திருந்ததாய் FBI' கூறியதாய் ஞாபகம். பெயரிலி உமது இமெயில் ஐடிக்கள் எத்தனை? பப்ளிக்காய் வைக்க முடியுமா? நான் எனதை உடனே பிரகடனப்படுத்துகின்றேன். அன்புத் தம்பி ஆசையாய் கேட்கின்றேன். உமக்கு ஞாபகத்தில் இருப்பதை வெளியிட்டாலே போதும்.

//அமெரிக்காவிலே பெட்னா அங்கத்தவர் ஒருவர் பேச்சுச்சுதந்திரத்துக்கும் மேலாக வேண்டாத ஆட்டம் ஆடிய சந்தேகத்திலே உள்ளே வைக்கப்பட்டிருப்பதை வைத்துக்கொண்டு, ஈழம் என்றே பேச்சை எவரும் எடுக்காமல் அமுக்கும்வண்ணம் பயமுறுத்தற்பதிவா(ட்)டும் வேட்டையாடு விளையாட்டுகள் தவறான கணிப்புகள் என்று சுட்டவேண்டாமா? //

இவ்வளவுதானா பெயரிலி? வெறும் சுட்டுதலா உங்கள் பாணி? உமது வழமையான பாணியில் போட்டு சுட்டிருக்க வேண்டாமா? கேட்டால் பணிப்பளு, momentum, இத்யாதியென்று அள்ளிவிடத் தெரியாதா உமக்கு? வாழ்க்கையிலேயே உமக்குத்தான் பணிப்பளு, momentum இல்லையா? எம்போன்ற மற்றவருக்கெல்லாம் வெறும் உம்மை நோக்கி 'தாக்குதல்களை'த் தொடுப்பதே தலையாய பணி... வாழ்க்கையில் எனக்குப் பிடிக்காத ஒன்று அனுதாபம். பிறர் கொடுத்தாலும் சரி. மற்றவர் விழைந்தாலும் சரி. ஏற்கெனவே ஆறு மணித்தியாலம் செலவழித்துப் பதிவு போட்ட பெயரிலியல்லவா நீவிர்? இதோ மீண்டும் உமது 'நண்பர்களுக்காக' முதலைக் கண்ணீர்.

//இம்மூன்றாவதுதான் முக்கிய காரணம்; பெட்னா குறித்த வீரரின் பதிவிலே வெளிப்பட்டிருக்கும் பின்னூட்டங்களின்போக்கு, நான் அறிந்த சில நண்பர்களின் பெயர்களையும் அவர்கள் வாழும் இடங்களையும் இழுத்து பெட்னாவின் இருக்கும் ஒருவரின் மீதான தற்போதைய அமெரிக்கவழக்கினை இணைத்து இழுத்து எழுதியிருக்கின்றது. இப்படியான பதிவுகளின் நோக்கம் என்னவென்று அறிந்து ஆரம்பத்திலேயே இந்நண்பர்கள் இது குறித்த தீர்மானமான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். இவ்வகையான பதிவுகள் தனிப்பட்ட காழ்ப்புணர்வுகளைக் கொண்டு திட்டமிட்டே வெளிவருவதாகத் தெரிகின்றது.//

அட அட அட தனிப்பட்ட காழ்ப்புணர்வாம். தெரிவிப்பது பெயரிலி. நீங்கள் பேசாமல் மற்ற அனைத்து அஜெண்டாக்களையும் மூடிவைத்து விட்டு கோலிவுட் படங்களுக்கு காமெடி டிராக் எழுதப் போகலாம். கொஞ்சம் பைசாவாவது கிட்டும்.

//பெட்னாவினை வைத்துப் பயமுறுத்த ஆட்கள் பெயர்களை இழுத்துப்பார்க்கவேண்டுமானால், பெட்னா அழைப்பினை ஏற்றுவந்துபோன ஜெயகாந்தன், சிவசங்கரி, குமரி அனந்தன் பெயர்களையும் இழுத்திருக்கலாம். "ம்ஹூம்! நாங்கள் பிரபஞ்சனைமட்டும் வேண்டுமானால், அடித்துத்தள்ளுவோம்; கூடவே, மணிவண்ணன், கஸ்பர் ராஜையும் இழுத்துக்கொல்வோம்" என்றால் சொல்ல எதுவுமில்லை :))//

ஆஹா இதுதான் வழமையான, கோழைத்தனமான பெயரிலி... பெயர்களை அடுக்கு. படிப்பவனை சந்தேகம் கொள்ளச் செய். கிசுகிசு சக்ஸஸ். ஒரே பதிவில் பல மாங்காய்கள்.

'பெயரிலி பதிவு வரும் பின்னே; கார்த்திக் ரமாஸின் பின்னூட்டம் வரும் முன்னே' என்ற புதிய சொலவடை உமக்குத் தெரியாததா என்ன? பாவம் இன்று பல் பிடுங்கப்பட்ட நிலையில் பிதற்றும் நபர். சொ.சங்கரபாண்டி. வன்மங்களை வரைமுறையின்றி வெளிப்படுத்துவதில் உமக்கு சற்றும் சளைக்காத same bedfellow! பாவம் "சூச்சூ" ஒருவரென்பார். நிரூபி இல்லையெனில் கேஸென்றால் பப்ளிக்காய் "மூச்சா" போவார். தைரியமாக எதையும் நேரிடையாக எதிர்கொள்ளும் வக்கில்லாத "மன்னிப்புப் புகழ் மகான்' அல்லவா அவர்? சான்ஸ் கிடைத்து விட்டால் கூட்டத்தில் கோவிந்தா போடும் அவர் புகழ் ஓங்குக!

பாவம் இன்னும் உங்களைத் தாங்கி ஒரிஜினல் பெயர்களில் வரும் நியோ, அனாதை ஆனந்தன் போன்ற மக்கள் எங்கே? புலம் பெயர்ந்து உங்களைப் போலவே இணையத்தில் வன்மம் வளர்க்கும் ஜால்ராக்கள் எங்கே? அவர்கள் இந்நேரம் வந்திருக்க வேண்டுமே? இன்னும் வராததிற்கு ஒருவேளை உம்மைப் போலவே பணிப்பளு, momentum தான் காரணமோ?

பெயரிலி உமது அடிப்படை பிரச்சினை உம்மால் இந்தியா, இந்தியத் தமிழர்கள் என்றாலே ஏற்றுக் கொள்ள முடியாது. எந்நிலையிலும். வெறுப்பையே உண்டு, வெறுப்பையே உமிழ்வது உமது வாடிக்கை. ஏன் முஸ்லீம்களை (ஈழத்து/இந்திய) ஆதரித்தோ எதிர்த்தோ எத்துனை கருத்துகளை முன் வைத்துள்ளீர் நீவிர்? முடியுமா உம்மால்? ஆனால் மனுஷ்யபுத்திரன் மட்டும் மீது வெறுப்பை உமிழ முடியும்? அல்லவா?

இணையத்தில் எனக்குத் தெரிந்து பிகேஎஸ்... பின்னர் மாலன், பத்ரி, பாரா, வெங்கடேஷ், இரா.முருகன்... இன்று சொக்கன், ரஜினி ராம்கி... உமது வெறுப்பு உமிழ்நீரில் கூட்டுப்புழுவாய் இவர்களை நீவிர் வைத்திருப்பது தெரியாதவருண்டோ?

வெறுப்பை தீவிரமாய் உமிழ முடிந்த உம்மால் இன்று உங்களது "நண்பர்களுக்காய்" நேசம் கக்க முடியாமல் போய்விட்டதே பெயரிலி! முடிந்தால், ஆண்மையிருந்தால், வெளிப்படையாய் முதலில் அதைச் செய்யவும். பின்னர் கதைக்கலாம்.

Wednesday, August 09, 2006

இலங்கைப் பிரச்சினை ஒரு கண்ணோட்டம் - 5

இத்தொடருக்கு பின்னூட்டத்தில் அனானிமஸாக பல மின்னஞ்சல்கள் வந்தன. அவற்றிலும் பயனுள்ள சில தகவல்கள் இருந்தன என்று தெரிவித்துக் கொள்கின்றேன். தூஷணங்களும் இருந்தன என்பதைச் சொல்லித்தானா தெரியவேண்டும்?

ஒரு சிறிய ஒப்பு நோக்கை வாசகர் முன்னர் வைக்க விழைகின்றேன். அமெரிக்கப் படை (கூட்டுப்படை என்று பொய் சொன்னாலும்) எவ்வித அசுர பலத்துடன் ஈராக் மீது யுத்தம் தொடுத்தார்களென்று பார்த்தோமல்லவா? எனது முந்தைய பதிவில் அநாநியாக ஒரு தமிழன் கேட்டது நினைவிற்கு வந்தது.

//புலிகள் இந்திய இராணுவத்திடம் ஆயுதங்கள் ஒப்படைத்தனர் தானே? அதுவும் மக்கள் முன்னிலையில் பகிரங்கமாகத்தானே நடந்தது. (ஆம் முழு ஆயுதங்களும் கொடுக்கப்படவில்லை. அப்படித் தரத்தேவையில்லையென்று புலிகளுக்கும் ராஜீவுக்கும் நடந்த ஒப்பந்தம் பற்றி பாலசிங்கம் எழுதியுள்ளார். இந்தியத்தரப்பில் அப்பேச்சில் நேரிலிருந்த பண்ருட்டி இராமச்சந்திரன் இப்போது என்ன சொல்கிறார் என்பதை அறிய ஆவல்)//

ட்ரக்குகளில் வந்திறங்கிய புலிகள் ஒப்படைத்த ஆயுதங்களையும், புலிகளின் தலைவரின் பேச்சையும் அந்நாள் ரூபவாகினியில் பார்த்திருக்கின்றேன். "பெரிய அண்ணன் சொல்கிறார். நம்பி நாங்கள் ஆயுதங்களை ஒப்படைக்கின்றோம்" என்று அவர் சொன்னது (அதே வார்த்தைகளில் இல்லை என்று தயவு செய்து யாரும் தொங்க வேண்டாம்) அந்நாள். ஆனால் பின்னாளில் பாலசிங்கம் புத்தகம் எழுதி 'அப்படித் தரத் தேவையில்லை' என்பார். கேட்டால் ஒப்பந்தத்தில் கட்டாயப்படுத்தி பிரபாகரனிடம் கையெழுத்து வாங்கினார்கள். அதனால் 'ராஜதந்திரத்துடன்' முழு ஆயுதங்களையும் புலிகள்ஒப்படைக்கவில்லை என்பீர்கள் 'ஒரு தமிழன்' அல்லவா? அதையே 'இத்தகைய ஈனச் செயலால் புலிகள் இந்தியா முதுகில் குத்தினார்கள்' என்று சொல்பவர்கள் 'தேசியவாதத் தமிழ்த் துரோகிகள்' அப்படித்தானே? எலும்பில்லாத நாக்கு நமக்கு 'ஒரு தமிழன்', விட்டுத் தள்ளுங்கள்.

//புலிகளின் ஆயுத, ஆட்பலம் பற்றிய உங்கள் கருத்து பிழை. இன்றைக்கிருக்கும் பலத்தைப் பற்றிச் சொல்கிறீர்கள். இந்திய இராணுவத்துடனான சண்டையின் போது இருந்த பலம்தானே கதைக்கப்பட வேண்டியது. சிறுரக ஆயுதங்கள் என்றளவில் புலிகளிடம் நவீனமான, இலகுவான ஆயுதங்கள் இருந்தன. ஆனால் அவைமட்டுமே ஆயுதபலமாகிவிடாது. தோட்டாக்கள், கைக்குண்டுகள் முதற்கொண்டு நிறைய விசயங்களில் அவர்கள் தட்டுப்பாட்டுடன் தான் இருந்தார்கள். ஒரு நேரத்தில் 3 தோட்டாவுக்கு ஒரு சிப்பாய் என்ற கணக்கு அவர்களுக்கு இருந்ததாகச் சொல்வார்கள். போராளிகளின் எண்ணிக்கையும் மிகமிகச் சொற்பமே.//

'ஒரு தமிழன்' அவர்களே! நான் புலிகளின் ஆயுத பராக்கிரமத்தை சிலாகித்துச் சொன்னதாக ஞாபகமில்லை. ஆமாம். புலிகள் வெறும் ஆயுதமே பலமாய் நம்பியிருந்தால் இந்நேரம் காணாமல் போயிருப்பார்கள். இதைப் பற்றி பெரிய அத்தியாயமே எழுதலாம். இருப்பினும் இப்போது ஒப்புமை IPKF vis a vis LTTE செய்வோமே...

முதலில் இந்திய அமைதிப்படையில் முக்கிய கடமையாற்றி, உயிரினைத் துச்சமாய் மதித்து, தாய்நாட்டின் கட்டளையை சிரமேற்கொண்டு, அந்நிய தேசத்தில் அமைதி காக்கச் சென்று, புகழுடம்பு எய்திய தரைப்படை வீரர்களுக்கு எனது பணிவான வணக்கங்கள்!

ஊடகங்களில் எழுதப்படும் வரலாறு நோக்கி எனக்கு ஒரு சிறப்புப் பார்வையுண்டு. IPKF வீரர்களை மறைந்திருந்தோ, டிரம் கண்ணிகளாலோ, இதர பல கொரில்லா தந்திரங்களாலோ கொன்றவர்கள் LTTE 'வீரர்கள்'. அத்தகைய முயற்சிகளில் இறந்தவர்கள் புலிகளில் 'மாவீரர்கள்'. சரி அவர்கள் அவ்வாறே வைத்துக் கொள்ள முழு உரிமை உண்டு. ஆனால் என் தேசத்தில் IPKF'ல் இறந்த/இருக்கும் வீரர்களுக்கு என்ன மரியாதை? நாட்டிற்காக எதையும் செய்த/செய்யும் வீரர்களை, முன்னாள் இராணுவத்தில் பணிபுரிந்தவன் என்ற முறையில் பூரிப்பெய்தும் அதே நிலையில், இன்று ஒரு இந்தியக் குடிமகனாய் அவர்களுக்கு தரப்படாத 'உரிய' மரியாதையை எண்ணி வெட்கித் தலை குனிகின்றேன்.

இது வெறும் Rhetoric என்று சொல்லும் அறிவுஜீவிகளை எதிர்நோக்கியே செ(சொ)ல்கின்றேன். ஆனல் இது வெறும் Empty Rhetoric இல்லை. காலமும் இதனை உறுதி செய்யும்.

முதலில் அமைதி காக்கச் சென்று சண்டைக்கிழுக்கப்பட்டு அல்லது சண்டை போடும் நிலைமைக்கு தள்ளப்பட்ட இந்திய இராணுவம் முழுமையாக அதற்கு தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டுதான் சென்றதா? இல்லையென்பதே வரலாறு. 'சென்றேன்; வென்றேன்' என்ற இரு குறுகிய காலமே கொண்ட, அதுவும் 'நேரிடையான, முழுமையான' யுத்தத்தையே இந்திய இராணுவம் இருமுறை பாகிஸ்தானுடன் கண்டது. 'ஹிந்தி சினி பைய் பைய்' என்ற சீன (அத)களத்தைத் தவிர. அமைதி காக்கச் செல்லும் போது 'யுத்தம்' அதுவும் புலிகளுடனான 'கொரில்லா யுத்தம்' காணும் 'worst scenario'விற்கு அமைதிப்படை தயாராய் இருந்ததா? இல்லையென்பது வெள்ளிடைமலை.

