Wednesday, October 27, 2004

சாபம் ஓய்ந்தது

பாஸ்டனின் ரெட் சாக்ஸ் அணி பேஸ்பாலில் இன்று உலக தொடரில் (வெறும் அமெரிக்கா அணிகளே விளையாடினாலும்!) வெற்றி பெற்று விட்டது. செயிண்ட் லூயியைச் சேர்ந்த கார்டினல்ஸ் அணியை முதல் 4 ஆட்டங்களில் (மொத்தம் 7 ஆட்டங்கள் கொண்ட தொடரிது) வென்றது. கர்ட் ஷில்லிங்கின் பங்கும், ஏனைய ஆட்டக்களர்கள் பங்களிப்பும் மிக முக்கியமானது. இந்த அணியின் கடைசி 8 ஆட்டங்களில் பெற்ற வெற்றி வரலாற்றில் நிற்கும். 1918'ற்கு பிறகு கிடைத்த சாம்பியன்ஷிப் பட்டம் இதுவென்றால் அதன் முக்கியத்துவம் உங்களுக்குப் புரியும்.

பாஸ்டன் பாலா துள்ளிக் குதிப்பது தெரிகின்றது. வாழ்த்துக்கள் !!!

ஆனால், இந்தியா கிரிக்கெட்டில் மிக மோசமாக ஆஸ்திரேலியாவிடம் அடி வாங்குவதைக் கண்டால் வருத்தமாக இருக்கின்றது. ரெட் சாக்ஸ் அணியிடம் தன்னம்பிக்கையை நாம் கற்றுக் கொள்ளவேண்டும்.

2 comments:

Boston Bala said...

நன்றி வந்தியத்தேவன் :D :-)

கொஞ்சம் டென்ஷன் பட வைத்தாலும் (யான்கீஸுடன் நிறைய), ரொம்ப ஜாலியாக இருக்கிறது.

ப்ருடென்ஷியல் கோப்பையை வென்றபோது (இந்தியாதான் ;-) கிடைத்த சந்தோஷத்தில் பாதியாவது கிடைத்திருக்கும் :-/

Anonymous said...

>>>>வெறும் அமெரிக்கா அணிகளே விளையாடினாலும்

The 'Montreal Expos' are from Canada :))

-dyno