Friday, September 01, 2006

ஊடக ஊழல்கள்

பெயரிலியின் பதிவுகளைப் பயன்படுத்துதல் பதிவினைப் படிக்க நேர்ந்தது மிகவும் யதேச்சையாய். மறு கழிவாய் நானும் கழிய வேண்டுமா என்று மிகவும் யோசித்த பின்னர், நாளை மலச்சிக்கல் வராமலிருக்க கழிந்து விடலாமென்று முடிவெடுத்ததால் விளைந்தது இப்பதிவு.

வர வர யார் யார் ஊடக நீதிகளை, நியதிகளைப் பற்றி விசனப்படுவதென்ற விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது. இருப்பினும் "Catch Me If You Can" படம்தான் ஞாபகத்திற்கு வருகின்றது. பலவிதங்களில் ப்ராடு செய்தவனே, பின்னாளில் ப்ராடை ஒழிக்க உதவுவது போல் இன்று பெயரிலி கதைக்கின்றார். ஆனால் அத்திரைப்படத்திலாவது ப்ராடு செய்பவன் திருந்தி ப்ராடை ஒழிக்கப் போராடுகின்றான். ஆனால் பாவம் பெயரிலியோ? எத்தனை தசாவதாரமெடுத்தாலும் திருந்தப் போவதில்லை என்று கங்கணமென்ற கச்சையை என்றைக்கும் அவிழ்க்கவே போவதில்லை.

பொய், புரட்டு, பித்தலாட்டம் இவற்றின் மொத்த உருவமே பெயரிலி. எனவே அவரிடமிருந்து எந்த நீதியையோ, நியாயத்தையோ எதிர்பார்க்க முடியாது. இருப்பினும் எனது மலச்சிக்கலை நீக்கவே இப்பதிவென்று வாசகர்க்கு அறியத் தருகின்றேன்.

வார்த்தைக்கு வார்த்தை அனல் கக்கும் கனவானாய் அறியப்பட்ட பெயரிலி, இன்று நாலாந்தர ஏட்டில் வரும், பொல்லாத கிசுகிசுவாய் பதிடும் நிலைக்கு தள்ளப்பட்ட பெயரிலி என்கின்ற ரமணீதரன் கந்தையாவை நினைத்தால் எனக்கு பரிதாபம்தான் வருகின்றது. இதனால்தானே பாவம் அடங்கியிருப்பவனை மேலும் அழுத்தக் கூடாதென்று என்வழியில் நான் போனாலும், பெயரிலி (புலி?) வால் பிடித்த கதையாகிப் போனது மீண்டும்.

வீரமணி என்பவர் தனது வலைப்பதிவில் புலிகளுக்கு எதிராக தனது கருத்துகளை பதிந்து வருகின்றார். இதில் Federation of Tamil Sangams of North America (FeTNA) குறித்து பல பதிவுகள் வந்திருக்கின்றது. முக்கியமாய் நாச்சிமுத்து சாக்ரட்டீஸ் உள்ளிட்ட பலர் FBI'யால் சமீபத்தில் கைது செய்தது குறித்து அமெரிக்க ஊடகங்களில் வந்தவை. குறிப்பாக டேன்னி டேவிஸ் என்னும் காங்கிரஸ்மேன் வன்னிக்கு சுற்றுலா சென்ற பதிவு. மற்றும் அதில் வந்த பின்னூட்டங்கள்:

1. American Born Clear Tamil
2. அனானி

அதே நேரத்தில் போன வாரத்தில் பிகேபி'ஐ ஸ்டாராக அறிவித்த முகமூடி, இவ்வார ஸ்டாராக தனது வலைப்பதிவில் வீரமணியின் லிங்க்கைக் கொடுக்கின்றார்.

உடனே வியர்த்துவிட்டது பெயரிலிக்கு. வீரமணி யாரென்ற தனது "உளவு"ச் செய்திகளை கிசுகிசு பதிவாகப் போட்டு களிப்படைகின்றார். நெஞ்சில் உரமும், நேர்மைத் திறமும்' இருந்தால் வஞ்சனையாய், வாய்ச் சொல் வீரராய் இன்று இருக்க வேண்டாமே பெயரிலி! கிரேக்கத் தத்துவஞானிக்கு ஆதரவென்று பப்ளிக்காய் படம் கூடக் காட்டத் தெரியாத உங்களின் கிசுகிசு வீரம் என்னைப் புல்லரிக்க வைக்கின்றது. "பாடுங்கள் என் கல்லறையில் அவனொரு பைத்தியக்காரென்று" என்ற அடிப்படை வீரம் கூடவா மக்கு அற்றுப் போயிற்று? வேதனை வேதனை.

அதென்ன மூன்று பேர் இரண்டு பதிவுகள் போடுவார்கள் என்று ஆருடம்? வேலியில் போகும் ஓணானை எடுத்து லங்கோட்டில் விட்டுக் கொள்கின்றேன் பாருங்கள்; இப்போது அது என்னை குடையுமென்று. களிப்படையுமையா உமது ஆருடம் பலித்ததென்று.

இந்தியன் பிள்ளை கொடுக்கும் போர்ஸ் என்று IPKF'வை வருணித்தீர்களே? மறந்தா போயிற்று? உங்களைப் போன்ற உன்மத்தர்களை, உலுத்தர்களை உலகிற்கு உரித்துக்காட்ட எனக்கு முக்காடு தேவையில்லை மூடரே... 'அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்' என்று நீங்கள் இன்று பயந்து உளறுவதுதான் வருத்தமாக இருக்கின்றது.

பாவம். பதிவு ஓரிடம் புகழ் ஓரிடம் என்று இல்லாத புகழை ஏற்றுக் கொள்ள என் மனம் ஒப்பவில்லை. வீரமணி நானென்று நீங்கள் கருதினாலும் எனக்கு சந்தோஷமே. ஆனால் பொய்யான புகழ் எனக்குத் தேவையில்லை. ஏற்கெனவே நான்தான் முகமூடி என்று புரளியைக் கிளப்பினீர். இன்று அவரையும் உம்புண்ணியத்தில் நானறிவேன். அதற்கு முன்னரே எனக்கு பிகேஎஸ்ஸை மிக நன்றாகத் தெரியும். நீரோ, உமது கைத்தடிகளோ உளறுவது போல் ஒரு இழவுமில்லை என்று உமக்கேத் தெரிந்தாலும் போட்டுப் பார்ப்பதில் வல்லவரன்றோ நீவிர்? (இந்த ஸ்டேட்மெண்ட் மூலம் ஒரு பதிவையாவது குறைக்கலாமென்ற நப்பாசைதான்).

அவதாரமெடுத்து அடிப்பது பெயரிலி ஸ்டைல். என்னால் கனவான் பட்டம் துறந்து நேரடியாய், என் மனதிற்குப் பட்டவற்றை, ஒளிவு மறைவின்றி கேட்க முடியும். அது உமக்கும் தெரியும். பட்ட'றிவிலிருந்து உமக்குத் தெரியாதா? இல்லை செலக்டிவ் அம்னீஷியாவா?

ஆமாம் தற்போதைய கைதுகளிலிருந்து ஒருவர் பல US இமெயில் ஐடிக்கள் வைத்திருந்ததாய் FBI' கூறியதாய் ஞாபகம். பெயரிலி உமது இமெயில் ஐடிக்கள் எத்தனை? பப்ளிக்காய் வைக்க முடியுமா? நான் எனதை உடனே பிரகடனப்படுத்துகின்றேன். அன்புத் தம்பி ஆசையாய் கேட்கின்றேன். உமக்கு ஞாபகத்தில் இருப்பதை வெளியிட்டாலே போதும்.

//அமெரிக்காவிலே பெட்னா அங்கத்தவர் ஒருவர் பேச்சுச்சுதந்திரத்துக்கும் மேலாக வேண்டாத ஆட்டம் ஆடிய சந்தேகத்திலே உள்ளே வைக்கப்பட்டிருப்பதை வைத்துக்கொண்டு, ஈழம் என்றே பேச்சை எவரும் எடுக்காமல் அமுக்கும்வண்ணம் பயமுறுத்தற்பதிவா(ட்)டும் வேட்டையாடு விளையாட்டுகள் தவறான கணிப்புகள் என்று சுட்டவேண்டாமா? //

இவ்வளவுதானா பெயரிலி? வெறும் சுட்டுதலா உங்கள் பாணி? உமது வழமையான பாணியில் போட்டு சுட்டிருக்க வேண்டாமா? கேட்டால் பணிப்பளு, momentum, இத்யாதியென்று அள்ளிவிடத் தெரியாதா உமக்கு? வாழ்க்கையிலேயே உமக்குத்தான் பணிப்பளு, momentum இல்லையா? எம்போன்ற மற்றவருக்கெல்லாம் வெறும் உம்மை நோக்கி 'தாக்குதல்களை'த் தொடுப்பதே தலையாய பணி... வாழ்க்கையில் எனக்குப் பிடிக்காத ஒன்று அனுதாபம். பிறர் கொடுத்தாலும் சரி. மற்றவர் விழைந்தாலும் சரி. ஏற்கெனவே ஆறு மணித்தியாலம் செலவழித்துப் பதிவு போட்ட பெயரிலியல்லவா நீவிர்? இதோ மீண்டும் உமது 'நண்பர்களுக்காக' முதலைக் கண்ணீர்.