ஏன்?

1. அங்கு சென்ற ஒவ்வொரு 'பிரிகேட்' அமைப்பிலும் குறைந்தபட்சம் 2 பட்டாலியன்கள் குறைவு
2. ஏற்கெனவே கூறியபடி கைவசம் அரதப்பழசான இலங்கை வரைபடங்கள். ஆனால் சண்டை போட்டதோ புலிகளின் குகையில்
3. இன்று ஆர்டிலரியிலும் புலிகள் கொடி நாட்டியுள்ளார்களாம். ஆனால் அன்று IPKF'விற்கு கொடுக்கப்பட்ட ஆர்டிலரி ஆற்றல் என்ன? அன்றைய இந்திய இராணுவத்தின் முழு ஆர்டிலரி ஆற்றல் அன்று IPKF'விற்கு பயன்படுத்தப்பட்டதா? அரசியல் காரணங்களால் 'அவ்வப்போது' மட்டுமே அதுவும் 'மிகக் குறைந்த அளவில்' மேலும் 'சிவிலியனுக்கு சேதமின்றி'... என்று ஆர்டர் கொடுத்துப் பல் பிடுங்கிய ஆர்டிலரி பின்னெதற்கு? செத்த IPKF வீரர்களின் பல் குத்தவா?
4. இரவானால் பார்க்க உதவும் உபகரணங்கள் இல்லை (பின்னெப்படி இரவில் வன்புணர்ந்தார்களென்ற குயுக்தியான கேள்விக்கு என்னிடம் விடையில்லை)
5. இவ்வளவு ஏன் புலிகளிடம் AK-47; நம்மிடம் Semi-auto SLR
6. புலிகளின் ஜப்பான் ரேடியோ டிரான்ஸ்மிட்டர்கள். நம்மிடம்? Ni-Cd பேட்டரிக்கே பற்றாக்குறை என்பதால் தரம்தாழ்ந்த புராதன ரேடியோ செட் (மன்மதப் பாட்டுகள் கேட்டு, களிப்பாட்டம் போடுவதற்காக இல்லை)

இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

ஆயுத பலத்தை விட போர்த் தந்திரங்களை, போலி சாமர்த்தியங்களை, குறுக்கு வழிகளை நம்புபவர்கள் புலிகள். ஒரு தற்கொலைப் புலி பலபேரைப் போட்டுத் தாக்க முடியும். கண்கூடாகவும் கண்டிருக்கின்றீர்கள். அணுகுண்டுவிற்கே அஞ்சாத பொதுமக்கள் கூட இவர்களது தற்கொலைப்படைக் கலாச்சாரத்திற்கு இன்று அஞ்சுகின்றார்கள். இவர்களை எதிர் கொண்ட/கொள்ளும் இராணுவம் எவ்வாறு தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டிருக்க வேண்டும்?

ஆமாம் இத்தைகைய கொரில்லாத் தாக்குதலை எதிர்கொள்ள 'என்னதான் செய்திருக்கலாம்? எப்படிச் செய்கின்றார்கள் இன்று?' என்ற முறையில் ஆராய்வோம்.

Sunday, July 02, 2006

இலங்கைப் பிரச்சினை ஒரு கண்ணோட்டம் - 4

இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் ஷரத்துகளை எனது பின்னூட்டத்தில் சேமித்து வைத்திருக்கின்றேன். மீண்டும் ஒப்பந்தத்தினை மீள் வாசிப்புச் செய்யவும்.

Annexure to the Indo - Sri Lanka Agreement

6. The President of Sri Lanka and the Prime Minister of India also agree that in terms of paragraph 2.14 and paragraph 2.16 (C) of the Agreement, an Indian Peace Keeping Contingent may be invited by the President of Sri Lanka to guarantee and enforce the cessation of hostilities, if so required.

ஆமாம் 2.14 மற்றும் 2.16 (C) என்ன சொல்கின்றது?

2.14 The government of India will underwrite and guarantee the resolutions, and co- operate in the implementation of these proposals.

2.16 (C) In the event that the government of Sri Lanka requests the government of India to afford military assistance to implement these proposals the government of India will co-operate by giving to the government of Sri Lanka such military assistance as and when requested.

இதில் 2.14'ல் குறிக்கப்படும் "proposals" யாவை? இலங்கையின் இறையாண்மையினைப் பாதுகாத்தல், சிங்கள, தமிழ், முஸ்லீம் போன்ற அனைத்து மக்களின் உரிமைகளைக் காத்தல் என்பன சில.

IPKF'ன் நோக்கத்தினை திரிக்கும் அறிவுஜீவிகள் கவனிக்க வேண்டிய விடயங்கள் இவை. இந்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் கொடுத்து, தங்களின் ஆயுதங்களைக் களைவதாக புலிகளின் தலைவர் பிரபாகரன் கைச்சாத்திட்ட கடிதம் ஜெனரல் சிங்கிடம் தரப்படவில்லையா? பின்னர் ஒப்புதலை மீறவில்லையா?

இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை மீறி இலங்கை அரசாங்கம் (பிரேமதாசா சமயத்தில்) புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கவில்லையா?

இந்தியாவின் இலங்கைத் தூதுவரான தீக்ஷ¢த்தின் பராக்கிரமங்களையும், "ரா" அதே சமயத்தில் EPRLF இயக்கத்திற்கு ஆயுதங்கள் வழங்கியதாகச் சொல்லப்படும் விஷயங்களையும் உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.

ஆக பாதுகாப்பு அரண் கூட அமைக்க முடியாமல், கொரில்லா யுத்தத்தை மேற்கொண்டு, தக்க ஆயுதம்/ஆயத்தம் ஏதுமின்றி, அரசியல் பகடைக்காய்களாய் ஆக்கப்பட்ட IPKF'வை எல்லோரும் இந்த சாத்து சாத்துகின்றீர்களே... இங்கே IPKF செய்தது அனைத்தும் சரியென்ற வக்காலத்து வாங்க வரவில்லை. அதே சமயம் சமரில் நடப்பதெல்லாம் நியாயம் என்ற வரட்டு வாதத்தையும் வைக்கவில்லை. வன்புணர்ச்சி, கொள்ளைகளில் ஈடுபட்டவர் மீது நடவடிக்கையே எடுக்கப்படவில்லையா? ஏற்கெனவே நான் கேட்ட கேள்வியை திரும்பிக் கேட்கின்றேன். இறந்ததாய் சொல்லப்படும் 1200-1500 IPKF வீரர்களில் வன்புணர்ச்சியாலும், ஏனைய சமூகக் குற்றங்களாலும் இறந்தவர் எத்தனை பேர்? இவ்வளவு ஏன்? இறந்தவர்கள் பெயர்களைக் கூட ஒரு இடத்தில் முழுமையாய் என்னால் பெற முடியவில்லை. ஜெனரல். கல்கத் கூறியது போல இலங்கையை விட இந்தியாவில்தான் IPKF அசிங்கப்படுத்தப்பட்டது. இறந்தவர்களின் உடல் கூட இந்திய மண்ணிற்குத் திரும்பவில்லை. வெறும் சாம்பல்தான் வந்தது. சாம்பல் பாக்கியம் கூட அனைவருக்கும் கிட்டவில்லை என்பது உச்சபட்ச கொடுமை.

ஒப்பந்தத்தை புலிகள் மீற இரு காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஒன்று திலீபன் மரணம். இன்னொன்று 17 புலிகள் சயனைட் சாப்பிட்டது. இவ்விரண்டு நிகழ்வுகளிலும் IPKF என்ன செய்தது என்று ஜெனரல் சிங் தனது ரீ-டிப் செவ்வியில் விரிவாகக் கூறியுள்ளார். போய் படித்துப் பாருங்கள். திலீபனைச் சந்தித்து எவ்வாறாவது உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடுமாறு வேண்டுவன செய்யச் சொல்லி ஜெனரல் சிங் தீக்ஷ¢த்திடம் மன்றாடவில்லையா? திரிகோணமலை ATC (Air Traffic Controller) அறையினை முற்றுகையிட்டு இலங்கை இராணுவம் புகமுடியாதவாறு தடுக்கவில்லையா? தவறு யார் மேல்? வஞ்சனையாகச் செயல்பட்ட ஜெயவர்த்தனே மீதா? இல்லை வஞ்சிக்கப்பட்ட இந்திய அரசாங்கம் மீதா? இல்லை பலியாடுகளாக்கப்பட்ட IPKF வீரர்கள் மீதா? வாசகர்கள் பார்வைக்கே விட்டு விடலாம்.

கண்ணி வெடிகளை கண்டுபிடித்து அகற்றும் கருவிகள் கூட இல்லாது ஆடுகளை இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அனுப்பி வைத்தார்கள். கறி சமைத்து சாப்பிட்டு, சீரணிக்க செக்ஸ் வைத்துக் கொள்ளவா இந்த எளிய திட்டம்? கொஞ்சமாவது யோசியுங்கள்.

ஹடிதா சம்பவம் குறித்து Time (ஜூன் 12, 2006) பத்திரிக்கை என்ன கூறுகின்றது?

One of the biggest miscalculations of Iraq war - may be the biggest - was that the US invaded Iraq with a force large enough to topple a Government in 21 days but too small to maintain order in a nation of 26 million with deep ethnic divisions.

அதாவது அமைதியினை ஏற்படுத்த இப்போது இருக்கும் சுமார் ஒன்றரை லட்சம் துருப்புகள் போதுமானதாக இல்லையாம். சதாம் ஹ¥சைன் இருந்தபோது தனது எதிராளி என்று சந்தேகம் வந்தால் கூட போட்டுத் தள்ளி விடுவார். அவர் இருந்தவரை எதிர்ப்பென்னும் மூச்சே கிடையாது. ஈராக்கையே துவம்சம் பண்ணி, சதாமையும் சிறை பிடித்து, நாட்டையே கைக்குள் வைத்திருக்கும் சமயத்தில், துருப்புகளின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு ஊடுறுவும் போராளிகளைச் (?) சமாளிக்க அமெரிக்க இராணுவம் திணறுகின்றது. இவல்களது கழுகுப் பார்வைகளிலிருந்து தப்பி விட்டு எடுத்து வந்த ஆயுதங்கள் எல்லளவு இருக்க முடியும்? இதற்கே அசுர பலம் கொண்ட அமெரிக்கப் படை திணறுகின்றது. கேட்டால் "Exit Policy" சரியாக அமைக்கப்படவில்லையாம்.

தனி அரசு நடத்தி வந்த/வரும் புலிகளின் இராணுவத்துக்கு ஒப்பான ஆயுதங்கள்/ஆயத்தங்கள் முன்னால் வெறும் 60,000 (approx) துருப்புகளை வைத்துக் கொண்டு IPKF என்ன செய்திருக்க முடியும்? அரை மாகஜீன் நிரப்பப்பட்ட புராதன SLR உடன் என்ன சமர் செய்ய முடியும்? இந்த லட்சணத்தில் பஞ்சசீலம் பாழாய்ப்போன சீலமென்று எங்கள் கைகளை பின்னே கட்டி விட்டு சமர் செய்யச் சொன்னார்கள் என்று ஜெனரல் சிங் புலம்புகின்றார். கட்டப்படாமலிருந்தால் மட்டும் இவர்கள் புலிகளை கட்டம் கட்டியிருக்கவா முடியும் SLR கொண்டு? புலிகளுடனான யாழ்ப்பாணச் சண்டையில் ஒன்பது ஹெலிக்காப்டர்கள் தேவையென்று, ஒப்புதல் பெறப்பட்டும் தேவைப்படும் நேரத்தில் கைவிரிக்கப்பட்டு அதனால் இறந்த IPKF வீரர்கள் எண்ணிக்கை இன்னமும் தெரியவில்லை.

இதற்கெல்லாம் யார் பொறுப்பு?

மேலும் விரியும்....

Saturday, July 01, 2006

இலங்கைப் பிரச்சினை ஒரு கண்ணோட்டம் - 3

அமெரிக்காவின் இரண்டாவது பாலைவன யுத்தம் இரு நோக்கங்களை உள்ளடக்கியது.

1. ஈராக்கை வீழ்த்தி, சதாம் உசேனை நீக்குவது
2. அமைதியை நிலை நாட்டி ஜனநாயக அரசினை ஏற்படுத்துவது

முதல் குறிக்கோளை எட்டுவதற்கு அமெரிக்கா அதிகம் சிரமப்படவில்லை. ஏனெனில் அதன் Strategy பக்காவாக இருந்தது.

1. Intelligence : நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு போருக்கு முன்னரே தேவைக்கும் அதிகமாக 'புலனாய்வுகள்' மேற்கொள்ளப்பட்டு, 'போரின் வெற்றி'க்குப் போதுமான தகவல்கள் திரட்டப்பட்டு விட்டன.
2. Command Control Network : அமெரிக்காவின் முப்படைகள், அரசு இயந்திரங்கள், புலனாய்வு ஸ்தாபனங்கள், சிவிலியன் நிறுவனங்கள், பிற நாட்டின் படைகள் அனைத்தையும் சிறப்பாக ஒருங்கிணைத்து மேற்சொன்ன நெட்வொர்க் அமைக்கப்பட்டது. ஆணைகளை இடுவது யார்? செயல்படுத்துவது யார்? என்று துல்லியமாகக் கொள்கைகள் வகுக்கப்பட்டு செயல்முறைப் படுத்தப்பட்டது. ஆக மொத்தத்தில் "குழப்பம்" என்ற பேச்சிற்கே இடமில்லை.
3. Execution to Perfection : வெறும் செயல் திட்டங்கள் மட்டுமே வெற்றி தரப்போவதில்லை. 10-30-30 என்பது பெண்டகனின் போர்முறைத் திட்டமென்பார்கள். முதல் பத்து நாட்களில் சண்டையைத் தீவிரமாகத் தொடங்குவது. அடுத்த 30 நாட்களில் குறைந்தபட்ச (போரின்) குறிக்கோள்களை அடைவது. அடுத்த 30 நாட்களில் உலகின் வேறொரு பகுதிக்கு செல்ல மிலிட்டரியைத் தயார்படுத்துவதென்பதே பாதுகாப்பு செகரட்டரியான டொனால்டு ரம்ஸ்பெல்டு நம்பும் தாரக மந்திரம் (இதைத்தான் ஆங்கிலத்தில் "lighter, more lethal and highly mobile fighting force" என்று குறிப்பிட்டார் ரம்ஸ்பெல்டு). ஆக முதல் நாற்பது நாட்களில் அமெரிக்க இராணுவம் சிறப்பாகச் செயல்பட்டு தனது குறிக்கோள்களை எட்டியது. ஆனால் ஈராக் வீழ்ந்த பின்னால் என்ன நடந்ததென்பதைப் பிறகு பார்க்கலாம்.

