ஹைபர்னேஷன் எனப்படும் "நீண்ட தூக்கம்" கலைந்தது ஒரு விதத்தில் நல்லதுதான். ரோஸாவசந்த்தின் இன்னும் எத்தனை காலம்தான் என்ற பதிவினைப் படிக்க நேர்ந்தது. முற்றிலும் மாறுபட்ட, இணையத்தில் வேறு யாரும் இதுவரை பயன்படுத்தாத பிற்போக்கு வார்த்தைகளான இந்தியா, அதன் இறையாண்மை, இந்திய கடற்படையின் நோக்கம் என்றெல்லாம் கனத்த விஷயங்களைக் கதைத்திருக்கின்றார்.
சில நேரங்களில் "இப்படியும்" சில மனிதர்கள்....என்று அலுப்போடு இப்பதிவினை நான் ஒதுக்கிவிடத் தயாராயில்லை. எனது இந்தப் பதிவு வெறும் ரோஸாவசந்திற்கு எதிரான பதில் வினை என்று மட்டுமே என்னை சுருக்கிக் கொள்ள விழையாமல், இந்திய-இலங்கை மீனவர்களின் இன்றைய உண்மையான பிரச்சினை என்ன? அதற்கு மாற்று என்ன என்று வரும் பதிவுகளில் விவரமாக அலச உத்தேசித்துள்ளேன்.
அரசியல் முடிவுகள் அனைத்துமே பிற்காலத்தில் நன்மை பயக்குமென்று கூறிவிட முடியாது. அதுவும் இந்தியா போன்ற வலுவான ஜனநாயக நாட்டில் முடிவுகளின் பலன்களை "அரசியல்வாதிகளின் நோக்கங்கள்" மட்டுமே தீர்மானிப்பதில்லை.
11, டிசம்பர் 1971: கிழக்கு பாகிஸ்தானைப் பிரித்து பங்களாதேஷ் ஆக்கியதன் பலனை இன்னமும் பாகிஸ்தானின் காஷ்மீர் ஊடுருவல் மூலம் அனுபவித்துக் கொண்டு இருக்கின்றோம். சரி இந்தியாவால் சுதந்திரம் பெற்ற பங்களாதேஷாவது நம்மோடு நட்பு பாராட்டுகின்றதா என்றால் அதுவும் இல்லை. பங்களாதேஷ் தேசியவாதிகளின் கட்சியின் (Bangaladesh Nationalist Party) தலைவரான பேகம் காலீதா ஜியா, இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் ஊடுருவும் தீவிரவாதிகளை "சுதந்திரப் போராட்ட வீரர்கள்" என்று புகழாரம் சூட்டியவர். பாகிஸ்தான் அதிபர் ஜெனரல் பர்வேஸ் முஷாரப் கூட இந்திய இறையாண்மைக்கு காஷ்மீரில் குந்தகம் விளைவிக்கும் தீவிரவாதிகளை அவ்வாறே விளிப்பார். இதைத்தான் தலைவலி போய் திருகு வலி தேடிக் கொள்வதென்பார்கள். இருப்பினும் ஷேக் முஜிபுர் ரஹ்மான் இருந்தவரை பங்களாதேஷோடு இருதரப்பு உறவுகள் நன்றாகத்தான் இருந்தன. அப்படியிருப்பினும் டின் பிகாவை (Tin Bigha) இந்தியா பங்களாதேஷிற்கு குத்தகைத் தாரை வார்த்தது. இதன் குறித்த இப்பிரச்சினையின் ஒப்பீடு வரும் பதிவுகளில் விளக்கமாக ஆராயப்படும்.
28 ஜூன் 1974: கச்சத்தீவை இந்திரா இலங்கைக்குத் தாரை வார்த்து கொடுத்தார். இந்திராவின் கூற்றுப்படி கச்சத்தீவு ஒரு "யுத்த தந்திரப்படி முக்கியமில்லாத வெறும் பாறை". ஆனால் அப்பாறையைச் சுற்றி Tiger Prawns எனப்படும் இறால் மீன்கள் அதிகம். இராமேஸ்வரம் மற்றும் இதர கரைகளிலிருந்து தமிழக மீனவர்களை இப்பாறை தொடர்ந்து ஈர்த்தது. 1974'ல் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தப்படி, இந்திய மீனவர்கள் கச்சத்தீவில் தலைமுறை வழக்கப்படி (traditional rights) மீன் பிடிக்கும் உரிமையையும், புனித அந்தோணியார் விழாவில் கலந்து கொள்ள அனுமதியும் பெற்றார்கள்.
