ஞாநியைப் பற்றிய எனது இரண்டு பதிவுகளை ரோஸாவஸந்த் என்பவர் பாராட்டி பின்னூட்டங்கள் இட்டிருந்தார். பின்னர் அப்பின்னூட்டங்களை நீக்கும்படி தனியஞ்சலில் கடிதம் எழுதியிருந்தார். பின்னூட்டம் இடுவதும், அதை நீக்கும்படி கோருவதும் அவரது தனிப்பட்ட உரிமை. அதில் தலையிட நான் விரும்பவில்லை.
எனது பதிவுகளில் அவரது பின்னூட்டங்கள் தானாக நீக்கப்பட்டிருந்தது. யார் நீக்கினார்கள்? எவ்வாறு நீக்கினார்கள் என்று இன்றும் விளங்கவில்லை. பின்னூட்டம் விட்டவரே அழிக்க முடியுமா? பிளாக்கரின் தொழில்நுட்பம் விளங்கவில்லை.
எல்லாவற்றிற்கும் மேலாக கோபமாக அவர் இன்னொரு பின்னூட்டமும் விட்டிருக்கின்றார். அவரது கோபம் படிப்பவர்க்கு ஏதோ நானே அவரது பின்னூட்டங்களை நீக்கியது போன்ற பிரமையை ஏற்படுத்தலாம். ஆனால் நான் அவரது பின்னூட்டங்களை நீக்கவில்லை.
அவரது வேண்டுகோளின் பெயரில் நானே நீக்க நினைத்திருந்தேன். வலைப்பூ என்பது எனது வாசஸ்தலம். அங்கே புழங்குவது எனது உரிமை. அதை விமர்சனம் செய்ய யாவர்க்கும் உரிமை உண்டு. ஆனால் தானே விமர்சனம் செய்து, பின்னர் பின்னூட்டத்தை அழிக்கும் உரிமையும் அவர்க்கே உண்டென்பது ஆபத்தானது.
பின்னூட்டத்தைப் போலவே நாளை நமது வலைப்பதிவுகளையும் 'ஹேக்' செய்யமுடிமோ?
Friday, January 21, 2005
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
Blogger-இல் கணக்கு வைத்திருக்கும் எவரும் தன் சொந்தக் கணக்கு வழியாக தானே எழுதிய பின்னூட்டங்களைத் தானே அழிக்கலாம். (Anonymous-களுக்கு இந்த வசதி கிடைக்காது.)
அவ்வாறு எழுதி அழிக்கும்போது "This post has been removed by the author" என்று வரும். அதைப்போலவே எல்லாருடைய பின்னூட்டங்களையும் வலைப்பதிவரே அழிக்கலாம். அவ்வாறு செய்யும்போது "This post has been removed by the administrator" என்று வரும்.
அதை வைத்து யார் எதை அழித்தார்கள் என்று தெரிய வரும்.
இப்பொழுதைக்கு Bloggerஐ hack செய்த மாதிரி எந்தத் தகவலும் இல்லை.
ஒரு தெளிவிற்காக:
நான்தான் அந்த பின்னூட்டத்தை நீக்கினேன். "removed by the author" என்று அதில் தெளிவாய் சொல்லியிருக்கும். (அப்படி இல்லையெனின் "removed bt blog administrator" என்று சொல்லும்.) நீக்கியது நானே ஆகையால் அது குறித்து கோபம் எதுவுமில்லை. மற்றது ஈழப்பிரச்சனை குறித்து நடந்த அசிங்கமான சண்டையில் வந்தியதேவனின் கருத்துகளை படித்து விட்டு வந்து, அதே கோபத்தில் அளித்த "விமர்சனம்தான்" என் கடைசி பின்னூட்டம். அதை நீக்குவதும், அல்லது அதை காண்பித்து ஃபிலிம் காட்டுவதும், இன்னபிற அரசியல் செய்வதும் மற்றவர்கள் வேலை/.
Post a Comment