Saturday, September 04, 2004

கோணல் புத்தி கோயபல்சுகளுக்கு

என்னை முன்னாள் நண்பராகவும் இன்று எட்டப்பராகவும் சித்தரித்த திருமிகு சுந்தரராஜன் பசுபதி என்ற மூக்கருக்கு அநேக கோடி நமஸ்காரங்கள்.

நடைச்சித்திரத்தில் ஊர்க்குருவி உங்களை நேரடியாக எதுவும் சொல்லாமல் முதுகில் குத்திவிட்டதென்றீர்கள். கொள்கை என்பது முதுகெலும்பு. ஆனால் கொள்கை ஏதுமில்லாத உங்களுக்கு வலி அதிகம் இருக்காதென நம்புகின்றேன். சிநேகமே இல்லாதபோது துரோகமெங்கிருந்து வந்தது? யாம் துரோகம் செய்தால் தாங்கும் சக்தி உமக்குண்டோ?

தடியால் அடித்து கனிய வைத்தீர்கள். மிக்க நன்றி. அதற்காக 'பொத்திக்கொண்டும்', 'காரமாகவும்' பிறர் திருப்திக்கு எழுத எனக்கு எந்த நிர்பந்தமும் இல்லை. ஆமாம் வலைப்பூக்களில் எழுதுபவரென்ன சாகித்திய அகாதமிக்கும், நோபல் பரிசுக்குமா எழுதுகிறோம்? வர்த்தகக் கட்டாயம், பத்திரிக்கை நடத்துகின்றேன் என்ற பேத்தல்கள் வேண்டாமே? அது சரி உங்கள் வலைப்பூ அல்லவா? உங்கள் சுதந்திரத்தில் தலையிட எனக்கென்ன உரிமை?

வாப்பாவின் கட்டுரையில் இரண்டு இடங்கள் இடித்தன. ராஜபாளையத்தில் பிரபாகரன் சீருடையில் வைகோ மற்றும் இறுதியில் 'குடத்திலிட்ட விளக்குகள்' முடிவு. முன்னது கட்டுரையின் போக்கை திசை திருப்ப முடிவில் வாப்பா ஈழத்தமிழரின் நலனிலிருந்து பிசகி தீவிரவாதத்தை சிலாகிப்பது போலிருந்தது. அதைத்தான் அவரது பாணியிலிலே 'நடைச்சித்திர பாணியில்' ஊர்க்குருவியாய் சொன்னேன். இதில் ஊர்க்குருவியார் மூக்கன் வலைப்பதிவைப் படித்தார் என்று சொன்னால் கோர்வை இடிக்குமென்று விகடனில் 'மாணவ நிருபராயிருந்த' உனக்குத் தெரியாததா?

சரி உங்களோட சமீபத்திய பதிவுகளைப் பார்ப்போமா?

அது எப்படிங்கோ?

"எங்க ஊர் பிரச்சினை பிடிச்சது தான் சாமி. திண்ணியத்துல பீயைக் கரைச்சுஊத்துவாங்க. கோயில்கள்ள தமிழ்ல மந்திரம் சொன்னா தீட்டும்பாங்க. தமிழனை எல்லாம் இந்தி படிக்காதன்னு சொல்லிட்டு, பேரனுக்கு இந்தி சொல்லிக் கொடுத்து அமைச்சராக்குவாங்க. தேர்தலுக்கு தேர்தல் விதவிதமா பிரியாணியும் சாராயமும் ஊத்தி மாறி மாறி சவாரி பண்ணுவாங்க. பவுடர் மூஞ்சிக்கு ஏமாந்து போய் அரசுப் பொறுப்பை கையில் குடுப்பாங்க. பெரிய வீட்டு மனுசஙக வப்பாட்டி கதையை பத்தி பத்தியா எழுதுவாங்க. இரட்டை டம்ளர் முறை இன்னமும் இருக்கு எங்க கிராமங்கள்ள...மணிப்பூரில கலவரம்தான். குஜராத்துல கொடுமைதான்( அந்தக் கட்சிக்கு தேர்தல என்ன ஆச்சுன்னு பாத்தீங்களா)"

இந்த அத்தனை குறையும் எதிர்த்துக்கிட்டும், எழுதிக்கிட்டும், என்னைக்காவது இதையெல்லாம் மாத்திடலாம்ங்கிற நம்பிக்கையோடும், ஜனநாயகத்துலயும் , பேச்சு வார்த்தையிலயும் இதெல்லாம் எதிர்கொள்ளலாம் என்ற சாத்வீகமான நம்பிக்கைகளோடவும் எங்க திருக்கூட்டம் வாழ்ந்துகிட்டிருக்கு. மாறும்ங்கிற நம்பிக்கைதாம் ஆதாரம் எங்களுக்கு அம்மா குணம் சரியில்லைனா, பக்கத்து வீட்டுக்காரிய அம்மாவா ஏத்துக்க முடியாது எங்களால - தங்கமணி மாதிரியும், சுந்தரவடிவேலு மாதிரியும்."

ஆமாம் கொள்கைச் சிங்கம் யாருங்கோ?

"தமிழ்நாடு என் தாய். இந்தியா என் தகப்பன். ஈழத்தமிழன், கொஞ்சம் வளர்ந்து விட்ட என் முரட்டுச் சகோதரன். இவர்களில் யாருக்கு
ஏதாவதென்றாலும் எங்கள் நெஞ்சம் பதறும். அந்த உணர்வு உங்களுக்கும் வர, எனக்கு வேண்டுவதை தவிர வேறு வழி இல்லை. இதற்கு மேல் இது விஷயமாக பின்னூட்டம் கொடுப்பதற்கும், மறு பதிவு போட்டு லாவணி பாடுவதற்கு எனக்கு இது Time pass விஷயமில்லை. உணர்ந்தால் உணருங்கள். இல்லாவிட்டால் கட்டிப்புரண்டு உருண்டு கொண்டிருங்கள். பொத்திக் கொண்டு போகச் சொல்கிறவர்கள் தன் கவிதையையே மறுபடி வாசியுங்கள். கைகள் தானாகவே செல்லுமிடம் விளங்கும்.


பெரிய்ய்ய்ய்ய்..ய்ய்ய்ய்ய்ய் கும்பிடு எல்லாருக்கும்...."


அடேங்கப்பா அசத்திட்டீங்க!!!


"நிறைய படிக்க ஆசை. நிறைய தெரிந்து கொள்ள ஆசை. கொள்கைகளை உருவாக்கிக் கொண்டு அதற்காக கட்சி கட்டுவதை விட எதையும் மறுபார்வை பார்க்க ஆசை. யாருக்கும், எக்காலத்திலும் எதற்காகவும் சார்பு நிலை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் நான் எந்தக் குழாமிலும், எந்தப் பொறுப்பிலும் இல்லை. எழுத்தாளனாகி பெரிய பேர் வாங்கும் ஆசை இல்லை. புத்த்கம் போட்டு முகவாய்க்கட்டையில் பேனாவோடு, புத்தகங்களின் பின்னட்டைகளில் போஸ் பொடுக்கும் ஆசை இல்லை. கொள்கைகளை உருவாக்கி, என் பேனாவை வைத்து உலகத்தை ஒரு "பெரட்டு பெரட்டிவிட" எனக்கு ஊக்கம் ஒன்றும் இல்லை. சுத்தம் காரணமாக பல் துலக்க முற்பட்டு, அது அனிச்சை செயலாகி, தினமும் பல் விளக்கியும் , காரணம் தெரியாமல் கடனே என்று செய்வதால் நாம் ஊத்தைவாயர்களாக ஆவதைபோல, எழுத்து எனக்கு இல்லை. என் பிள்ளையை கொஞ்சுவது எனக்கு எத்த்னை உவப்பானதோ, அதைப் போலவே நான் நினைப்பதையெல்லாம் எழுதுவதும்..... எழுத்தாள, சிந்தனையாள சித்தாந்த சுழல்களுக்குள் சிக்காத, policy based என்றில்லாமல் issue based நிலை எடுக்கும் ஒரு சாதாரண, சராசரிக்கும் கீழான வாசகன். வரிக்கு வரி எனக்கு ஒப்புமை இல்லை என்றாலும் ஜப்பார் வாப்பாவின் கட்டுரையில் இருந்த நிஜம் என்னை அசைத்தது. உடனே என் உணர்ச்சி அதை இங்கே சுட்டிட செய்தது. மிஞ்சிப்போன மண், சூளைக்கு வெளியே விழுந்தால் அது சாக்கடை வண்டலோடு கலந்து நாறிப்போகவும்வாய்ப்பிருக்கிறது அல்லவா....!! எதுக்காச்சும் ஆகும் என்று அதையே கொண்டை செய்யச் சொன்ன ஒரு தாய்மனசு போல தெரிந்தது வாப்பாவின் மனசெனக்கு..."

அடடே எங்கேயோ பலமா இடிச்சு உதைக்குதே?

இப்போ பெரியார் கருத்துடன் பிராமணா எதிர்ப்பு. ஆமாம் இது எவ்வளவு நாளக்கு? யாரோ ஒரு மாமாவோ, மாமியோ உனது மனக்கதவுகளை
திறக்கும் வரையிலா? அது சரி. அது உன் மனக்கதவுகள். எப்போ திறக்கணும், மூடணும்ங்ற சுதந்திரம் உன்னுடையதல்லவா?

அப்புறம் யாரும் இணையத்துல ஓடி ஓடி எனக்கு பின்னூட்டம் 'கொடுங்கண்ணா அல்லது கொடுங்கக்கா'ன்னு கேட்கிற மாதிரி தெரியவில்லை.

இந்த மாதிரி அசிங்கமான பதிவிற்கு எனக்கு நானே மாப்பு கேட்டுக் கொள்கிறேன். எனது நண்பர்கள் கண்டிப்பாய் இப்பதிவைப் பற்றி தொலைபேசுவார்கள். பிறகு நானும்(!) இப்பதிவை நீக்கிவிடுவேன்.
மற்றபடி இப்பதிவிற்கு எதிர்வினைகளுக்கோ, பின்னூட்டங்களுக்கோ பதில் கிடையாது.

அடடே முடிவு சுவாரசியமாய் வரவில்லை...

நானும் எதற்கும் தயார்!!!

(அட காசா பணமா சொல்லித்தான் வைப்போமே ;-))

No comments: