Friday, September 10, 2004

மனித நேயம்

இவ்வாரம் திண்ணையில் வெளியான கவிதை

புழக்கடை இறுக்கமாயிருந்தது வெக்கை வெளியிலா
துணைவியின் இடை வெளியிலா
விளங்கவில்லை வெளியே வந்தேன்

மாதக்கடைசியாய் கும்மிருட்டு பயமுறுத்தியது
ஈனஸ்வரத்தில் நம்பிக்கை தெருவிளக்காய் மினுக்கியது
சேருமிடம் தெரியாமல் நடக்கும்போது
ஞானியாயுணர்ந்தேன் நம்புங்கள்

கழுதை விட்டுப்போன குட்டிச்சுவற்றில் சப்தம்
இதென்ன ஒன்று இரண்டென கதம்பக் குரல்கள்?
பொதுக்கழிப்பறை சுவாரசியத்தில்
எட்டிப் பார்க்கும் மனம் கட்டுப்படவில்லை

கார்த்திகை மாதக் களைப்பில் தாய்
குட்டிகள் முலைக்காம்புகளுடன் மோதல் நடத்தின
தெரு நாய்க்கு உணவில்லையெனில்
ஜகத்தினையழிக்க எவனாவது சபதமா பூண்டான்?

உள்ளுணர்வு உந்த ஆபத்தோவென
தாய்நாய் எழும்ப குலைப்பு மட்டும் பயமாயில்லை
கர்ப்பத்தில் ஊட்டச்சத்துணவு கிட்டவில்லை போலும்

இல்லத்தில் பழையது இரவு வைத்தால் ஊசிவிடும்
நாய்க்கிடலாமென்றால் வெக்கை மீண்டும் வெளிப்பட்டது
போன பிறவியில் புரவலனாய் நொந்திருப்பேன்

ஆந்தையாய் மாறி உலவியபின் இரவில் கோழித்தூக்கம்
புழுக்கம் மட்டும் இன்னும் இறுக்கமாய்
அன்றாட அலுவலுக்கு பலியாடாய் சிங்காரிப்பு

பழக்கமான பாதை பார்த்துச் சலித்த முகங்கள்
கேட்டு மரத்த சப்தங்களில் மொய்க்கும் ஈக்களின் சப்தசுரம்
நிமிர்ந்து பார்த்தேன் ஏதாலோ அடிபட்டிறந்த தாய்நாய்

உள்ளே புரியாத பாகமொன்று மளுக்கென்று ஒடிந்தது
பழசு போட்டிருந்தா புழக்கடையிலே தூங்கியிருக்குமோ?

புதுசாய் கண் திறந்த குட்டி முறைத்தது
வளர்ந்தபின் என்னை கட்டாயம் கடிக்கலாம்
எதிலும் அடிபட்டிறக்காமலிருந்தால்

2 comments:

Badri Seshadri said...

கவிதை நன்றாக இருக்கிறது.

பாராட்டுகள்.

திண்ணைக்கு கவிதைகள் அனுப்பும்போது ஒரு வாரத்திற்கு ஒவ்வொன்றாய் அனுப்புங்களேன்? இல்லாவிட்டால் வெளியே த்லைப்பு வராமல் "கவிதைகள்" என்று வந்துவிடும். 'மனித நேயம் என்று வெளியில் தலைப்புடன் வருவதுதான் சிறப்பானது.

Vanthiyathevan said...

Pari,

This kind of 'cruise' is nothing new. Remember Navy Ad claiming "Join Navy and see the World?" I really do not understand why this time a lot of 'hype' is given.

Lot of indigenous efforts have gone in in the recent past and India can really build 'defense systems' on its own. This is a good opportunity to 'show-off' its Naval Sterength and may try to woo middle-east to buy some of Its systems and even Ships.

If you want to know anything specific email me.

Regards,
Vanthiyathevan.