எங்கள் அண்ணா (55 வார்த்தை சிறுகதை)
"அண்ணே என்ன இருந்தாலும் எதிர்க்கட்சி இப்படி பேசக்கூடாதண்ணே..."
"பேசாம விடுடா...நடப்பது எல்லாம் நன்மைக்கேன்னு எடுத்துக்கோ"
என்னால் அப்படி எடுத்துக்கொள்ள முடியவில்லை. ஏழைகளின் வயிற்றிலடிக்கும் கந்துவட்டிகாரருக்கு சாவுமணிச் சட்டம், லாட்டரி ஒழிப்பு, கள்ளச்சாராயம் அழிப்பு, போதைப் பாக்குக்கு பொடா, பொதுவிடத்தில் புகைக்கு தடா இன்னும் பல சாதனைகள் என் அண்ணாச்சிக்காக எடுத்துவிட முடியும். ஊரை அடித்து உலையில் போடும் உலகில் இப்படியும் ஒரு மந்திரியா? வயிறெரிந்தது.
"எப்படியெண்ணே உங்களாள முடிஞ்சது???"
"பேரம் படியலடா"
எனக்கு மறுபடியும் வயிறெரிந்தது.
Tuesday, May 25, 2004
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
வந்தியத்தேவன், 55 வார்த்தைகளில் சிறுகதை ஒரு சவால்தான். நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள்.
சுஜாதாவின் சின்னஞ்சிறுகதைகள் என்றா தொகுப்பில் 55 பிக்ஷன் பற்றி நிறையவே சொல்லியிருந்தார். அதன் பாதிப்பில் சில கதைகள் எழுதினேன். அதில் 4 ஐ வலையேற்றியுள்ளேன். நேரம் இருப்பின் பார்க்கவும்.
Post a Comment