Thursday, September 09, 2004

நேர் கோடுகள்

கல்வியே மாசிலா மருந்து கவனமாய்த்தான் பருகினேன்
எட்டிஉதைத்ததொதுக்கீடு இன்னும் வலிக்கின்றது
பாதி மதிப்பெண்ணில் பாதை மாறியதால்

கூலிக்கு மாரடிக்க தொலையூரில் வாய்ப்பு
நெடிதுயர்ந்த தகப்பனின் பிம்பம் குறுக்கே
சிபாரிசு மடல் சுக்கலாய் இரங்கல் பாடியது

பெருந்தன்மையாய் மாமா தன்பெண் விடுத்தார்
கணிணி தெரியாத கயவனெனக்கும் ஒருவழியாய் கண்ணாலம்
கைக்கும் வாய்க்கும் சண்டை கிழிந்தது சம்பளக்கவர்

ஆசை அறுபது மோகம் முப்பது பாதிக்கணக்கானது
கேள்விகளே வாழ்க்கையான போது அரிதாய் விடையும்
அழகான நல்முத்து தாரத்தின் பரிசாய் சிரித்தது

சிறிதே வளையலாம் தப்பில்லைதான்
சண்டமாருதத்தில் மரமொடிய புல் சிரிக்கும் ஆனால்
தண்டவாளங்கள் வளைந்தால் பயணமே பாழன்றோ?

நானும் ஆரம்பித்தேன் நல்முத்துவிடம்
கல்வியே மாசிலா மருந்து
தகப்பன் பிம்பம் தடையாய்த் தெரியவில்லை

No comments: