Sunday, July 02, 2006

இலங்கைப் பிரச்சினை ஒரு கண்ணோட்டம் - 4

இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் ஷரத்துகளை எனது பின்னூட்டத்தில் சேமித்து வைத்திருக்கின்றேன். மீண்டும் ஒப்பந்தத்தினை மீள் வாசிப்புச் செய்யவும்.

Annexure to the Indo - Sri Lanka Agreement

6. The President of Sri Lanka and the Prime Minister of India also agree that in terms of paragraph 2.14 and paragraph 2.16 (C) of the Agreement, an Indian Peace Keeping Contingent may be invited by the President of Sri Lanka to guarantee and enforce the cessation of hostilities, if so required.

ஆமாம் 2.14 மற்றும் 2.16 (C) என்ன சொல்கின்றது?

2.14 The government of India will underwrite and guarantee the resolutions, and co- operate in the implementation of these proposals.

2.16 (C) In the event that the government of Sri Lanka requests the government of India to afford military assistance to implement these proposals the government of India will co-operate by giving to the government of Sri Lanka such military assistance as and when requested.

இதில் 2.14'ல் குறிக்கப்படும் "proposals" யாவை? இலங்கையின் இறையாண்மையினைப் பாதுகாத்தல், சிங்கள, தமிழ், முஸ்லீம் போன்ற அனைத்து மக்களின் உரிமைகளைக் காத்தல் என்பன சில.

IPKF'ன் நோக்கத்தினை திரிக்கும் அறிவுஜீவிகள் கவனிக்க வேண்டிய விடயங்கள் இவை. இந்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் கொடுத்து, தங்களின் ஆயுதங்களைக் களைவதாக புலிகளின் தலைவர் பிரபாகரன் கைச்சாத்திட்ட கடிதம் ஜெனரல் சிங்கிடம் தரப்படவில்லையா? பின்னர் ஒப்புதலை மீறவில்லையா?

இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை மீறி இலங்கை அரசாங்கம் (பிரேமதாசா சமயத்தில்) புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கவில்லையா?

இந்தியாவின் இலங்கைத் தூதுவரான தீக்ஷ¢த்தின் பராக்கிரமங்களையும், "ரா" அதே சமயத்தில் EPRLF இயக்கத்திற்கு ஆயுதங்கள் வழங்கியதாகச் சொல்லப்படும் விஷயங்களையும் உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.

ஆக பாதுகாப்பு அரண் கூட அமைக்க முடியாமல், கொரில்லா யுத்தத்தை மேற்கொண்டு, தக்க ஆயுதம்/ஆயத்தம் ஏதுமின்றி, அரசியல் பகடைக்காய்களாய் ஆக்கப்பட்ட IPKF'வை எல்லோரும் இந்த சாத்து சாத்துகின்றீர்களே... இங்கே IPKF செய்தது அனைத்தும் சரியென்ற வக்காலத்து வாங்க வரவில்லை. அதே சமயம் சமரில் நடப்பதெல்லாம் நியாயம் என்ற வரட்டு வாதத்தையும் வைக்கவில்லை. வன்புணர்ச்சி, கொள்ளைகளில் ஈடுபட்டவர் மீது நடவடிக்கையே எடுக்கப்படவில்லையா? ஏற்கெனவே நான் கேட்ட கேள்வியை திரும்பிக் கேட்கின்றேன். இறந்ததாய் சொல்லப்படும் 1200-1500 IPKF வீரர்களில் வன்புணர்ச்சியாலும், ஏனைய சமூகக் குற்றங்களாலும் இறந்தவர் எத்தனை பேர்? இவ்வளவு ஏன்? இறந்தவர்கள் பெயர்களைக் கூட ஒரு இடத்தில் முழுமையாய் என்னால் பெற முடியவில்லை. ஜெனரல். கல்கத் கூறியது போல இலங்கையை விட இந்தியாவில்தான் IPKF அசிங்கப்படுத்தப்பட்டது. இறந்தவர்களின் உடல் கூட இந்திய மண்ணிற்குத் திரும்பவில்லை. வெறும் சாம்பல்தான் வந்தது. சாம்பல் பாக்கியம் கூட அனைவருக்கும் கிட்டவில்லை என்பது உச்சபட்ச கொடுமை.

