Thursday, April 06, 2006

சில நேரங்களில் சில மனிதர்கள்-5

விட்ட குறை தொட்ட குறையாக இத்தொடரை நான் முடிக்க விரும்பவில்லை.

இணைய அரசியல், தர்க்கம், விவாதம் போன்றவற்றில் ஆர்வமில்லாதவர்களும் இப்பதிவினைப் படியுங்கள்.

செய்தித்தாளில் ஒரு துர்சம்பவம் பற்றி செய்தி வருகின்றது. குறைந்தபட்ச மனநலம் கொண்ட யாருமே அச்சம்பவம் குறித்து தமக்குள்ளேயே நிறைய கேள்விகளை எழுப்பி, அதற்கான உண்மைக் காரணங்களை அறிய முற்படுவது இயற்கை. ஆனால் நடந்தது என்ன?

இந்திய மீனவர்கள், இலங்கை கடற்படையால் சுடப்பட்டார்கள் என்று டெக்கான் க்ரோனிக்கிளில் செய்தியை வாசிக்கின்றார் ரோஸா. அவர் உடனடியாக செய்த அடுத்த காரியம் என்ன தெரியுமா? ஹிந்து பேப்பரைப் பினாயில் ஊற்றிக் கொண்டு இதே செய்தி வந்திருக்கின்றதா என்று பார்த்ததுதான். ரோஸாவின் நோக்கமென்னவோ? இதனால் சுடப்பட்ட மீனவர்களுக்கு ஏதேனும் நன்மை விளையப்போகின்றதா? இந்து ராமின் செயல்பாடுகளின் உள்நோக்கத்தைத்தான் ஏற்கெனவே உங்களைப் போன்றவர்கள் இணையத்தில் "வெளிச்சம்" போட்டுக் காட்டிவிட்டார்களே? இன்னும் மிச்சம் மீதி உள்ளதா?

பிறகு ஒரு கோர்வையில்லாத பதிவு. அதில் வழக்கம் போல் சலம்பல் சொற்றொடர்கள். பிரச்சினை குறித்து உண்மையான அக்கறை உள்ளவருக்கு சாதாரண படகிற்கும், டிராலருக்கும் கூட வித்தியாசம் தெரியவில்லை. இந்திய கடற்படை மற்றும் இந்திய கடற்பாதுகாப்பு படை (Indian Navy & Indian Cost Guard) மற்றுமிவை இரண்டிற்குமுண்டான வேறுபாடுகளைக் கூட ரோஸா அறியவில்லை. தமிழக தேர்தல் பற்றி கருத்து கூறும்படி ரோஸாவை ஒருவர் கேட்டிருக்கின்றார். அவசரத்தில் ரோஸா "பாராளுமன்ற தேர்த்லைப்" பற்றி எழுதிவிடப் போகின்றார். யாரேனும் கேள்வி கேட்டால் "தேர்தலைப்" பற்றி தான் பேப்பரில் படித்த அடிப்படையில் எழுதினேன் என்று சால்ஜாப்பு சொல்லி விட்டால் சந்தோஷம்.

இந்த லட்சணத்தில் நான் எழுதியது ஏன் (என் முதல் பதிவைக் குறித்து) என்று அனைவருக்கும் தெரியும் என்ற கயமைத்தனமான திரிப்பு வேறு. எழுத நேரமில்லை என்று புலம்பி விட்டு 1800 வார்த்தைகளில் எனக்கு அர்ச்சனை செய்யும் நேரத்தில் உருப்படியாக எதையாவது பிரச்சினை குறித்து படித்து விட்டு வந்திருக்கலாமே? இவ்வளவு ஏன்? கூகிள் தேடுபொறியையாவது உபயோகித்திருக்கலாமே?

