Wednesday, September 15, 2004

Monday, September 13, 2004

செல்லுலாய்டு கனவுகள்

உண்மையை மிஞ்சிய பிரமை
உற்சாகத்திற்கும் குறையேதுமில்லை
வானமும் தொட்டுவிடும் தூரம்தான்
பாடலாசிரியன் வரிகளிலாவது

இயல்பே திரிபாக பிம்பம் உருவாக்கி
நிதர்சனத்தை நிழல் வெற்றி காணும்
கிராமக் காட்சி முடிந்ததும் வெளிநாட்டில் டூயட்
தயாரிப்பாளனின் சுருக்குப்பை எதிர்பார்ப்பில் விரியும்

ஆழம் பற்றி அதீத கவலையில்லை
சட்டிகாலியானதால் அகப்பைக்கும் அவஸ்தையில்லை
கருவே இல்லாததால் கலைப்பதில் கடினமில்லை
எழுதச் சொன்னால் கதை விடும் ஆசிரியர்கள்

கடைசியாய் வருதல் கழிசடை களைதல்
ஏகலைவன் வில்லும் எவனது சொல்லும்
என்முன் என்றும் ஜெயிக்காது
குத்தும் வசன கர்த்தாவின் வரிகள்

விரலசைவில் உலகம் வைத்திருப்பினும்
புகழெனக்கு அதீத போதையூட்டுவதில்லை
ஆகாயத்தில் பறந்து அந்தர் பல்டியடிக்கும்
அசல் நாயகனுக்கு நகல் நடிகன்தானே நான்

Friday, September 10, 2004

மனித நேயம்

இவ்வாரம் திண்ணையில் வெளியான கவிதை

புழக்கடை இறுக்கமாயிருந்தது வெக்கை வெளியிலா
துணைவியின் இடை வெளியிலா
விளங்கவில்லை வெளியே வந்தேன்

மாதக்கடைசியாய் கும்மிருட்டு பயமுறுத்தியது
ஈனஸ்வரத்தில் நம்பிக்கை தெருவிளக்காய் மினுக்கியது
சேருமிடம் தெரியாமல் நடக்கும்போது
ஞானியாயுணர்ந்தேன் நம்புங்கள்

கழுதை விட்டுப்போன குட்டிச்சுவற்றில் சப்தம்
இதென்ன ஒன்று இரண்டென கதம்பக் குரல்கள்?
பொதுக்கழிப்பறை சுவாரசியத்தில்
எட்டிப் பார்க்கும் மனம் கட்டுப்படவில்லை

கார்த்திகை மாதக் களைப்பில் தாய்
குட்டிகள் முலைக்காம்புகளுடன் மோதல் நடத்தின
தெரு நாய்க்கு உணவில்லையெனில்
ஜகத்தினையழிக்க எவனாவது சபதமா பூண்டான்?

உள்ளுணர்வு உந்த ஆபத்தோவென
தாய்நாய் எழும்ப குலைப்பு மட்டும் பயமாயில்லை
கர்ப்பத்தில் ஊட்டச்சத்துணவு கிட்டவில்லை போலும்

இல்லத்தில் பழையது இரவு வைத்தால் ஊசிவிடும்
நாய்க்கிடலாமென்றால் வெக்கை மீண்டும் வெளிப்பட்டது
போன பிறவியில் புரவலனாய் நொந்திருப்பேன்

ஆந்தையாய் மாறி உலவியபின் இரவில் கோழித்தூக்கம்
புழுக்கம் மட்டும் இன்னும் இறுக்கமாய்
அன்றாட அலுவலுக்கு பலியாடாய் சிங்காரிப்பு

பழக்கமான பாதை பார்த்துச் சலித்த முகங்கள்
கேட்டு மரத்த சப்தங்களில் மொய்க்கும் ஈக்களின் சப்தசுரம்
நிமிர்ந்து பார்த்தேன் ஏதாலோ அடிபட்டிறந்த தாய்நாய்

உள்ளே புரியாத பாகமொன்று மளுக்கென்று ஒடிந்தது
பழசு போட்டிருந்தா புழக்கடையிலே தூங்கியிருக்குமோ?

புதுசாய் கண் திறந்த குட்டி முறைத்தது
வளர்ந்தபின் என்னை கட்டாயம் கடிக்கலாம்
எதிலும் அடிபட்டிறக்காமலிருந்தால்

Thursday, September 09, 2004

இயல்பும் திரிபும்

விஞ்ஞானத்தால் அஞ்ஞானம் போக்கி
ஊர் போற்றும் உபாத்தியார்
பிள்ளையின் கேள்விக்கு சிடுசிடுப்பார்

பிணி நீக்கிக் களி காண்பார்
பெருமருத்துவர் பெயரும் கண்டார்
சளியிருந்தால் வரத்தான் செய்யுமென்பார்
தளர்ந்து கிடந்த தந்தையை நோக்கி

வீடு மறந்து நாட்டை கவனிக்கும் சேவகி
இல்லாதவனை விட்டு பெருமாளுக்கு பிச்சையிடும் பக்தன்
இச்செயல்கள் இயல்புகளா இல்லை திரிபுகளா?
நேர் கோடுகள்

கல்வியே மாசிலா மருந்து கவனமாய்த்தான் பருகினேன்
எட்டிஉதைத்ததொதுக்கீடு இன்னும் வலிக்கின்றது
பாதி மதிப்பெண்ணில் பாதை மாறியதால்

கூலிக்கு மாரடிக்க தொலையூரில் வாய்ப்பு
நெடிதுயர்ந்த தகப்பனின் பிம்பம் குறுக்கே
சிபாரிசு மடல் சுக்கலாய் இரங்கல் பாடியது

பெருந்தன்மையாய் மாமா தன்பெண் விடுத்தார்
கணிணி தெரியாத கயவனெனக்கும் ஒருவழியாய் கண்ணாலம்
கைக்கும் வாய்க்கும் சண்டை கிழிந்தது சம்பளக்கவர்

ஆசை அறுபது மோகம் முப்பது பாதிக்கணக்கானது
கேள்விகளே வாழ்க்கையான போது அரிதாய் விடையும்
அழகான நல்முத்து தாரத்தின் பரிசாய் சிரித்தது

சிறிதே வளையலாம் தப்பில்லைதான்
சண்டமாருதத்தில் மரமொடிய புல் சிரிக்கும் ஆனால்
தண்டவாளங்கள் வளைந்தால் பயணமே பாழன்றோ?

நானும் ஆரம்பித்தேன் நல்முத்துவிடம்
கல்வியே மாசிலா மருந்து
தகப்பன் பிம்பம் தடையாய்த் தெரியவில்லை

Saturday, September 04, 2004

ரஷ்யாவில் தீவிரவாதத் தாக்குதல்கள்

இரு விமானங்கள், ஒரு சுரங்கப் பாதை குண்டுவெடிப்பு கடைசியாக முன்னூறுக்கும் அதிகமானோரை (அவற்றில் பாதி குழந்தைகள்) பலி கண்டது தீவிரவாதம். ரஷ்ய அதிபர் புடின் பொறி கலங்கிப் போய்விட்டார்.

புது முறையாக தீவிரவாதம் இப்போது ரஷ்யாவில் 'இறக்குமதி' செய்யப்பட்டிருக்கின்றது. அதாவது அல்-கொய்தா தீவிரவாதிகள் (சௌதி அரேபியாவைச் சேர்ந்தவர்) பங்கு பெற்றுள்ளார்களாம். ரஷ்யாவின் அதிரடிப்படையினர் அவசரம் காட்டியதால் இவ்வளவு சேதாரமெனச் சொல்லப்படுகின்றது. இருப்பினும் ஒரு பள்ளியில் குண்டுகளை விதைத்து ஆயிரக்கணக்கான மக்களை, குழந்தைகளை பிணைக்கைதிகளாய் வைப்பதற்கு ஒரு 'மனம்' வேண்டும்.

ஜம்மு காஷ்மீரில் ஆப்கானியர் மற்றும் பாகிஸ்தானியர் தீவிரவாத 'இறக்குமதி' காலங்காலமாக செய்து வருகின்றார்கள். மனித நேயம் மிக்கோரே!!! பாருங்கள் தீவிரவாதத்தின் கோரக் காட்சிகளை...

russia7 russia8russia9russia3

எங்கும், எப்பொழுதும், தீவிரவாதம் ஒரு தீர்வாகாது. புரிந்தால் சரி...
மரத்தடி ஆண்டுவிழாப் போட்டி

நான் எழுதிய சிறுகதையும், புதுக்கவிதையும்:

மௌன சாட்சிகள் (சிறுகதை) http://www.maraththadi.com/article.asp?id=1931
முக்கோணங்கள் (புதுக் கவிதை) http://www.maraththadi.com/article.asp?id=1935

வந்தியத்தேவன்.
கோணல் புத்தி கோயபல்சுகளுக்கு

என்னை முன்னாள் நண்பராகவும் இன்று எட்டப்பராகவும் சித்தரித்த திருமிகு சுந்தரராஜன் பசுபதி என்ற மூக்கருக்கு அநேக கோடி நமஸ்காரங்கள்.

நடைச்சித்திரத்தில் ஊர்க்குருவி உங்களை நேரடியாக எதுவும் சொல்லாமல் முதுகில் குத்திவிட்டதென்றீர்கள். கொள்கை என்பது முதுகெலும்பு. ஆனால் கொள்கை ஏதுமில்லாத உங்களுக்கு வலி அதிகம் இருக்காதென நம்புகின்றேன். சிநேகமே இல்லாதபோது துரோகமெங்கிருந்து வந்தது? யாம் துரோகம் செய்தால் தாங்கும் சக்தி உமக்குண்டோ?

தடியால் அடித்து கனிய வைத்தீர்கள். மிக்க நன்றி. அதற்காக 'பொத்திக்கொண்டும்', 'காரமாகவும்' பிறர் திருப்திக்கு எழுத எனக்கு எந்த நிர்பந்தமும் இல்லை. ஆமாம் வலைப்பூக்களில் எழுதுபவரென்ன சாகித்திய அகாதமிக்கும், நோபல் பரிசுக்குமா எழுதுகிறோம்? வர்த்தகக் கட்டாயம், பத்திரிக்கை நடத்துகின்றேன் என்ற பேத்தல்கள் வேண்டாமே? அது சரி உங்கள் வலைப்பூ அல்லவா? உங்கள் சுதந்திரத்தில் தலையிட எனக்கென்ன உரிமை?

வாப்பாவின் கட்டுரையில் இரண்டு இடங்கள் இடித்தன. ராஜபாளையத்தில் பிரபாகரன் சீருடையில் வைகோ மற்றும் இறுதியில் 'குடத்திலிட்ட விளக்குகள்' முடிவு. முன்னது கட்டுரையின் போக்கை திசை திருப்ப முடிவில் வாப்பா ஈழத்தமிழரின் நலனிலிருந்து பிசகி தீவிரவாதத்தை சிலாகிப்பது போலிருந்தது. அதைத்தான் அவரது பாணியிலிலே 'நடைச்சித்திர பாணியில்' ஊர்க்குருவியாய் சொன்னேன். இதில் ஊர்க்குருவியார் மூக்கன் வலைப்பதிவைப் படித்தார் என்று சொன்னால் கோர்வை இடிக்குமென்று விகடனில் 'மாணவ நிருபராயிருந்த' உனக்குத் தெரியாததா?

சரி உங்களோட சமீபத்திய பதிவுகளைப் பார்ப்போமா?

அது எப்படிங்கோ?

"எங்க ஊர் பிரச்சினை பிடிச்சது தான் சாமி. திண்ணியத்துல பீயைக் கரைச்சுஊத்துவாங்க. கோயில்கள்ள தமிழ்ல மந்திரம் சொன்னா தீட்டும்பாங்க. தமிழனை எல்லாம் இந்தி படிக்காதன்னு சொல்லிட்டு, பேரனுக்கு இந்தி சொல்லிக் கொடுத்து அமைச்சராக்குவாங்க. தேர்தலுக்கு தேர்தல் விதவிதமா பிரியாணியும் சாராயமும் ஊத்தி மாறி மாறி சவாரி பண்ணுவாங்க. பவுடர் மூஞ்சிக்கு ஏமாந்து போய் அரசுப் பொறுப்பை கையில் குடுப்பாங்க. பெரிய வீட்டு மனுசஙக வப்பாட்டி கதையை பத்தி பத்தியா எழுதுவாங்க. இரட்டை டம்ளர் முறை இன்னமும் இருக்கு எங்க கிராமங்கள்ள...மணிப்பூரில கலவரம்தான். குஜராத்துல கொடுமைதான்( அந்தக் கட்சிக்கு தேர்தல என்ன ஆச்சுன்னு பாத்தீங்களா)"

இந்த அத்தனை குறையும் எதிர்த்துக்கிட்டும், எழுதிக்கிட்டும், என்னைக்காவது இதையெல்லாம் மாத்திடலாம்ங்கிற நம்பிக்கையோடும், ஜனநாயகத்துலயும் , பேச்சு வார்த்தையிலயும் இதெல்லாம் எதிர்கொள்ளலாம் என்ற சாத்வீகமான நம்பிக்கைகளோடவும் எங்க திருக்கூட்டம் வாழ்ந்துகிட்டிருக்கு. மாறும்ங்கிற நம்பிக்கைதாம் ஆதாரம் எங்களுக்கு அம்மா குணம் சரியில்லைனா, பக்கத்து வீட்டுக்காரிய அம்மாவா ஏத்துக்க முடியாது எங்களால - தங்கமணி மாதிரியும், சுந்தரவடிவேலு மாதிரியும்."

ஆமாம் கொள்கைச் சிங்கம் யாருங்கோ?

"தமிழ்நாடு என் தாய். இந்தியா என் தகப்பன். ஈழத்தமிழன், கொஞ்சம் வளர்ந்து விட்ட என் முரட்டுச் சகோதரன். இவர்களில் யாருக்கு
ஏதாவதென்றாலும் எங்கள் நெஞ்சம் பதறும். அந்த உணர்வு உங்களுக்கும் வர, எனக்கு வேண்டுவதை தவிர வேறு வழி இல்லை. இதற்கு மேல் இது விஷயமாக பின்னூட்டம் கொடுப்பதற்கும், மறு பதிவு போட்டு லாவணி பாடுவதற்கு எனக்கு இது Time pass விஷயமில்லை. உணர்ந்தால் உணருங்கள். இல்லாவிட்டால் கட்டிப்புரண்டு உருண்டு கொண்டிருங்கள். பொத்திக் கொண்டு போகச் சொல்கிறவர்கள் தன் கவிதையையே மறுபடி வாசியுங்கள். கைகள் தானாகவே செல்லுமிடம் விளங்கும்.


பெரிய்ய்ய்ய்ய்..ய்ய்ய்ய்ய்ய் கும்பிடு எல்லாருக்கும்...."


அடேங்கப்பா அசத்திட்டீங்க!!!


"நிறைய படிக்க ஆசை. நிறைய தெரிந்து கொள்ள ஆசை. கொள்கைகளை உருவாக்கிக் கொண்டு அதற்காக கட்சி கட்டுவதை விட எதையும் மறுபார்வை பார்க்க ஆசை. யாருக்கும், எக்காலத்திலும் எதற்காகவும் சார்பு நிலை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் நான் எந்தக் குழாமிலும், எந்தப் பொறுப்பிலும் இல்லை. எழுத்தாளனாகி பெரிய பேர் வாங்கும் ஆசை இல்லை. புத்த்கம் போட்டு முகவாய்க்கட்டையில் பேனாவோடு, புத்தகங்களின் பின்னட்டைகளில் போஸ் பொடுக்கும் ஆசை இல்லை. கொள்கைகளை உருவாக்கி, என் பேனாவை வைத்து உலகத்தை ஒரு "பெரட்டு பெரட்டிவிட" எனக்கு ஊக்கம் ஒன்றும் இல்லை. சுத்தம் காரணமாக பல் துலக்க முற்பட்டு, அது அனிச்சை செயலாகி, தினமும் பல் விளக்கியும் , காரணம் தெரியாமல் கடனே என்று செய்வதால் நாம் ஊத்தைவாயர்களாக ஆவதைபோல, எழுத்து எனக்கு இல்லை. என் பிள்ளையை கொஞ்சுவது எனக்கு எத்த்னை உவப்பானதோ, அதைப் போலவே நான் நினைப்பதையெல்லாம் எழுதுவதும்..... எழுத்தாள, சிந்தனையாள சித்தாந்த சுழல்களுக்குள் சிக்காத, policy based என்றில்லாமல் issue based நிலை எடுக்கும் ஒரு சாதாரண, சராசரிக்கும் கீழான வாசகன். வரிக்கு வரி எனக்கு ஒப்புமை இல்லை என்றாலும் ஜப்பார் வாப்பாவின் கட்டுரையில் இருந்த நிஜம் என்னை அசைத்தது. உடனே என் உணர்ச்சி அதை இங்கே சுட்டிட செய்தது. மிஞ்சிப்போன மண், சூளைக்கு வெளியே விழுந்தால் அது சாக்கடை வண்டலோடு கலந்து நாறிப்போகவும்வாய்ப்பிருக்கிறது அல்லவா....!! எதுக்காச்சும் ஆகும் என்று அதையே கொண்டை செய்யச் சொன்ன ஒரு தாய்மனசு போல தெரிந்தது வாப்பாவின் மனசெனக்கு..."

அடடே எங்கேயோ பலமா இடிச்சு உதைக்குதே?

இப்போ பெரியார் கருத்துடன் பிராமணா எதிர்ப்பு. ஆமாம் இது எவ்வளவு நாளக்கு? யாரோ ஒரு மாமாவோ, மாமியோ உனது மனக்கதவுகளை
திறக்கும் வரையிலா? அது சரி. அது உன் மனக்கதவுகள். எப்போ திறக்கணும், மூடணும்ங்ற சுதந்திரம் உன்னுடையதல்லவா?

அப்புறம் யாரும் இணையத்துல ஓடி ஓடி எனக்கு பின்னூட்டம் 'கொடுங்கண்ணா அல்லது கொடுங்கக்கா'ன்னு கேட்கிற மாதிரி தெரியவில்லை.

இந்த மாதிரி அசிங்கமான பதிவிற்கு எனக்கு நானே மாப்பு கேட்டுக் கொள்கிறேன். எனது நண்பர்கள் கண்டிப்பாய் இப்பதிவைப் பற்றி தொலைபேசுவார்கள். பிறகு நானும்(!) இப்பதிவை நீக்கிவிடுவேன்.
மற்றபடி இப்பதிவிற்கு எதிர்வினைகளுக்கோ, பின்னூட்டங்களுக்கோ பதில் கிடையாது.

அடடே முடிவு சுவாரசியமாய் வரவில்லை...

நானும் எதற்கும் தயார்!!!

(அட காசா பணமா சொல்லித்தான் வைப்போமே ;-))
பின்னூட்டங்கள்

யதேச்சையாய் சுந்தரவடிவேல் அவர்களின் நண்பர் சுந்தர்ராஜனுக்கு பதிவின் பின்னூட்டங்களைப் படிக்க நேர்ந்தது. ஆச்சிமகன் பட்டையை கிளைப்பியிருக்கிறார். ஆச்சிமகன் சொல்வது இதுதான்:"வங்கதேச விடுதலைப்போரின் போதே இந்திய ராணுவத்தின் அட்டூழியங்கள் பற்றிய தகவல்கள் வெளியாயின. உள்நாட்டு கலவரங்களின் போது பணியமர்த்தப்படும் ராணுவம் தம் மக்களிடமே மிருகத்தனமாக நடந்து கொள்வதைத்தான் கண்டு வந்திருக்கிறோம். ராணுவத்திற்கும் - ஏன் காவல் துறைக்கும் கூட - மனித நாகரிகத்தையும் மனிதப் பண்புகளையும் பயிற்றுவிப்பது முதலாவது தேவை. அதில் அவர் தேறிய பிறகு ஆயுத பயிற்சி மேற்கொண்டால் போதும் என்ற நிலை வர வேண்டும்..."

மேலும் செ(சொ)ல்லும் ஆச்சிமகன்,"நான் ஒன்றும் சர்வாதிகார நாட்டில் வாழவில்லை. நமது தேச பக்தியை புலப்படுத்த நமது ராணுவத்தின் தவறுகளை மூடி மறைக்க வேண்டியதில்லை" என்று முழங்குகிறார்.

அவரது கருத்துகளுக்கு தலைவணங்குகின்றேன்.

தேசியப் பாதுகாப்பு பயிற்சிக்கூடத்தின் தலைமைக் கனவானாய் ஆச்சிமகன் ஆகக் கடவ. இருபத்தி ஓராம் நூற்றாண்டில் மனித நாகரிகம்/மனிதப் பண்பு பேசுமுன் தனது இணையப் பெயரையாவது மாற்றி வரட்டும். திருமலை ரா.கா.கி.'ல் கூறியது போல் நரகலை மிதிப்பது போலுள்ளது.

நல்லா ஜம்முன்னு சாப்பிட்டு, கும்முன்னு தூங்கி, தும்மல் சரித்திரம் எழுதுங்கள் ஆச்சிமகனாரே!!! அதை விட்டு விட்டு ராணுவப் பயிற்சியெல்லாம் உமக்கெதற்கு?

இன்னும் வேடிக்கை என்னவெனில் ஜனா என்பவர் சொல்லியது,"உண்மையை ஆண்மையுடன் அறிதலும், ஏற்றுக்கொள்வதும், வெளிப்படுத்துவதும் எல்லாராலும் முடியாத ஒன்று. அதை நீங்கள் செய்வதற்கு நன்றி. உங்களின் மத்த ஆக்கபூர்வமான பதிவுகளுக்கும் நன்றிகள்." இப்பின்னூட்டத்தின் மின்னஞ்சல் முகவரி sundara@email.com மற்றும் வலைப்பூ முகவரி http://sundaravadivel.blogspot.com/.

கண்டிப்பாக நண்பர் சுந்தரவடிவேல் தனக்குத் தானே 'தட்டிக் கொடுத்துக்கொள்ள' அவசியமில்லை. அப்படியெனில் ஜனா அல்லது ஜானா யார்? விஷமியோ?

இப்பதிவினால் என்ன லாபம் என்று கேட்போருக்கு...

எனக்கு 'கொள்கைச் சிங்கம்', 'கருத்து வெறி கொண்ட மிருகம்', போன்ற புதிய பட்டங்கள் சமீபத்தில் அளிக்கப்பட்டன.

இப்பதிவின் காரணமாய் முதலாவதாய் என் வலைப்பூவில் தோன்றும் ஆச்சிமகனின் சுட்டியோ, சுந்தரவடிவேலுவின் சுட்டியோ நான் நீக்க மாட்டேன்.