Friday, January 14, 2005

ஞான சூன்யத்தின் பார்வைகள்

வெ.சா. மற்றும் ஞாநி அவர்களின் கடிதங்கள் 6/1/05 திண்ணை பதிவில் படித்தவுடன் விவரிக்க இயலாத வியப்புக்கு உள்ளானேன். கருத்து சுதந்திரம் என்ற பதமே அர்த்தம் இழந்து சைபர் மற்றும் அவதூறு சட்டங்களின் கட்டமைப்பில் சங்கடங்களை எதிர்நோக்கி காத்திருக்கின்றதோ என்ற ஐயப்பாடே எனக்குள் மேலோங்குகின்றது.

நாணயத்தின் இருபக்கங்கள் போல எக்கருத்திற்கும் எதிர்வினையுண்டு. ஞானி சொல்வது போல் 'பொது நாகரீகத்திற்கு' உட்பட்டு தாம் வேண்டும் எதிர்வினையைப் பதிய யாவர்க்கும் உரிமையுண்டு என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அந்த நாகரீகத்தின் வரையறை யாது? நாகரிகம் என்பதே ஒப்புநோக்குவதன்றோ? நிர்வாண உலகில் கோவணம் கட்டியிருப்பது நாகரீகம் என்பது ஒவ்வாமைதானே? ஆப்கானிஸ்தான் ஆடையலங்காரத்தை 'ஆர்மானி' கலாச்சாரத்துடன் ஒப்பிட முடியுமா?

முதலில் திரு. ஞாநி அவர்களின் கடிதத்தைப் பார்ப்போம். 'ஞானம் கெட்டவர்களின் கோணல் பார்வை' என்று மாயவரத்தான் அவர்கள் திண்ணையில் கடிதம் வெளியிட்டார். அதற்கு பதில் சொல்லியிருக்கும் ஞானி அவர்கள், திண்ணை மின்னிதழும், மாயவரத்தானும் 'பகிரங்க மன்னிப்பு' கேட்க வேண்டுமென 'அன்புடன்' மிரட்டியிருக்கின்றார். இங்கு நான் யாருக்கும் வக்காலத்து வாங்க வரவில்லை. ஆனால் இருவரது கருத்துகளையும் சீர் நோக்கிப் பார்ப்போம்.

மாயவரத்தான் தனது கடிதத்தில் ஞாநியின் 'பார்ப்பனீய எதிர்ப்பை' அவரது 'இயலாமையே' காரணமென்று இடித்துரைத்திருந்தார். ஞானி போன்ற இலக்கியவாதிகளின் இயலாமைக்கு எடுத்துக்காட்டாக ஒரு வாரப்பத்திரிக்கைக்கு மூடுவிழா நடந்ததையும் குறிப்பிட்டு எழுதினார்.

அதற்கு ஞாநியிடமிருந்து வந்த பதில் அணுகுண்டு அவரது முப்பதாண்டுகால பத்திரிக்கை அனுபவத்தையே கேள்விக்குறியாக்குகின்றது. முதலில் நான் சொல்ல விரும்புவது மாயவரத்தான் என்ற 'போர்வையில்' யாருமில்லை. அவர் தனது வலைப்பூவில் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கின்றார். அவரது பெயர் கி.ரமேஷ்குமார். அவரது ரூபக்குறிப்பை இந்த வலைப்பூ சுட்டியில் காணலாம். ஏறத்தாழ ஞாநியின் பத்திரிக்கை அனுபவ காலத்தை தனது வயதாக கொண்டிருக்கும் மாயவரத்தான் தனது கண்ணோட்டத்தில் ஞாநியை கண்டனம் செய்து கடிதம் எழுதினார். அதற்கு பதிலாக 'சைபர் மற்றும் அவதூறு சட்டங்களை' பாய்ச்சுவேன் என்று சீறுகின்றார் ஞாநி. எனக்குத் தெரிந்த வகையில் தேர்ந்த கடைநிலை அரசியல்வாதியின் நிலைப்பாடுதான் இது. எதிர்வினையை எதிரி வினையாய் பாவிப்பதுதான் அவரது முப்பதாண்டுகால பத்திரிக்கை அனுபவமா? பத்திரிக்கை சுதந்திரத்தை கடைச்சரக்காய் பயன்படுத்தும் ஜெ'யின் புகழ் பாடும் ஞாநியின் உள்மனது புரிகின்றது.

ஜூனியர் போஸ்ட் வார இதழின் ஆசிரியராய் 30 ஆயிரம் பிரதிகளை 80 ஆயிரம் பிரதிகளாய் விற்பனையை உயர்த்தியதாய் ஞாநி தெரிவிக்கின்றார். அவரது திட்ட மேலாண்மை திறனுக்கு வாழ்த்து தெரிவிப்போம். அதே சமயம் சட்டங்களைப் பாய்ச்சுவேன் என்னும் அவரது உயர்மனப்பிறள்விற்கு கண்டனம் தெரிவிக்கின்றேன்.

இதற்கு பதிலாக மாயவரத்தானும், திண்ணையும் மன்னிப்பு கேட்ட கடிதங்களை ஞாநி படித்தாராவெனத் தெரியவில்லை. வெ.சா. கடிதம் போலவே பகடிக்கு சிறிதும் குறை வைக்காமல் அவர்களது பதில் கடிதங்கள் இருக்கின்றன. ஞாநியின் புகழுக்கு ஏற்பட்ட இழுக்கு களையப்பட்டதில் எமக்கும் மகிழ்ச்சியே!

'நல்லவேளை நான் பிழைத்துக் கொண்டேன்' என்று எம்ஜியார் போல பாடத் தோன்றுகின்றது. ஞாநியின் 'சபாஷ் ஜெ' கட்டுரைக்கு எனது எதிர் வினையை that's Tamil.com வலைத்தளத்தில் பதிந்திருந்தேன். என்மீது சைபர் சட்டத்தை ஞாநி இன்னும் பாய்ச்சவில்லை.

இம்மாதிரி அரை வேக்காட்டு கட்டு-உரைகளுக்கு எதிர்வினை எழுதி எனது நேரத்தையும், படிக்கும் வாசகர் நேரத்தையும் வீணாக்கியமைக்காக...

ஞாநி அவர்களே இந்த ஞான சூனியத்தை மன்னியுங்கள்!!!

8 comments:

ROSAVASANTH said...
This comment has been removed by a blog administrator.
Vanthiyathevan said...

திரு ரோசாவசந்த்,

உங்களது கருத்துகளுடன் முற்றிலும் ஒத்துப்போகின்றேன். எல்லாவற்றிற்கும் ஓர் அளவுள்ளது. ஞாநி அனைத்தையும் மிஞ்சி விட்டாற் போல் தோன்றுகின்றது.

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

வந்தியத்தேவன்.

மாயவரத்தான்... said...

:)

rajkumar said...

Hi Gnanam,

great reply. good that your broke your long silence and wrote a nice piece

Anbudan

Rajkumar

ROSAVASANTH said...
This comment has been removed by a blog administrator.
ROSAVASANTH said...

பாஸ்டர்ட்!

enRenRum-anbudan.BALA said...

Åó¾¢Âò§¾Åý,
«Õ¨ÁÂ¡É À¾¢×, ÜÃ¡É ¸ÕòÐì¸û!
Á¡ÂÅÃò¾¡ý ±¾üÌ ÁýÉ¢ôÒ §¸ð¼¡÷ ±ýÚ ¾¡ý ÒâÂÅ¢ø¨Ä! þ¾ü¦¸øÄ¡õ ÅÆìÌ §À¡¼Ä¡¦ÁýÈ¡ø, »¡É¢ ±Ø¾¢Â¾üÌ «Å÷ §Áø ¸¢ð¼ò¾ð¼ áÚ §À÷ «ÅàÚ ÅÆìÌ §À¡¼ §ÅñÊ¢ÕìÌõ. ¬É¡ø, ºõÁó¾ôÀð¼Å÷¸û «Åü¨È Á¾¢òÐ ÁÚ¦Á¡Æ¢ þ¼§Å Å¢ÕõÀ Á¡ð¼¡÷¸û, ÅÆìÌ ±í§¸ §À¡ÎÅ¡÷¸û :-)) ¾¢ñ¨½ ÌØ »¡¿¢Â¢¼õ Å¢ò¾¢Â¡ºÁ¡É ӨȢø, «Õ¨Á¡¸ ÁýÉ¢ôÒ §¸¡Ã¢Â¢Õ츢ȡ÷¸û :-) »¡¿¢ìÌ ÒâóÐ «ÅÕõ À¢È¨Ã ÒñÀÎò¾¡Áø ±ØÐÅ¡÷ ±É ¿õҧšõ!


§Ã¡º¡,
«¦¾øÄ¡õ ºÃ¢, ¡¨Ã «ôÀÊò ¾¢ðÊÉ£÷¸û? ±í§¸ ¿¼ó¾Ð þó¾ ®ÆôÀ¢Ã¨É ÌÈ¢ò¾ Å¡ìÌÅ¡¾õ? ӾĢø ¸¡ð¼Á¡É Å¡÷ò¨¾ô À¢Ã§Â¡¸õ ¦ºöÔõ ¿£í¸û À¢ÈÌ «¨Á¾¢Â¡¸ ±¾¢Ã¡Ç¢ìÌ Å¢Çì¸Óõ «Ç¢ì¸¢È£÷¸û? ²ý þó¾ ÓÃñÀ¡Î, «ÅºÃ §¸¡Àõ? ºüÚ ¿¢¾¡Éò¨¾ ¸¨¼À¢Êò¾¡ø ÀÚ¢ø¨Ä :-)

±ý¦ÈýÚõ «ýÒ¼ý
À¡Ä¡

Anonymous said...

I posted my comment earlier in TSCII. Given below, in UNICODE for readability.

வந்தியத்தேவன்,
அருமையான பதிவு, கூரான கருத்துக்கள்!
மாயவரத்தான் எதற்கு மன்னிப்பு கேட்டார் என்று தான் புரியவில்லை! இதற்கெல்லாம் வழக்கு போடலாமென்றால், ஞானி எழுதியதற்கு அவர் மேல் கிட்டத்தட்ட நூறு பேர் அவதூறு வழக்கு போட வேண்டியிருக்கும். ஆனால், சம்மந்தப்பட்டவர்கள் அவற்றை மதித்து மறுமொழி இடவே விரும்ப மாட்டார்கள், வழக்கு எங்கே போடுவார்கள் :-)) திண்ணை குழு ஞாநியிடம் வித்தியாசமான முறையில், அருமையாக மன்னிப்பு கோரியிருக்கிறார்கள் :-) ஞாநிக்கு புரிந்து அவரும் பிறரை புண்படுத்தாமல் எழுதுவார் என நம்புவோம்!


ரோசா,
அதெல்லாம் சரி, யாரை அப்படித் திட்டினீர்கள்? எங்கே நடந்தது இந்த ஈழப்பிரச்சினை குறித்த வாக்குவாதம்? முதலில் காட்டமான வார்த்தைப் பிரயோகம் செய்யும் நீங்கள் பிறகு அமைதியாக எதிராளிக்கு விளக்கமும் அளிக்கிறீர்கள்? ஏன் இந்த முரண்பாடு, அவசர கோபம்? சற்று நிதானத்தை கடைபிடித்தால் பரவாயில்லை :-)

என்றென்றும் அன்புடன்
பாலா