இந்த ஒப்பந்தத்தின் 5'வது ஷரத்து சொல்கின்றது "இந்திய மீனவர்களும், பக்தர்களும் கச்சத்தீவிற்கு தாராளமாக விரும்பும் போது செல்ல இதன்மூலம் வழிவகை செய்யப்படுகின்றது. இதற்காக இலங்கையிலிருந்து பயண ஆவணங்களோ விசாவோ வாங்க வேண்டிய அவசியமில்லை.
6'வது ஷரத்து: இந்தியா மற்றும் இலங்கையின் கலங்கள் தலைமுறைகளாக இருந்து வரும் வழக்கப்படி இருவருக்கும் சொந்தமான கடற்பரப்பில் தொடர்ந்து இயங்கி வரும்.
கச்சத்தீவினை தானம் கொடுத்தவுடன் இந்தியாவிற்கு இலங்கையின் அன்பு தேர்ந்தெடுக்கப்பட்ட விதயங்களிலேயே (தற்காலிகமாகவே) இருந்தது வந்தது. இன்றைய தமிழக/இலங்கை மீனவர்களின் பிரச்சினைக்கு இந்திராவின் கச்சத்தீவு முடிவே தொடக்கமென்றாலும், 1974 ஒப்பந்தம்தான் தெளிவாக இருக்கின்றதே? அதன் ஷரத்துகளை தீவிரமாக செயல்படுத்துவதின் மூலம் பிரச்சினைக்கே முற்றுப் புள்ளி வைக்கலாமே?
கச்சத்தீவு பிரச்சினையில் மேற்கூறிய டின் பிகா சம்பவத்தை இக்கணத்தில் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கின்றது, எனது அடுத்த பதிவுகளில் இது குறித்து விரிவாக எழுத எண்ணங் கொண்டுள்ளேன்.
ரோஸா கூறுவது போல இது வெறும் என்பது ஒரு இலங்கை ராணுவம் மட்டுமே இந்திய மீனவர்களைக் தாக்குகின்றது பக்க கதை. 1983'லிருந்து 2002 வரை மொத்தம் 112 இந்திய மீனவர்கள் இலங்கையின் கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள் என்று ஹிந்துவின் இணையதளம் (Frontline) கூறுகின்றது. ஹிந்து பத்திரிக்கையை பினாயில் ஊற்றி தேடிப்படிக்கும் ரோஸாவசந்திற்கான செய்தி இது.
3 & 5 மார்ச் 2003: பெசாலை மற்றும் நெடுந்தீவைச் சேர்ந்த இலங்கைவாழ் தமிழ் மீனவர்கள், கச்சத்தீவினுக்கருகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் மற்றும் மண்டபத்தைச் சேர்ந்த 154 இந்திய மீனவர்களைத் தாக்கி 21 படகுகளைக் கைப்பற்றினார்கள். தாக்கியவர்கள் வேறு யாருமில்லை. மண்டபம் மற்றும் நாகப்பட்டினத்தில் அகதிகளாய் 19 வருடங்கள் இருந்துவிட்டு, புலிகள் + இலங்கை போர் நிறுத்த ஒப்பந்தம் போட்டவுடன் மீண்டும் மீன் பிடிப்பை தொடங்கியவர்கள். இப்போது அவர்கள் போட்டியாய் நினைத்தது தமிழக மீனவர்களை. இலங்கை இராணுவம் தாக்குகின்றது என்றால் "அதன்" நோக்கங்களை யாரும் கற்பிதம் செய்து கொள்ள முடியும். ஆனால் முன்னாள் இரத்த சொந்தங்கள் தாக்குவதை எப்படி நியாயம் செய்வது?
கடற்பாதுகாப்பு என்பது இந்திய கடற்படையும், கடற்கரை பாதுகாப்புப் படையும் (Indian Coast Guard) இணைந்து, இயைந்து செயல்படுத்தும் பணியாகும். இப்படைகளை இயக்கும் கமாண்டர்கள் தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுக்க இயலாது. ரோந்திற்கு செல்லும்போது, இந்திய இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் இலங்கை தன் "உறுப்பை" நுழைத்தாலும், ரோஸாவசந்த் கூறுவது போல "தன்னிச்சையாய்" குறியை அறுக்க முடியாது என்பது கசப்பான ஜனநாயக உண்மை. இந்திய அரசின் வெளிப்படையான "உத்தரவின்றி" இராணுவமோ, விமானப்படையோ, கடற்படையோ, கடற்பாதுகாப்புப் படையோ ஏனைய மத்திய பாதுகாப்புப் படைகளோ ஒன்றுமே செய்யாது. தன்னிச்சையாக முடிவெடுக்க இந்தியாவின் படைகளுக்கு ஜனநாயகமில்லை. ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் உத்தரவுக்கு கீழ்ப்படிந்து நடப்பதே அப்படைகளின் சிறப்பு. அவர்களை அந்நிய நாட்டின் கைக்கூலிகளா என்று ரோஸா கேட்பது நல்ல நகைச்சுவை. அங்கதம்/நகைச்சுவை' பிரிவில் அவர் தனது பதிவை தேன்கூடில் பதிவு செய்து கொள்ளலாம்.
//இலங்கை கடற்பரப்பில் தமிழகத்து மீனவர்கள் நுழைந்ததாகவே வைத்துகொள்வோம். முற்றிலும் தண்ணிராய் இருக்கும் கடலில் இந்திய எல்லையையும், இலங்கைக்கு சொந்தமான கடற்பரப்பையும், சாதாரணப் படகுகளில் சென்ற மீனவர்கள் எப்படி அடையாளம் காண முடியும்?//
ஐய்யா ரோஸா! GPS (Global Positioning Syatem) இல்லாமலேயே ஆதிக்காலத்திலிருந்து கடற்வலம் வந்தவன் தமிழன். "அறியாமல்" அடுத்தவரின் கடலெல்லைக்குள் நுழைந்த சாதாரணப் படகுகள் என்று சால்ஜாப்பு வேண்டாம். நுழைந்தது சாதாரணப் படகுகள் கிடையாது. அவை Trawlers எனப்படும் ஆழ்கடல் விசைப்படகுகள். மேலும் இராமேஸ்வரத்திலிருந்து 18 கிமீ தூரத்திலிருக்கும் கச்சத்தீவிற்கு சாதாரண மோட்டார் பொருத்திய படகுகளைவிட ஆழ்கடல் விசைப் படகுகளே அதிகம் செல்லுகின்றன. அவ்வகை விசைப்படகுகள் செய்வது "மீன் கொள்ளை" (poaching) என்று இலங்கை மீனவர்கள் கருதுகின்றார்கள்.
//புலிகளின் கப்பல் ஒன்று, இந்திய கடற்பரப்பிலோ, அல்லது அப்படி பிறகு செய்தியில் சொல்லப்படும் அகில உலக பரப்பிலோ, போனால் அதை தடுத்து அதில் உள்ளவர்கள் மீது இந்திய கடற்படை தாக்குதல் நடத்தும். அதில் உள்ளவர்களை கைது செய்யும். நியாயம்தானே!//
ஓ... இதுதான் உங்களின் தார்மீகப் பிரச்சினையா? நானென்னவோ உங்களைப் போன்ற அறிவுஜீவிகளுக்கு விளக்கம் அளிப்பதாய் இதுவரை நினைத்துக் கொண்டிருந்தேன். உங்கள் பிரச்சினை ஜனநாயக முறையில் நடுவண் அரசின் கட்டளைக்கு அடிபணியும் இந்திய இராணுவத்திற்கும், தன்னிச்சையாய்/யதேச்சாதிகாரமாய் முடிவுகளை செயல்படுத்தும் பாஸிஸ அமைப்பிற்கும் உள்ள வேறுபாடுகளை அறியாதன் தன்மையை வெளிக்காட்டுவதாய் தெரிகின்றது.