பணிப்பளு அனைவருக்கும் உண்டு. விரும்பியோ, விரும்பாமலோ உங்களுக்கு அறிவுஜீவி பட்டம் சூட்டி உங்களது வாசகர் வட்டம் ஆர்ப்பரிக்கின்றது. அவர்களுக்காகவாவது பிரச்சினை பற்றி நேர்மையாகத் தெரிந்துகொண்டு, தெளிவாகப் பேசியிருக்கலாம். அப்படி செய்திருந்தால் உங்களது வாசக வட்டம் காணாமல் போய்விடுமே. அவர்கள் விரும்புவது உங்களது இந்த வெற்று சவடால்கள் தானே. பதிவுகளில் உங்களை இணைய சண்டியராய் உருவகம் செய்து கொண்டு காட்டமாய்க் கேட்டேன், தடித்த உடை, உறுப்பு நுழைத்தல், புடுங்குதல், குறியறுத்தல் என்று நீங்கள் எகிறிக் குதிக்க, பாருங்கள் உங்கள் விசிலடிச்சான்குஞ்சுகள் "ஆடுறா ராமா ஆடுறா ராமா" என்று கைதட்டி களிப்படைகின்றன!

டின் பிகா-பங்களாதேஷ் விவகாரத்தை நான் முதல் பதிவில் கோடு காட்டிய பின்னராவது அது குறித்து படித்திருக்கலாம். அதை விட்டு விட்டு பின்னால் சால்ஜாப்பு நான் சொல்லப்போகின்றேன் என்று ஜோஸ்யம் கூறுகின்றார்.

வாசிப்பைக் கடத்தியவர், திரிப்பு செய்பவர், கேனத்தனமாய் கேள்வி கேட்பவர், முட்டாள் போல் பேசுபவர், அறிவு நேர்மை இல்லாதவர், ஆதாரமின்றி பேசுபவர், தர்க்க யோக்கியதை இல்லாதவர், அயோக்கியத்தனம் கொண்டவர், ஹிப்போகிரட், நார்மலில்லாத ஆசாமி, உளறுபவர் எல்லாவற்றிற்கும் மேலாக தர்க்க சுயமைதுனம் செய்பவர் என்று நீங்கள் எனக்குக் கொடுத்த அத்தனை அடைமொழிகளையும், அந்த அடைமொழிகளுக்கு முழுதும் பொருத்தமானவர் தாங்களே என்பதால் மனமுவந்து திருப்பித் தருகின்றேன். அருள் கூர்ந்து ஏற்றுக் கொள்ளவும்.

பதிலுக்கு நான் நன்றியைக் கூட எதிர்பார்க்கவில்லை.

இணையத்தில் ஆரோக்கியமான விவாதங்கள் வளர வேண்டுமென்ற அடங்காத ஆவல் எனக்குண்டு. அது சாத்தியப்படும் என்ற அசையாத நம்பிக்கையும் எனக்குண்டு. தர்க்கம் என்பது எழுதியவரைத் தாக்குவதோடு இருந்து விடக்கூடாது. அது கருத்து ரீதியானதாகவும் இருக்க வேண்டுமென்ற நோக்கத்தில் எழுதப்பட்ட தொடரே இது. ஒரு நிகழ்வைக் குறித்த கருத்துகளை பல்வேறு கோணங்களிலிருந்து, பலரால் ஆராயப்பட்டால், உருப்படியான முடிவுகளுக்கு நாம் வர முடியும். அதற்காகவாவது விவாதங்கள், அதுவும் இணையத்தில் தொடரப்பட வேண்டும்.

தொடருமா?

14 comments:

Srikanth Meenakshi said...

எனக்குத் தெரிந்திராத பல விஷயங்களை அறிமுகப்படுத்திய பயனுள்ள கட்டுரைத் தொடராக இது அமைந்தது. நன்றி. எல்லாச் சர்ச்சைகளிலும் சமச்சீரான இரண்டு பக்கங்கள் இருக்கும் என்பது உண்மையில்லை என்றாலும், நடைமுறையில் பல சமயங்களில் அது உண்மை என்று எனக்கு மறுபடி உணர்த்தும் விவாதமாக இது உள்ளது.

//இணையத்தில் ஆரோக்கியமான விவாதங்கள் வளர வேண்டுமென்ற அடங்காத ஆவல் எனக்குண்டு. அது சாத்தியப்படும் என்ற அசையாத நம்பிக்கையும் எனக்குண்டு. தர்க்கம் என்பது எழுதியவரைத் தாக்குவதோடு இருந்து விடக்கூடாது. அது கருத்து ரீதியானதாகவும் இருக்க வேண்டுமென்ற நோக்கத்தில் எழுதப்பட்ட தொடரே இது. ஒரு நிகழ்வைக் குறித்த கருத்துகளை பல்வேறு கோணங்களிலிருந்து, பலரால் ஆராயப்பட்டால், உருப்படியான முடிவுகளுக்கு நாம் வர முடியும். அதற்காகவாவது விவாதங்கள், அதுவும் இணையத்தில் தொடரப்பட வேண்டும்.//

ஒரு சிறு மாற்றத்தோடு உங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன் - "தர்க்கம் என்பது எழுதியவரைத் தாக்குவதோடு இருந்து விடக்கூடாது. அது கருத்து ரீதியானதாகவும் இருக்க வேண்டுமென்ற நோக்கத்தில" என்பதற்கு பதில், "தர்க்கம் என்பது எழுதியவரைத் தாக்குவதாக இருக்கக்கூடாது. அது கருத்து ரீதியானதாக இருக்க வேண்டுமென்ற நோக்கத்தில்" என்று இருந்தால் நல்லது :-)

PKS said...

//Srikanth: எனக்குத் தெரிந்திராத பல விஷயங்களை அறிமுகப்படுத்திய பயனுள்ள கட்டுரைத் தொடராக இது அமைந்தது. நன்றி. //

Amen.

Anbudan, PK Sivakumar

ROSAVASANTH said...

வந்தியதேவன்,

ஏற்கனவே குறிப்பிட்டபடி நிறய பல விவரங்களுடன் எழுதியிருக்கிறீர்கள். உங்களுக்கு(இருப்பதாக நீங்களே சொல்லும்) அனுபவமும் எனக்கு கிடையாது. என் முதல் பதிவும் சரி, தொடர்ந்த பதிவுகளும் சரி, மீன் பிடிப்பது தொடர்பான பிரச்சனைகள் குறித்த விபரபூர்வமாக இல்லை என்பதை ஒப்புகொள்வதில் எந்த பிரச்சனையும் இல்லை. இந்த பிரச்சனை குறித்து பேசும் பலருக்கும் அவையெல்லாம் தெரிந்திருக்கிறதா என்பதும் சந்தேகமே.

வழக்கம் போல பலர் செய்வது போல், இப்படி மொட்டையாக, பல குற்றச்சாட்டுக்களை கூறி செல்லாமல், ஓரளவிற்காவது நான் எழுதியதை நீங்கள் எதிர்கொண்டிருந்தால் நிச்சயம் மனமுவந்து என் கருத்தை மற்றி கொண்டு, உங்களை பாராட்டுவதில் எனக்கு எந்த மனத்தடையும் இருந்திருக்காது.

திரிப்பது, உள்நோக்கம் கற்பிப்பது இவற்றில் யார் முண்ணணியில் நிற்கிறார்கள் என்று நீங்களே பரிசீலித்து கொள்ளலாம். நான் ஒரு தர்க்கத்திற்கு கேட்ட கேள்வியை திரித்து, என்னை புலிகளின் ஆதாரவாளன் என்றும், 'இதுதானா உங்கள் பிரச்சனை?' என்று திரித்தது நீங்களா நானா? நான் தமிழ்தேசியம் என்பதை எதிர்பதற்கு பல ஆதாரங்கள் என் பதிவிலேயே இருக்கும் போது, அந்த சிமிழில் அடைத்தது என்ன விவாத நேர்மை?

சரி, நான் என்ன திரித்து விட்டேன் என்று எடுத்துக் காட்டமுடியுமா? சில நேரங்களில் ரோசா போல சில மனிதர்கள் எழுதுவதற்கு எதிர்வினையாய் எழுத வந்தீர்களா அல்லது, மீனவர்கள் தாக்கப்பட்டதற்கு கொதித்து எழுந்து எழுத வந்தீர்களா? முதலில் மனதை தொட்டு சொல்லிப் பாருங்கள்.
உங்களின் முதல் பதிவை முன்வைத்து பேசலாம், நான் என்ன வகையில் திரித்திருக்கிறேன் என்பதை. இந்தியா மீதான என் தாக்குதலை முன்வைத்துதான் எழுத வந்தீர்கள் என்பதை உங்கள் பதிவின் வரிகளை வைத்து பேசுவது மிக எளிது. என்ன திரித்திருக்கிறேன் என்று உங்கள் பதிவை வைத்தே நீங்கள் பேசலாமே!

அடுத்து நீங்கள் இத்தனை பதிவுகளில் நீங்கள் அதிகமாய் பேசிய பிரச்சனை இலங்கை மீனவர்களுக்கும், தமிழகத்து மீனவர்களுக்கும் உள்ள ஒரு பிரச்சனை. நான் அதை பற்றி பேசுவது (இந்த பிரச்சனையின் போது) திசை திருப்பல் என்கிறேன். ஈழத்தமிழ் மீனவர்களின் மீன் பிடிதொழில் பாதிக்கும் காரணத்திற்கும், இலங்கைப் படை தமிழகத்து மீனவர்களை தாக்குவதற்கும் தொடர்பிருந்தால் இதை பேசுவதில் பொருள் இருக்கும். ஈழத்து மீனவர்கள் மீன் பிடிக்க தடையிருந்த காலத்திலும், இதே தாக்குதல்கள் நடந்தனவே. மேலும் இந்திய எல்லைக்குள் நுழைந்ததற்கும், இந்திய எல்லையில் நடந்த தாக்குதல்களுக்கும், இந்திய எல்லையில் நுழைவது குறித்து இந்தியா அலட்டி கொள்ளாதது பற்றியும் மட்டுமே நான் மீண்டும் மீண்டும் பேசியிருக்கிறேன். எனக்கு பதில் சொல்வதாக உள்ள இரண்டு பதிவுகளிலும் அதற்கு உருப்படியான பதில் இல்லை என்பதை, நீங்களே நிதானமாய் வாசிக்க நேர்ந்தால் புரிந்துகொள்ள கூடும்.

என் பதிவில் காட்டமான வார்த்தைகள் உண்டு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதுனோடு கூடவே விஷயம் பற்ற்றியும் பேசியுள்ளேன். வார்த்தைகளை மட்டும் பிடித்து கொண்டு தொங்குவீர்கள் என்பது தெரியும் என்றாலும், அப்படி எழுதாவிட்டாலும் விஷயத்தை யாரும் பிடித்து தொங்கப் போவதில்லை என்பதால், உங்களுக்கு அப்படி உதவுவதில் எனக்கு பிரச்சனையில்லை. ஏதேனும் ஒரு இடத்தில் என் வார்த்தைகளை விட்டுவிட்டு, பேசிய விஷயத்தை/தர்க்கதை பிடித்திருந்தால், என்னை பற்றி மட்டும் விமர்சிக்கும் இந்த பதிவில் ஒரு இடத்திலாவது நான் எழுப்பியவைகளுக்கு ஏதாவது ஒரு பதில் இருந்திருந்தால் உங்கள் வாதங்களில் தார்மீகம் இருந்திருக்கும்? trawler என்ற வார்த்தை தெரியவில்லை, கூகிளில் தேடவில்லை என்று நீங்களாக, உங்களுக்கு வேறு சில விவரங்கள் தெரிந்ததை சாதகமாக்கி மட்டம் தட்டியதும், ஸ்வீப்பிங் ஸ்டேட்மெண்ட்களாக பேசியுள்ளதையும் தவிர இந்த பதிவில் வேறு என்ன இருக்கிறது?

மேலும் சில விஷயங்கள் என் பதிவில். நன்றி.

Vanthiyathevan said...

ஸ்ரீகாந்த்,

//ஒரு சிறு மாற்றத்தோடு உங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன் - "தர்க்கம் என்பது எழுதியவரைத் தாக்குவதோடு இருந்து விடக்கூடாது. அது கருத்து ரீதியானதாகவும் இருக்க வேண்டுமென்ற நோக்கத்தில" என்பதற்கு பதில், "தர்க்கம் என்பது எழுதியவரைத் தாக்குவதாக இருக்கக்கூடாது. அது கருத்து ரீதியானதாக இருக்க வேண்டுமென்ற நோக்கத்தில்" என்று இருந்தால் நல்லது :-)//

""தர்க்கம் என்பது எழுதியவரைத் தாக்குவதோடு இருந்து விடக்கூடாது." இது நான் ரோஸாவிற்கு கூறியது. பெயரைப் போட மறந்ததால் வந்த வினை. சுட்டியமைக்கு நன்றி.

//எனக்குத் தெரிந்திராத பல விஷயங்களை அறிமுகப்படுத்திய பயனுள்ள கட்டுரைத் தொடராக இது அமைந்தது.//

வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி.

Vanthiyathevan said...

நன்றி பிகேஎஸ். நலமா?

Vanthiyathevan said...

ரோஸா,

ஒரு விண்ணப்பம். எனது பதிவுகளை நிதானமாக மீள்வாசிப்பை செய்யமுடியுமா? அதன் பின்னர் நீங்கள் கேட்ட கேள்விகளுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லையென்றால் மறுபடி வாருங்கள். பதில் சொல்லுகின்றேன்.

முகமூடி said...

நல்லதொரு தொடர் "எனக்குத் தெரிந்திராத பல விஷயங்களை அறிமுகப்படுத்திய பயனுள்ள கட்டுரைத் தொடராக இது அமைந்தது. நன்றி"

Anonymous said...

Hello,

Mr.Vanthiyathevan...
I understand that you have given lots of information in this 5 part thread. But you also unnecessarily targetted Rosa for worthless points.
You could have very well pointed out politely what was wrong in his post. For example, he need not call the Indian authority as the "north guy" who is not willing to safe guard the tamil fihsers.

I understand Rosa gets excited even for small things and writes too much about that. But this is not an event to leave that way.

Its human nature to write about these mishaps. But you were trying to point out that Roza is almost completely talking non-sense.

Just because you could give lot of statistics does not necessarily mean that you are touching the heart of the problem.

Finally my question is ...by arguing in this way do you think no more Indian fishers will get killed? If there is nothing going to happen to supress that...I would say shut the hell up and do your work at office.

If you guys want to do something useful make sure the Indian Government or the Tamil Nadu governemnt gets to know this matter's seriousnous. Other than that don't argue about your body parts and try to prove that which one is bigger than the counterpart.

Sorry that if I said anything strong.

Vanthiyathevan said...

முகமூடி,

நன்றி.

நீங்களும் இப்பிரச்சினை குறித்து உங்களின் கருத்தைப் பதியலாமே. இதுவும் ஒரு விண்ணப்பமே.

Vanthiyathevan said...
This comment has been removed by a blog administrator.
rajkumar said...

வந்தியத் தேவன்,

நீண்ட நாட்கள் கழித்து, அடுத்த பதிவு எப்போது வரும் என ஆர்வத்துடன் எதிர்பார்த்து படித்த பதிவு. பெரும்பாலான பிரச்சனைகளுக்கும் நம்மிடையே மேலோட்டமான கருத்தும், தெளிவும்தான் இருக்கிறது. பிரச்சனைகள் நம்மை நேரடியாக பாதிக்காத வரை அதன் ஆதாரங்களை, அடிப்படையை பற்றி அறிந்து கொள்ள நாம் ஆர்வம் காட்டுவதில்லை. அந்த வகையில் மீனவர்களின் பிண்ணனியில் இருக்கும் ஆதாரச் சிக்கல்களை இக்கட்டுரைகள் எடுத்துக் காட்டியது.

ரோசாவிம் மீதான ஆதங்கங்களை நீக்கி பார்த்தால் மிகச் சிறந்த கட்டுரை எழுதப்பட்டுள்ளது என்பது தெரியும்.இதைப் பொன்ற கட்டுரைகளை நிறைய தொடர்ந்து எழுதவும்.

அன்புடன்

ராஜ்குமார்

Anonymous said...

IMHO,
Mr.Vasanth raises questions about the attacks by SriLankan
navy on Indian fishermen within sea limits of India. Your posts fail to address this question adequately.
Yet this basic fact has not been understood by some bloggers.

Vanthiyathevan said...

ராஜ்,

நியாயமான கருத்து ஆதங்கம் குறித்தது.

ஊக்கத்திற்கு நன்றி.

அடுத்த கட்டுரைக்கு உழைக்க ஆரம்பித்து விட்டேன். ஆதங்கம் தொலைத்து எழுத உத்தேசம். பார்ப்போம்.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.