ஒப்பந்தத்தை புலிகள் மீற இரு காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஒன்று திலீபன் மரணம். இன்னொன்று 17 புலிகள் சயனைட் சாப்பிட்டது. இவ்விரண்டு நிகழ்வுகளிலும் IPKF என்ன செய்தது என்று ஜெனரல் சிங் தனது ரீ-டிப் செவ்வியில் விரிவாகக் கூறியுள்ளார். போய் படித்துப் பாருங்கள். திலீபனைச் சந்தித்து எவ்வாறாவது உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடுமாறு வேண்டுவன செய்யச் சொல்லி ஜெனரல் சிங் தீக்ஷ¢த்திடம் மன்றாடவில்லையா? திரிகோணமலை ATC (Air Traffic Controller) அறையினை முற்றுகையிட்டு இலங்கை இராணுவம் புகமுடியாதவாறு தடுக்கவில்லையா? தவறு யார் மேல்? வஞ்சனையாகச் செயல்பட்ட ஜெயவர்த்தனே மீதா? இல்லை வஞ்சிக்கப்பட்ட இந்திய அரசாங்கம் மீதா? இல்லை பலியாடுகளாக்கப்பட்ட IPKF வீரர்கள் மீதா? வாசகர்கள் பார்வைக்கே விட்டு விடலாம்.

கண்ணி வெடிகளை கண்டுபிடித்து அகற்றும் கருவிகள் கூட இல்லாது ஆடுகளை இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அனுப்பி வைத்தார்கள். கறி சமைத்து சாப்பிட்டு, சீரணிக்க செக்ஸ் வைத்துக் கொள்ளவா இந்த எளிய திட்டம்? கொஞ்சமாவது யோசியுங்கள்.

ஹடிதா சம்பவம் குறித்து Time (ஜூன் 12, 2006) பத்திரிக்கை என்ன கூறுகின்றது?

One of the biggest miscalculations of Iraq war - may be the biggest - was that the US invaded Iraq with a force large enough to topple a Government in 21 days but too small to maintain order in a nation of 26 million with deep ethnic divisions.

அதாவது அமைதியினை ஏற்படுத்த இப்போது இருக்கும் சுமார் ஒன்றரை லட்சம் துருப்புகள் போதுமானதாக இல்லையாம். சதாம் ஹ¥சைன் இருந்தபோது தனது எதிராளி என்று சந்தேகம் வந்தால் கூட போட்டுத் தள்ளி விடுவார். அவர் இருந்தவரை எதிர்ப்பென்னும் மூச்சே கிடையாது. ஈராக்கையே துவம்சம் பண்ணி, சதாமையும் சிறை பிடித்து, நாட்டையே கைக்குள் வைத்திருக்கும் சமயத்தில், துருப்புகளின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு ஊடுறுவும் போராளிகளைச் (?) சமாளிக்க அமெரிக்க இராணுவம் திணறுகின்றது. இவல்களது கழுகுப் பார்வைகளிலிருந்து தப்பி விட்டு எடுத்து வந்த ஆயுதங்கள் எல்லளவு இருக்க முடியும்? இதற்கே அசுர பலம் கொண்ட அமெரிக்கப் படை திணறுகின்றது. கேட்டால் "Exit Policy" சரியாக அமைக்கப்படவில்லையாம்.

தனி அரசு நடத்தி வந்த/வரும் புலிகளின் இராணுவத்துக்கு ஒப்பான ஆயுதங்கள்/ஆயத்தங்கள் முன்னால் வெறும் 60,000 (approx) துருப்புகளை வைத்துக் கொண்டு IPKF என்ன செய்திருக்க முடியும்? அரை மாகஜீன் நிரப்பப்பட்ட புராதன SLR உடன் என்ன சமர் செய்ய முடியும்? இந்த லட்சணத்தில் பஞ்சசீலம் பாழாய்ப்போன சீலமென்று எங்கள் கைகளை பின்னே கட்டி விட்டு சமர் செய்யச் சொன்னார்கள் என்று ஜெனரல் சிங் புலம்புகின்றார். கட்டப்படாமலிருந்தால் மட்டும் இவர்கள் புலிகளை கட்டம் கட்டியிருக்கவா முடியும் SLR கொண்டு? புலிகளுடனான யாழ்ப்பாணச் சண்டையில் ஒன்பது ஹெலிக்காப்டர்கள் தேவையென்று, ஒப்புதல் பெறப்பட்டும் தேவைப்படும் நேரத்தில் கைவிரிக்கப்பட்டு அதனால் இறந்த IPKF வீரர்கள் எண்ணிக்கை இன்னமும் தெரியவில்லை.

இதற்கெல்லாம் யார் பொறுப்பு?

மேலும் விரியும்....

5 comments:

Anonymous said...

பதிவு குசும்பு
அல்லாம் ரொம்ப
சூப்பர்ணா. டபுள்
ஆக்டிங் அத விட
சூப்பர்ணா. பத்து
பின்னூட்டம்
இப்படியே
போடட்டுமாண்ணா?

நீங்கதான்
குசும்பன்னு கை
நழுவி போட்டு ஒட்சு,
அதை டிலிட் பண்ண
ரெண்டு நாள் தோணல.
அப்பால அப்பன்
குதிருக்குள்ளே
இல்லேண்ணு
எதுக்குண்ணா
வேறெடத்திலேந்து
கூவணும். இங்க ஒரு
நாள் அங்க ஒரு நாள்
ஷிப்ட் எதுக்குண்ணா?

திருமலை கடைசில
கருத்து
சொல்லப்போறாரா? அப்ப
வழி போக்கன்ற பேர்ல
சொன்னது என்னண்ணா?
கழிவா?

Anonymous said...

பெயரிலில்லாத ஆக்கங் கெட்ட கக்கூஸா கண்ணா போ போயி கூவிகின்னே இரு... பாபா பாபா பிளாக்ஷீப்புன்னு... பாத்து குண்டக்க மண்டக்க ஆகிடப்போவுது... கக்கூஸுகிட்டேயும் கொஞ்சம் சொல்லி வையி...

அல்வா எட்துக்கின்னு வரேன் பையா...

Anonymous said...

புலிகள் இந்திய இராணுவத்திடம் ஆயுதங்கள் ஒப்படைத்தனர் தானே? அதுவும் மக்கள் முன்னிலையில் பகிரங்கமாகத்தானே நடந்தது. (ஆம் முழு ஆயுதங்களும் கொடுக்கப்படவில்லை. அப்படித் தரத்தேவையில்லையென்று புலிகளுக்கும் ராஜீவுக்கும் நடந்த ஒப்பந்தம் பற்றி பாலசிங்கம் எழுதியுள்ளார். இந்தியத்தரப்பில் அப்பேச்சில் நேரிலிருந்த பண்ருட்டி இராமச்சந்திரன் இப்போது என்ன சொல்கிறார் என்பதை அறிய ஆவல்)

புலிகளின் ஆயுத, ஆட்பலம் பற்றிய உங்கள் கருத்து பிழை. இன்றைக்கிருக்கும் பலத்தைப் பற்றிச் சொல்கிறீர்கள். இந்திய இராணுவத்துடனான சண்டையின் போது இருந்த பலம்தானே கதைக்கப்பட வேண்டியது. சிறுரக ஆயுதங்கள் என்றளவில் புலிகளிடம் நவீனமான, இலகுவான ஆயுதங்கள் இருந்தன. ஆனால் அவைமட்டுமே ஆயுதபலமாகிவிடாது. தோட்டாக்கள், கைக்குண்டுகள் முதற்கொண்டு நிறைய விசயங்களில் அவர்கள் தட்டுப்பாட்டுடன் தான் இருந்தார்கள். ஒரு நேரத்தில் 3 தோட்டாவுக்கு ஒரு சிப்பாய் என்ற கணக்கு அவர்களுக்கு இருந்ததாகச் சொல்வார்கள். போராளிகளின் எண்ணிக்கையும் மிகமிகச் சொற்பமே.

ஆனால் இந்திய இராணுவம் நவீனப்பட்டிருக்கவில்லையென்பதை ஒத்துக்கொள்கிறேன்.
புலிகள் M-16, AK , G-3 வகைத் துப்பாக்கிகளைப் பாவித்தபோது இந்தியப்படை SLR பாவித்துக்கொண்டிருந்தது ஆச்சரியம்தான். அதுகூடப் பரவாயில்லை, இந்தியப்படையின் அணித்தலைவர்கள் ஸ்ரேலிங் SMG யை (எங்கள் மக்கள் அதன் வெளிப்புறத்திலிருக்கும் துளைகளுக்காக அதை 'புல்லாங்குழல்' என்று சொல்லித்திரிந்ததாக ஞாபகம்) முதன்மை ஆயுதமாகக் காவிக்கொண்டு திரிந்ததை (அதன் பின் நீண்டகாலமாக அரசதலைவர்களுக்கு பாதுகாப்பளிக்கும் கறுப்புப் பூனைகள்கூட அதைத்தான் வைத்திருந்தார்கள்) நினைத்தால் ஆச்சரியம்தான். புலிகள் அத்துப்பாக்கியை மிக ஆபத்தான (தவறுதலான சூட்டை ஏற்படுத்தும்) துப்பாக்கியாகக் கருதி ஒரு கட்டத்தில் பாவனையிலிருந்து அகற்றி விட்டார்கள்.
இயந்திரத் துப்பாக்கியில்கூட இந்தியப்படை பிறண் LMG தான் பாவித்தது. எல்லாவற்றிலும் அதிக எடையுள்ள வகையைத்தான் விரும்பினார்களோ என்னவோ?

-ஒரு தமிழன்-

கால்கரி சிவா said...

IPKF மற்றும் காந்தஹார் அவமானங்களை ஒரு பாடமாக கற்று இந்திய ராணுவம் மூன்னேறும் என்பது ஐயமில்லை.

உங்கள் தொடர் மிக அவசியமான ஒன்று .

CAPitalZ said...

Annexure to the Indo - Sri Lanka Agreement

6. The President of Sri Lanka and the Prime Minister of India also agree that in terms of paragraph 2.14 and paragraph 2.16 (C) of the Agreement, an Indian Peace Keeping Contingent may be invited by the President of Sri Lanka to guarantee and enforce the cessation of hostilities, if so required.

பிரச்சனை யாருக்கு? சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும்.
ஒப்பந்தம் யாருக்கு? சிங்களவர்களுக்கும் இந்தியர்களுக்கும்

2.14 The government of India will underwrite and guarantee the resolutions, and co- operate in the implementation of these proposals.

2.16 (C) In the event that the government of Sri Lanka requests the government of India to afford military assistance to implement these proposals the government of India will co-operate by giving to the government of Sri Lanka such military assistance as and when requested.

பிரச்சனை யாருக்கு? சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும்.
ஒப்பந்தம் யாருக்கு? சிங்களவர்களுக்கும் இந்தியர்களுக்கும்

ஆகவே பிரச்சனைப் பட்ட தரப்புகளின் பிரதிநிதிகளுடன் உடன்படிக்கை செய்யாமல் தாங்களாகவே செய்துவிட்டு பிரச்சனையை ஒழிக்கிறோம் என்றால் என்ன கணக்கு?

அப்பாவும் அம்மாவும் சண்டை. அப்பாவும் பக்கத்து வீட்டுக்காரனும் சேர்ந்து "பிரச்சனை" க்கு முடிவுகட்டிவிட ஒரு ஒப்பந்தம், அம்மா இல்லாமலே!

அகிம்சைவாதிகளே... அகிம்சையாலேயே பிரச்சனையை ஊதி ஊதிப் பெரிதாக்கி விட்டீர்களே!

______
CAPital
http://1paarvai.wordpress.com/
http://1kavithai.wordpress.com/
http://1seythi.wordpress.com/