//இம்மூன்றாவதுதான் முக்கிய காரணம்; பெட்னா குறித்த வீரரின் பதிவிலே வெளிப்பட்டிருக்கும் பின்னூட்டங்களின்போக்கு, நான் அறிந்த சில நண்பர்களின் பெயர்களையும் அவர்கள் வாழும் இடங்களையும் இழுத்து பெட்னாவின் இருக்கும் ஒருவரின் மீதான தற்போதைய அமெரிக்கவழக்கினை இணைத்து இழுத்து எழுதியிருக்கின்றது. இப்படியான பதிவுகளின் நோக்கம் என்னவென்று அறிந்து ஆரம்பத்திலேயே இந்நண்பர்கள் இது குறித்த தீர்மானமான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். இவ்வகையான பதிவுகள் தனிப்பட்ட காழ்ப்புணர்வுகளைக் கொண்டு திட்டமிட்டே வெளிவருவதாகத் தெரிகின்றது.//

அட அட அட தனிப்பட்ட காழ்ப்புணர்வாம். தெரிவிப்பது பெயரிலி. நீங்கள் பேசாமல் மற்ற அனைத்து அஜெண்டாக்களையும் மூடிவைத்து விட்டு கோலிவுட் படங்களுக்கு காமெடி டிராக் எழுதப் போகலாம். கொஞ்சம் பைசாவாவது கிட்டும்.

//பெட்னாவினை வைத்துப் பயமுறுத்த ஆட்கள் பெயர்களை இழுத்துப்பார்க்கவேண்டுமானால், பெட்னா அழைப்பினை ஏற்றுவந்துபோன ஜெயகாந்தன், சிவசங்கரி, குமரி அனந்தன் பெயர்களையும் இழுத்திருக்கலாம். "ம்ஹூம்! நாங்கள் பிரபஞ்சனைமட்டும் வேண்டுமானால், அடித்துத்தள்ளுவோம்; கூடவே, மணிவண்ணன், கஸ்பர் ராஜையும் இழுத்துக்கொல்வோம்" என்றால் சொல்ல எதுவுமில்லை :))//

ஆஹா இதுதான் வழமையான, கோழைத்தனமான பெயரிலி... பெயர்களை அடுக்கு. படிப்பவனை சந்தேகம் கொள்ளச் செய். கிசுகிசு சக்ஸஸ். ஒரே பதிவில் பல மாங்காய்கள்.

'பெயரிலி பதிவு வரும் பின்னே; கார்த்திக் ரமாஸின் பின்னூட்டம் வரும் முன்னே' என்ற புதிய சொலவடை உமக்குத் தெரியாததா என்ன? பாவம் இன்று பல் பிடுங்கப்பட்ட நிலையில் பிதற்றும் நபர். சொ.சங்கரபாண்டி. வன்மங்களை வரைமுறையின்றி வெளிப்படுத்துவதில் உமக்கு சற்றும் சளைக்காத same bedfellow! பாவம் "சூச்சூ" ஒருவரென்பார். நிரூபி இல்லையெனில் கேஸென்றால் பப்ளிக்காய் "மூச்சா" போவார். தைரியமாக எதையும் நேரிடையாக எதிர்கொள்ளும் வக்கில்லாத "மன்னிப்புப் புகழ் மகான்' அல்லவா அவர்? சான்ஸ் கிடைத்து விட்டால் கூட்டத்தில் கோவிந்தா போடும் அவர் புகழ் ஓங்குக!

பாவம் இன்னும் உங்களைத் தாங்கி ஒரிஜினல் பெயர்களில் வரும் நியோ, அனாதை ஆனந்தன் போன்ற மக்கள் எங்கே? புலம் பெயர்ந்து உங்களைப் போலவே இணையத்தில் வன்மம் வளர்க்கும் ஜால்ராக்கள் எங்கே? அவர்கள் இந்நேரம் வந்திருக்க வேண்டுமே? இன்னும் வராததிற்கு ஒருவேளை உம்மைப் போலவே பணிப்பளு, momentum தான் காரணமோ?

பெயரிலி உமது அடிப்படை பிரச்சினை உம்மால் இந்தியா, இந்தியத் தமிழர்கள் என்றாலே ஏற்றுக் கொள்ள முடியாது. எந்நிலையிலும். வெறுப்பையே உண்டு, வெறுப்பையே உமிழ்வது உமது வாடிக்கை. ஏன் முஸ்லீம்களை (ஈழத்து/இந்திய) ஆதரித்தோ எதிர்த்தோ எத்துனை கருத்துகளை முன் வைத்துள்ளீர் நீவிர்? முடியுமா உம்மால்? ஆனால் மனுஷ்யபுத்திரன் மட்டும் மீது வெறுப்பை உமிழ முடியும்? அல்லவா?

இணையத்தில் எனக்குத் தெரிந்து பிகேஎஸ்... பின்னர் மாலன், பத்ரி, பாரா, வெங்கடேஷ், இரா.முருகன்... இன்று சொக்கன், ரஜினி ராம்கி... உமது வெறுப்பு உமிழ்நீரில் கூட்டுப்புழுவாய் இவர்களை நீவிர் வைத்திருப்பது தெரியாதவருண்டோ?

வெறுப்பை தீவிரமாய் உமிழ முடிந்த உம்மால் இன்று உங்களது "நண்பர்களுக்காய்" நேசம் கக்க முடியாமல் போய்விட்டதே பெயரிலி! முடிந்தால், ஆண்மையிருந்தால், வெளிப்படையாய் முதலில் அதைச் செய்யவும். பின்னர் கதைக்கலாம்.