//தமிழகத்து கடற்கரையில் நிலைகொண்டிருக்கும் கடற்படையின் ஏதோ ஒரு அட்மிரலோ, கமாண்டரோ, ஒரு வடக்கத்தியான், 'நாங்கள் எதற்காக அவர்களை மனிதாபிமான அடிபடையில் அனுமதிக்க வேண்டும்?' என்று டீவியில் தர்க்கபூர்வமாய் கேட்க, இங்கே ஆட்சியில் இருந்த திமுக அரசு தன் மாபெரும் துரோகத்தை மௌனத்தின் மூலம் நிகழ்திக் காட்டியது. //
அருமையான தர்க்கம் ரோஸா. இந்திய இராணுவப் படைகளில் கூட வடக்கு, தெற்கு கலாச்சாரமா? நன்றாக அந்த வடக்கத்தியானை உற்றுப் பார்த்தீர்களா? அவன்(ர்) கைபர் போலன் கணவாயைக் கடந்து வந்தவனாக இருப்பானே(ரே)? முடிந்தால் அந்த வடக்கத்தியான் பார்க்க பார்ப்பனனாய் இருந்தான் என்று சொன்னீர்களானால் உங்கள் பதிவு இன்னும் வர்ணாசிரமக் களை கட்டும்.
இந்தியப் படைகளில் இதனாலேயே சாதி/இன/மத/மொழி அடிப்படையில் ரிஸர்வேஷன் வேண்டும் என்று நீங்கள் கூக்குரலிட்டால் நீங்கள்தான் அல்டிமேட் அறிவுஜீவி.
//இந்திய அரசை இதை தடுக்கும் நடவடிக்கைக்கு நிர்பந்திக்க, எந்த வடிவத்திலாவது போராட்டம் நடந்திருக்கிறதா? சம்பந்த பட்ட மீனவர்கள், மற்றும் சில தமிழ் தேசியவாதிகளை தவிர மற்றவர்கள் ஏன் சக இந்தியர்கள் கொல்லப் பட்டதை பற்றி வாய் திறக்கவில்லை?//
அடடே ரோஸா "சக இந்தியர்கள்" பற்றி பேசுகின்றார். வரவேற்கக் கூடிய விடயம். தேர்தல் நேரத்து அரசியல் கட்சிகளின் அறிக்கை போன்று அவரது சமீபத்திய பதிவு இருக்கக்கூடாதென்று நம்புகின்றேன். தமிழ் தேசியம் பேசும் வாதிகள் இந்தியா, இறையாண்மை என்று பேசும் போது அதன் அதிர்வெண் பற்றி சந்தேகமெழுவது இயற்கையே. இருப்பினும் காத்திரமான பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டுமென்பது ரோஸாவின் உண்மையான விழைவென்றால் அதற்கான முழு ஆதரவு என்னிடமிருந்து அவருக்குண்டு. அதைவிடுத்து "பீயள்ளும் நிலைமையை அழிக்க பீ பேலுபவர்களை ஒழிக்க வேண்டும்" என்ற தங்கமணியின் ரீதியான தர்க்கத்தை ரோஸாவும் சுவீகரித்திருந்தால் மன்னிக்கவும். எனக்கு தர்க்கம் புரிய வேறு தலைப்புகளுண்டு.
ரோஸாவின் பதிவில் பின்னூட்டமிட்ட இரா.கி. //இந்தியா என்பது பலதேசங்கள் நிறைந்த ஒரு நாடு (multinational country) என்ற கருத்தை இன்றைய அரசியலாரில் பலரும் ஒப்புக் கொள்ளவில்லை.// என்று தெரிவிக்கின்றார். இதற்கும் எனக்கு எதிவினைக் கருத்துகள் உண்டு. அவற்றைப் பதிவிட எல்லாம் வல்ல ஏதோ ஒருவன் எனக்கு அருள் பாலிப்பானாக! இருப்பினும் அவரது கருத்தாக தனது பின்னூட்டத்தில் //என் கோவமெல்லாம் நடுவண் அரசின் அரசியலாரிடமோ, அதிகார வருக்கத்திடமோ கிடையாது; நமக்கென்று வாய்த்திருக்கிறார்களே ஒரு சில தலைவர்கள்; அவர்களைப் பற்றித் தான். உள்ளே கிடக்கும் முரண்பாடுகளைத் தீர்க்காமல், இந்தக் குமுகாயத்தை அணிதிரட்டாமல் வெளிமுரண்பாடுகளைப் பற்றித் தமிழ்க் குமுகாயம் பேசி என்ன பலன்?// என்று குறிப்பிட்டதற்கு நான் முற்றிலும் உடன்படுகின்றேன். ரோஸா இதற்கு உடன்படவில்லை என்பதால் அல்ல இம்முடிவு.
Monday, April 03, 2006
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
Vanthiyathevan,
Your opinon about Roza and his politics are of little interest to me.
I am a nationalist (Indian), and what bothers me in your post is the lack of outrage at the inaction of the Indian coast guard/navy in this regard. Even if it is true that the Indian fishermen are stepping out of their bounds, they do not deserve to be shot upon. If they are, it is the duty of the coast guard to protect them. And it is also the duty of the government to educate/equip the fishermen appropriately to avoid these incidents.
It seems to me like you are blaming the victims, in the middle of a tangential tirade against an individual whose politics you disagree with.
Srikanth,
This is my first part of the series which I intend to write. I want to delve deep further to write about "Problem - Ground Level Reality" & possibly "Acceptable Solution" to the existing problem. It becomes too long if I write everything in a single article.
//Even if it is true that the Indian fishermen are stepping out of their bounds, they do not deserve to be shot upon.//
I agree with you totally. I have not mentioned that shooting was a correct action.
//If they are, it is the duty of the coast guard to protect them. And it is also the duty of the government to educate/equip the fishermen appropriately to avoid these incidents. //
//It seems to me like you are blaming the victims, in the middle of a tangential tirade against an individual whose politics you disagree with. //
I will touch these items in my coming articles.
Thanks for the comment and concern regarding this topic.
//"பீயள்ளும் நிலைமையை அழிக்க பீ பேலுபவர்களை ஒழிக்க வேண்டும்" என்ற தங்கமணியின் ரீதியான தர்க்கத்தை ரோஸாவும் சுவீகரித்திருந்தால் மன்னிக்கவும். //
தங்கமணி இவ்வாறு எழுதியதாக (தர்க்க ரீதியாகக் கூட) எனக்கு வாசித்ததாக நினைவில்லை? எங்கு எழுதினார் என்று சொல்லமுடியுமா?
உங்கள் கேள்விகளுக்கு பதில் கொஞ்சம் மெதுவாக எழுதுகிறேன். நன்றி.
வந்துட்டான்யா வந்துட்டான். இந்த அடியாளு தமாசு தொல்ல தாங்கலைப்பா? ஏம்பா கர்நாட்டிக் டமாசு, நீதான ஒரு மூணு வருசம் டுரூசு வேணும்னு பெயரிலி ப்ளாகுல கெஞ்சுன பார்ட்டி? இப்ப என்னாத்துக்கு திரும்பி வந்து அடியாளு வேல பார்க்குற? உனக்கு எதுனாச்சும் தெரியுமா? என்னா மேட்டர் இங்க பேசுறாங்கன்னு கூட தெரியாம ஏன் இப்படி எடு பிடி வேல பார்க்குற? நீயா சுயமா எதையும் எழுத அறிவு உனக்குக் கிடையாதுன்னு இணைய உலகமே அறியும். உனக்கு பெயரிலி எழுதிக் கொடுத்து வாங்கிப் போடணும், அதுக்கு கொஞம் நேரம் ஆகும்னு எல்லோருக்கும் தெரியும். அப்புறமா என்ன முந்திரிக் கொட்டையாட்டம் வந்து ஒரு போஸ்டு வேற. ஆமா மண்டபத்தில யாரோ எழுதிக் கொடுத்தத வாங்கிப் போட உனக்கு கொஞ்சம் என்ன நிறயவே நேரம் ஆகும்தான். அதல்லாம் இங்க எல்லோருக்கும் நல்லாத் தெரியும், சும்மா சும்மா வந்து சொல்லி நீ அடியாளுதான் அப்பிடின்னு ஏன் முந்திரிக் கொட்ட மாதிரி ஒரு பதிலு போடுற? தங்கமணி சொன்னத வந்தியத்தேவன் பகடி பண்ணியிருக்காரு என்பது கூட உன்னோட அடியாள் மூளைக்கு ஏறல பாரு. தீண்டாமையை ஒழிக்க இந்து மதத்த ஒழிக்கணும்னு சொல்றதும் மலம் அள்ளுறத ஒழிக்க பீ பேளுறவன ஒழிக்கணும்னு சொல்றதும் ஒண்ணுதான். இது கூட புரியாம நீ எல்லாம் என்ன பெயரிலிக்கு அடியாள் வேல பாத்து வெட்டி முறிக்கிறியோ போ. பெயரிலி கொஞஞ்சமாவது மூள உள்ள ஒரு ஆளா அடியாளா வச்சுகிடலாம்.
வந்தியத்தேவன், இந்தியாவ எதிர்ப்பது, இந்திய ராணுவத்த எதிர்ப்பது, இந்திய இறையாண்மைய எதிர்ப்பது எல்லாம்தான் அறிவுஜீவிகளின் அடையாள முகவரி. பாருங்க, அண்ணன் ஸ்ரீகாந்த் மீனாட்சிக்குக் கூட அப்படி ஒரு முற்போக்கு சிந்தனையாளரா தன்னை அடையாளம் காட்டிகிடனும்னு ஒரு ஆசை வந்திருச்சு. அவர் என்னைக்கு சுஜாதா போஸ்டு போட்டாரோ அன்னைக்கே புரிந்து விட்டது, பார்ட்டி ரோசாவோட இடத்துக்கு துண்டப் போடுறாருன்னு. ரோசா, ரவி ஸ்ரீநிவாஸ் போன்ற ஐயங்கார் வரிசையில இப்ப இன்னொருத்தர். எப்படியோ முற்போக்கு பட்டம் வாங்கி ஜென்ம சாபல்யம் அடைஞ்சா சரிதான். ஐயா ஸ்ரீகாந்த் விஷயத்த கொஞ்சம் ஆற அமரப் புரிஞ்சுகிட்டு பதில் போடுங்க. அப்புறம் உங்களுக்கும் கார்த்திக் டமாசுக்கும் வித்தியாசம் இல்லாமப் போயிறப் போவுது. இதில் உள்ள பிரச்சினை புரியலன்னா வந்தியத்தேவன் கிட்ட கேளுங்க. அவர் அடுத்த பார்ட்டுல எழுதக் கூடும். மீனவர்களுக்கு உள்ள பிரச்சினை என்பது இலங்கை இந்திய மீனவர்களுக்கு மட்டும் அல்ல. இந்திய மீனவர்கள், ஏன் அடுத்த அடுத்த ஊர், குப்பத்தைச் சேர்ந்த மீனவ்ர்களிடம் கூட கொலைப் பழி , வெட்டுக் குத்து, குண்டு வெடிப்புகளுடன் கடுமையான சண்டைகள் நடப்பது வாஷிங்டன் டி சியில் சொகுசாக உட்கார்ந்து கொண்டு எழுதும் உங்களுக்குத் தெரியாது. சிதம்பரம் பகுதி மீனவர்களிடையே பெரும் போரே நடந்தது. காவலுக்கு வந்த கலெக்டர், போலீஸ் எல்லாம் உயிரைக் காத்துக் கொள்ள ஓடி ஒளிந்தார்கள். ஒரு மீனவக் கிராமத்துக்காரர்கள் இன்னொரு மீனவக் கிராமத்தை கொளுத்தி நிர்மூலமாக்கினார்கள். மீன் பிடிப்பில் சண்டை என்று வரும் பொழுது அண்ணனாவது தம்பியாவது? இந்தியாவுக்குள்ள உள்ள மீனவர்களே ஒருவரை ஒருவர் வெட்டிக் கொண்டு சாகும் பொழுது எந்த அரசாங்கமும் காவல் துறையும் அதற்குள் தலையிட விரும்புவதில்லை. அதைப் பற்றி முதலில் கேளுங்கள். சரி, இப்ப ஈழத் தமிழ் மீனவர்கள் வந்து சுட்டா அதில் கோஸ்டு கார்டு தலையிட்டால் என்ன சொல்லுவீர்கள், ஐயோ, ஐயோ இந்திய ஏகாபத்தியம் தமிழ்ர்களைக் கொல்கிறது என்பீர்கள். இந்த விஷயத்தில் அரசியல் முடிவுதான் தீர்வு. இந்தியாவின் காவலர்கள் என்று தங்களைத் தாங்களே அழைத்துக் கொண்ட பா ஜ க கூட இந்திய எல்லைப் படை வீரர்களின் கண்கள் பங்களாதேச ராணுவத்தால் தோண்டப் பட்ட பொழுது ஒன்றும் செய்ய இயலாமல் வேடிக்கைதான் பார்த்துக் கொண்டிருந்தது. இந்தியாவின் ராணுவத்தின், கடற்படையின் கைகள் கட்டப் பட்டுள்ளன. இது தெரியாமல் சும்மா முற்போக்கு ·பிலிம் காட்ட வேண்டாம். அப்படி எதுவும் காட்டனும்னா சுஜாதா, அசோக மித்திரன் போன்ற அப்பாவிகளை திட்டி போஸ்டு போட்டு பேர் வாங்கிட்டுப் போயிட்டே இருங்க. இதில இன்னொரு நாடுன்னு வரும்பொழுது எடுத்தோம் கவிழ்த்தோம்னு கோஸ்டு கார்டு காரவுங்க சுட்டு விட முடியாது. இதென்ன சப்பாத்தியா நீங்க நினைச்சோன்ன சுடுவதற்கு ? அவர்கள் கிருஷ்ண பரமாத்மாவும் அல்ல மீனவர்கள் எல்லை மீறி போகும் இடத்தில் எல்லாம் வந்து பாதுகாப்புக் கொடுப்பதற்கு. அரசாங்கம் அதற்கான உத்தரவு கொடுக்காதவரை அவர்கள் எதுவும் நடவடிக்கை எடுக்க முடியாது. இந்திய அமைதிப் படையின் கைகள் கட்டப் பட்டதால் அவர்கள் இழந்த இழப்பு உங்களுக்குத் தெரியாது.
அப்புறம் இன்னொரு கோஷ்டி இந்தியா சிறு சிறு நாடுகளால் ஒன்று சேர்ந்தது என்பதை மறந்து விடக் கூடாது, மறந்து விடக் கூடாது என்று கேனத்தனமாக எழுதி வருகிறது. அமெரிக்காக் கூடத்தான் சிறு சிறு மாநில அமைப்புகள் சேர்ந்து உருவாச்சு. அதுக்காக அதையே இன்னும் பேசிக் கொண்டு இருக்கிறார்களா என்ன. பிரிவினைவாதிகளும் தேசத் துரோகிகளும்தான் இந்த விஷமத்தனாம பிரச்சாரத்தைத் தொடர்ந்து பரப்பி வருகிறார்கள். சின்ன சின்ன நாடுகள் மட்டுமல்ல சின்ன சின்ன ஜமீன்களின் கூட்டமைப்பும் கூடத்தான். அதெல்லாம் பழைய கதை. இப்ப இந்தியா என்றால் ஒரு நாடுதான். பொழைப்பிற்காக தனித் தமிழ் ஸ்டண்டு அடிப்பது வேறு, இந்தியாவின் ஒருமைப்பாட்டையே கேள்வி எழுப்புவது, தனித்தமிழ் தேசியக் கனவு காண்பது வேறு.
வந்தியத்தேவன் உங்களைக் குறித்து மிகவும் பெருமைப் படுகிறேன். வீணர்களுக்கும், தேசத்துரோகிகளுக்கும் தொடர்ந்து உண்மையை உரைத்திடுவீர்.
வாழ்க பாரதம்
ஜெய் ஹிந்த்
அண்ணை என்ன பண்றது, அடியாளுன்னு பட்டம் வாங்கினா மட்டும்போதுமா? அடிக்க வேண்டாமா? வால்க பாரதமும் அதன் வால்களும் :-)
//தீண்டாமையை ஒழிக்க இந்து மதத்த ஒழிக்கணும்னு சொல்றதும் மலம் அள்ளுறத ஒழிக்க பீ பேளுறவன ஒழிக்கணும்னு சொல்றதும் ஒண்ணுதான்.//
எப்பிடி எப்பிடி இதெல்லாம்... :-)அய்யோ பாரத ரத்னாவுக்குத்தான் பரிந்துரைக்கனும் போங்கோ கலக்குறீள்
மிக மிக நல்ல பதிவு. தொடர்ந்து எழுதவும்.
Post a Comment