மொத்தம் 1,45,000 துருப்புகள் ஈராக்கில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இப்போது இந்திய அமைதிப்படைக்கு வருவோம். ஏதோ இலங்கையை அடக்கி கைக்குள் போட்டுக் கொள்ளும் சதியுடன் IPKF இலங்கைக்குச் சென்றது என்று பல அறிவுஜீவிகள் நினைக்கின்றார்களே... அப்படியென்றால் எத்தகைய ஆயத்தங்களுடன்,ஆயுதங்களுடனும் IPKF இருந்தது?

1. மேஜர் ஜெனரல் ஹர்கிரத் சிங் (Major General. Harkirat Singh) IPKF'ன் முதல் கமாண்டர் ஆவார். ஜூன் 1987'ல் டெல்லி ஆப்ஸ் ரூமில் "briefing" பெற்ற பிறகு செகந்திராபாத் வருகின்றார். அங்கே அவரது பிரிகேட் கமாண்டர்கள் அனைவரும் ஆஜர். தனது ADC ஆபீஸரை மட்டுமே எதிர்பார்த்து வந்த ஜெனரலுக்கு ஒரே ஆச்சரியம். என்ன விஷயமென்று வினவியவுடன் தெரியவந்தது, "54'வது டிவிஷன் இன்னும் 8 மணி நேரத்தில் இலங்கைக்குச் செல்லவேண்டும்; இந்தியப் பிரதமரும், இலங்கை அதிபரும் சமாதான உடன்படிக்கை ஒன்றில் கையெழுத்திட்டு விட்டார்கள்;" என்று. உடன்படிக்கையில் என்ன இருந்தது என்று சில மணி நேரங்கள் கழித்தே ஜெனரல் சிங்கிற்கு டெலக்ஸ் வருகின்றது. இதில் அமைதிப்படை என்ன செய்ய வேண்டுமென்று தெளிவான வழிகாட்டுதலோ, ஆணைகளோ கிடையாது. "மொட்டைத் தாத்தா குட்டையில் விழுந்தார்" என்ற ரீதியில் இருந்ததாய் ஜெனரல் சிங்கே குற்றம் சாட்டுகின்றார்.

ஒரு யுத்தம் செய்வதற்காக IPKF சென்றதாகவே வைத்துக் கொள்வோம். அப்படியென்றால் அவர்களுக்கு தெளிவான ஆணைகள் பிறப்பிக்கபட்டு இருக்கும். Intelligence Briefs கொடுக்கப்பட்டு, சகலவிதமான 'Situations & Options' விவாதிக்கப்பட்டு இருக்கும். ஆனால் ஜெனரல் சிங் கூறுகிறார்' 'அவருக்கு புதிப்பிக்கப்பட்ட இலங்கையின் வரைபடம் (மேப்) கூட கொடுக்கப்படவில்லை' என்று. அவரது கூற்றுப்படி செகந்திராபாத்தில் சுற்றுலாப் பயணிகள் பயன்படுத்தும் மேப்புகளை எடுத்துச் சென்று இலங்கைப் படையின் ஜெராக்ஸ் மெஷினில் பிரதிகள் எடுத்து பிரிக்கேட் கமாண்டர்களுக்குக் கொடுத்தாய் தெரியவருகின்றது. அதுசரி சுற்றுலாப் பயணத்திற்குச் சென்று பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வதே பிரதானமாய்ச் சென்றார்கள் ஒரு "Intelligent Twist" கொடுத்தால் போயிற்று.

லெப்டினெண்ட் ஜெனரல் A.S. கல்கத் பின்னர் ஜெனரல் சிங்கிடமிருந்து பொறுப்பை எடுத்துக் கொண்டார். அவரிடம் ரீ-டிப் பேட்டி கண்டபோது கூறியதாவது:

கேள்வி: நீங்கள் ஏன் வான் வெளித் தாக்குதலை புலிகளின் மீது முழுமையாகப் பயன்படுத்தவில்லை?
ஜெனரல் கல்கத்: வான்வழித் தாக்குதலில் அதிகமான சிவிலியன்கள் இறக்க நேரிடும். நாங்கள் அவர்களுக்கு புனர்வாழ்வு ஏற்படுத்திக் கொடுக்கவே பிரதானமாகச் சென்றோம். வான்வழித் தாக்குதல் தொடுத்திருந்தால் மாறான விளைவுகள் ஏற்பட்டிருக்கும். பலர் வீடிழந்திருப்பார்கள். ... ஏன் ஆர்டிலரி கூட சிவிலியன்கள் இல்லாத காட்டுப்பகுதிகளில் மட்டுமே பயன்படுத்தினோம்.

மேலும் அவர் இந்திய ஜவான்களிடமிருந்து புராதன SLR எனப்படும் "Self Loading Rifle" எனப்படுவது. புலிகளுக்கு எதிரான "Counter-Insurgency" என்னும் ஆபரேஷனுக்கு முற்றிலும் உதவாக்கரையான, பளு நிறைந்த, ரவைகளை மெதுவாகத் துப்புகின்றவை SLR. புலிகளிடமோ AK-47 ரக நவீனத் துப்பாக்கிகள். காடுகளை இஞ்ச் பை இஞ்சாக அறிந்தவர்கள் புலிகள். நம்மவரிடம் குறைந்தபட்ச வரைபடங்கள் கூடக் கிடையாது. சரி இரவில் பார்க்க உதவும் Night-Vision" உபகரணங்கள் உண்டா? கிடையாது. குண்டு துளைக்கா கவச உடை, கவச வண்டிகள், நவீன ரேடியோ செட்டுகள், நவீன டாங்க்குகள், விமானங்கள், போர்க்கப்பல்கள்... கிடையாது.

பிறகு உலகத்திலேயே நான்காவது பெரிய இராணுவம் எதற்குத் தான் இலங்கைக்குச் சென்றது? போரிடத்தானே. அப்படியென்றால் சினிமாக்களில் வருவது போல பறந்து பறந்து அடித்து இலங்கையைக் கைப்பற்றி விடலாமென்ற கனவுடன் சென்றார்களா?

இன்று அமெரிக்கா போரின் போது பயன்படுத்திய அத்தனை தளவாடங்களையும் அமைதியை ஏற்படுத்தப் பயன்படுத்துகின்றது. இருப்பினும் அமைதி வந்தபாடில்லை. அதற்காக காரண காரியங்களையும் பின்னர் பார்க்கலாம்.

மேலும் விரியும்....

Thursday, June 29, 2006

இலங்கைப் பிரச்சினை ஒரு கண்ணோட்டம் - 2

ஒரு சிறிய மாறுபாதை எடுக்க வேண்டியுள்ளது. காரண காரியங்களை பிறகு பார்க்கலாம்.

அமெரிக்காவின் சக்தி பற்றி நான் சொல்லியா இணையவாசிகளுக்குத் தெரியப் போகின்றது? இருப்பினும் ஈராக் என்னும் சுண்டைக்காய் நாட்டினை தனது கால் கட்டை விரலால் எளிதாக நசுக்கி இருக்கலாம்தான். என்ன செய்வது வியட்னாம்(நேம்) அனுபவம் அதைச் செய்ய விடவில்லை. ஆகவே இரண்டாம் பாலைவன யுத்தம் முதற் பாலைவன் யுத்தத்தைப் போலவே கன கச்சிதமாக தொடங்கியது. முதல் யுத்தத்திலிருந்த நேர்மை இப்போது இல்லாவிடினும் பொய்யின் மீது கட்டமைக்கப்பட்டாலும் (பேரழிவு ஆயுதங்களை சதாம் ஹூசைன் வைத்திருக்கின்றார் என்ற ஜூனியர் புஷ்ஷின் வாதம்) இரண்டாவது யுத்தமும் தனது துல்லியங்களை தவறவில்லை.

இந்த யுத்தத்தில் பயன்படுத்தப்பட்டவை யாவை?

விமான ரகங்கள்:

B-1B
B-2
B-52

F-14B
F-15E
F-16
F/A-18
F-117
AV-8B
A-10

AH-1W
AH-64D
CH-46E
CH-53E

MH-47
MH-60

AC-130U
EC-130
MC-130

E-2C
E-3 AWACS
E-8 JSTARS
P-3 Orion
RC-135
RQ-1 Predator
RQ-4 Global Hawk
U-2

C-2
C-5
C-17
C-130
KC-130
KC-135

EA-6B
S-3B
SH-60F
HH-60H


தரையில்:

M1 MBT
M2 BFV

M109A6

AAVP 7A1

LAV

M777 LW155

FBCB2

தளவாடங்கள்:

AGM-86C/D CALCM
AGM-142 HAVE NAP
BGM-109 Tomahawk

BLU-82 Daisy-Cutter
BLU-118 Thermobaric
CBU-87 CEM
CBU-103 WCMD

GBU-10 Paveway II
GBU-12 Paveway II
GBU-16 Paveway II
GBU-27 Have Void
GBU-28 Bunker-buster

GBU-29 JDAM
GBU-30 JDAM
GBU-31 JDAM
GBU-32 JDAM
GBU-37 Bunker-buster

MK-81 GP
MK-82 GP
MK-83 GP

Javelin
M220 TOW


கப்பல்கள்

CV-63 Kitty Hawk
CV-67 John F. Kennedy
CVN-65 Enterprise
CVN-68 Nimitz


CG-47 Ticonderoga
DD-963 Spruance
DDG-51 Arleigh Burke
FFG-7 Oliver Hazard Perry

SSN-688 Los Angeles

LCC-19 Blue Ridge

LHA-1 Tarawa
LHD-1 Wasp

LSD-41 Whidbey Island
LPD-4 Austin

AGF-3 La Salle
AGF-11 Coronado

AOE-1 Sacramento

MCM-1 Avenger
MHC-51 Osprey

இவையெல்லாம் என்னென்ன செய்ய முடியும்? அழிவு சக்திகள் அனைத்தையும். மொத்த குத்தகைக்கு எடுத்து முழுதுமாக செய்து முடிக்கும்.

பங்கர் பஸ்டர்ஸ் "Global Positioning System Aided Munition (GAM) [GBU-36/B & GBU-37/B]]" என்பார்கள். அது சரி இது இரண்டாயிரமாவது ஆண்டு. இதற்கும் இலங்கைக்கும் என்ன சம்பந்தம் என்கின்றீர்களா? வருகின்றேன்.

மேலும் விரியும்....