Friday, October 15, 2004

நிதர்சனம்

காலுக்கு கிடைத்த கல்லை
உதைக்கும் உத்வேகம்
விளையாட்டாய் பிறந்த
வினையாய் காதல்

உயர உயரப் பறந்த
உணர்வுகளுக்குத் தெரியாது
தவறி விழுந்தால்
அடி பலமென்று

திகட்ட திகட்ட
திகழ்ந்த இனிப்புத்தான்
பகுத்தறிவு மட்டும்
பல்லிளித்த காலம்

எனக்கு நீ
உனக்கு நான்
அந்தம் கண்டோம்
ஆதியே அறியாமல்

உன் குற்றமா
என் குற்றமா
நதி மூலமா
ரிஷிமூலமா

என் வீட்டு ரோஜா
மணத்தாய் நீ
மல்லிகையாய்
மாற்றான் தோட்டத்தில்

கிட்டாத மாத்திரத்தில்
வெட்டென மறக்காமல்
மௌன அழுகையின் நீட்சியாய்
கேவும் மனம்

No comments: