Friday, May 21, 2004

இது எனது இரண்டாவது எழுத்துப் பயணம். பிள்ளையார் சுழி போடுவது போல் நல்லவர்களைப் பற்றி நாலு வார்த்தைகளை கூறி தொடங்குகிறேன் பயணத்தை !!!

மு.ராசுக்குமார்

அழகப்பா மாதிரி மேனிலைப் பள்ளியில் பயிலும்போது இருவருக்கும் பொதுவான தமிழ் ஆசான் அழகப்பத் தமிழன். கையெழுத்துப் பிரதியை கற்று தந்த ஆசான்.

எட்டாம் வகுப்பிலிருந்து ராசு என் இனிய எதிரி. இவனது "இன்னொரு தேசியகீதம்" கவிதைதான் என்னை எழுதத் தூண்டியது. ராசுவைப் போல் முடியுமாவென வினாவுமெழுப்பியது. முதல் எழுத்துப் பயணத்தில் ஏகலைவனைப் போல் நான் ஏங்கிய காலம் பல. எங்களின் வருடாந்திர பள்ளி/கல்லூரி வாழ்க்கையின் கலைப் போட்டிக் கதையை "உள்ளே வெளியே" பார்த்தால் இன்னொரு "இருவர்" படம் விரியும்.

இவனை இப்போது நான் சபிப்பது எல்லாம் "எழுத்துச் சோம்பல் மரிக்கக் கடவதாக..."

ப. சுந்தர்ராசன்

கல்லூரி வாழ்க்கையில் செல்லமாய் சுள்ளான். எழுத்தில் இவனது பரிணாம வளர்ச்சி என்னை பிரமிப்பு ஊட்டுகிறது. செயலிகளை எனக்கு அறிமுகமாக்கி, இன்னொருமொருறை வலம் வர வைத்த "சாமி".

நான் என்றுமே ஏகலைவன்தானா? எனது இரண்டாவது எழுத்துப் பயணத்தின் மூலகர்த்தாவே... வந்தது கோபம்...பிடி சாபம்... "உனது கணிணி விரல்களின் களியாட்டம் என்றும் தொடரட்டும்"

பி.எம்.சுரேஷ் பாபு (இந்தப் புனிதனுக்காக நான் எந்த எல்லைக் கோடுகளும் தாண்டுவேன். தூய தமிழ்க் கொலை உட்பட...)

வாழ்க்கையை வாழ கற்றுத் தந்தவன் (நச்சென்று நாலே வார்த்தை. வேலி தாண்டாமல்...வித்தியாசமாய்...)

பயணம் தொடரும்....

No comments: