Monday, November 01, 2004

ஒன்பது கோடி மக்களின் ஒருமித்த குரல்

தனிநாடு வேண்டுமென்று ஒருகாலத்தில் திராவிடக் கட்சிகள் குரல் கொடுத்து வந்தன. பின்னாளில் இக்கொள்கை காற்றில் பறக்க விடப்பட்டது நிதர்சனம். காங்கிரஸ் ஆட்சியை தமிழகத்திலிருந்து விரட்ட பகுத்தறிவுக் கொள்கையும், ஹிந்தி எதிர்ப்பும், தனித் தமிழகமும் நல்ல ஆயுதங்களாகப் பயன்பட்டன. இன்று இக்கொள்கைகளை மஞ்சள் துண்டும், கண்ணகி சிலை அகற்றலும், அலகு குத்தி தேரிழுக்கும் அமைச்சர்களும் காற்றில், பறக்க விட்டதை அனைவரும் அறிவர்.

எனது அறிவுக்கண்களை(?) திறக்கும் கட்டுரை ஒன்று சமீபத்தில் படிக்க நேர்ந்தது. அமெரிக்காவிற்கு கியூபா போல இந்தியாவிற்கு தமிழ் ஈழம் இருக்குமாம். ஆஹா என்னே அருமையான தத்துவம்!!! உணர்வுகளால் ஒன்றுபடாத போது பிரிவது இயல்பென்று இந்திய (குறிப்பாக தமிழக) இணைய அறிவிஜீவிகள் 'கதைப்பது' சகஜம்தான். மணிப்பூர் மற்றும் அனைத்து லாட்டரி மாநிலங்களும் உணர்வுகள் ஒன்றுபடாத காரணத்தால் 'விட்டு விடு பேராண்டி' என்று கூறுவது 'இணையப் பெருசுகள்' மட்டுமே சொல்லும் சங்கதி.

இந்தியாவின் கியூபா தமிழ் ஈழமாம்!!! இதற்கு 9 கோடி தமிழரின் ஆதரவாம். உலகில் தமிழ் பேசும் அறிவு ஜீவிகளின் எண்ணிக்கை ஒம்போது (pun intended) கோடியா?

புலி யாருக்கு கிலி ஏற்படுத்துகின்றது? ராம் (ஹிந்து), லலிதா (ஜெய), ராமசாமி (சோ)... என்னப்பா? எல்லோரும் அவா. அதாவது ஆரியர்கள். பூணூல் பார்ட்டி. அடடே திராவிட மடத்(!) தமிழா... சூழ்ச்சி அறிந்து கொள்!!! மறைமுக நிகழ்ச்சி நிரல் அறிந்து கொ(ல்)ள்!!!

கருங்காலிச் சோழர்களும், தமிழ்நாட்டில் வாழ்ந்தும் உணர்வுகளால் ஒன்றாத இணைய ஜீவிகளும், கொள்கைப் பிடிப்பு ஏதுமில்லாத தான் தோன்றிவாதிகளும், இந்திய ரூபாயில் குதம் துடைப்பவர்களும், தோல்பாவைக் கூத்தடிப்பவர்களும், முலைக் கணக்கு அறிய ஆர்வமிக்கவர்களும், சொல்வது கேட்போம். குண்டு கட்டிக் கொல்வதை மறைத்து மனித உரிமை பேசும் மகாத்மாக்கள் சொல்வதைக் கேட்போம்.

பிள்ளை கொடுப்பதே பிரதானமாய்க் கொண்டு, அமைதி காக்கச் சென்று விரை வீங்கிய (பிள்ளைகள் எக்கச்சக்கமாய் கொடுத்ததால்) இந்தியாவிற்கு இதுவொரு எச்சரிக்கை. பிழைத்துக்கொள். யோனியில் வெடியோடு உன்னருகே அமெரிக்க க்யூபாவாய் நான்!!! மீண்டும் பிள்ளை கொடுக்க முயலாதே. இலக்கிய எச்சரிக்கை இல்லை இது!!! விரைகள் வெடித்து விடும்!!!

ஹே ராம்! நீ "தமிழனில்லை". நீயொரு பூணூல் புனைந்த "ஆரியன்". அதனாலே உனக்கு அறிவிருப்பினும் தகுதியில்லை. ஒதுங்கிக் கொள். சோ... "நீ சும்மா இரு". லலிதா நீ ஒரு "நடிகை". இலங்கை பிரச்னை பற்றி பேச உனக்கு தகுதியில்லை. உப்புமா படம் எடுக்கும் மணிரத்னம் போல். ரங்கராஜனே (சுஜாதா) உனக்கு வயதாகிவிட்டது. இனிமேல் சினிமா வசனம் எழுதினால் 'கன்னத்தில் சம்மிவிட்டால்' அப்படியென்று 'கற்றதும் பெற்றதும்' தொடரில் எழுத வேண்டியிருக்கும். எச்சரிக்கின்றேன்.

நான் இந்தியாவின் கியூபா எச்சரிக்கின்றேன்.

No comments: